ரகசிய சிநேகிதம்

செல்வகுமார் முகநூலில் எழுதியிருப்பது:

சாரு, அபிலாஷின் ஜெயமோகன் கட்டுரையை படித்தபோது நீங்கள் எழுதிய கருத்தே எனக்கும் தோன்றியது. ஒரு எழுத்தாளனை வாசகனாக நெருங்கும்போது அபிலாஷ் எவ்வளவு இனிமையாக மாறிவிடுகிறார். கதை, கட்டுரை என்று எழுதும்போது மட்டும் துருபிடித்த பிளேடால் வாசகனை பிராண்டி விடுகிறார்.

வேடிக்கைக்காக நீங்கள் யாரிடமும் பேசுவதில்லை என்று சொல்கிறீர்கள். உண்மையில் உங்கள் பழைய சாருஆன்லைன் கடிதங்களில் இருந்தும், எழுத்தில் வெளிப்படும் கச்சிதம் + கண்டிப்புத் தன்மையால் உங்களை நெருங்க, எழுத முயற்சிக்கும் எழுத்தாளர்கள் வருவதில்லை. அல்லது நீங்கள் வெளிப்படையாக உண்மையை பேசுவதால் கூட.

ஒரு எழுத்தாளர் உங்கள் முகத்துக்கு நேரே, “சாரு, உங்களை மிகவும் மதிக்கிறேன். ஆனால் உங்களுடன் பழகுகிறேன் என்று வெளியில் தெரிந்தால் என் வளர்ச்சி பாதிக்கப்படும்” என்று சொன்னதை கேட்டேன். அதிர்ச்சியாக இருந்தது. நீங்கள் அந்த சமயத்தில் அதை பொருட்படுத்தவில்லை. எப்போதுமே இப்படிப்பட்ட பேத்தல்களை நீங்கள் பொருட்படுத்துவதில்லை.

ஆனால், அந்த எழுத்தாளர் இந்த சமூகத்துக்கு எந்தளவு வெளிப்படையாக எழுத முயற்சிப்பார் என்று யோசித்தேன். அவர் மீது எந்த மதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், ‘இருண்ட பக்கங்க’ளை எழுதுவதில் ஆர்வமானவர். யாருடைய இருண்ட பக்கங்களை? இதென்ன வேஷம் என்றுதான் தோன்றியது.

அராத்து உங்களைப்பற்றி எழுதிய இரண்டு பதிவுகள் அருமையானவை. அபிலாஷ் தன் ஆசான் குறித்தும் அந்தளவு மனம் திறந்து எழுத முயற்சிக்கிறார் என்பது உண்மையில் மகிழவேண்டிய தருணம்தான்

http://charuonline.com/blog/?p=2473

Schau hier aufsaetze-schreiben.de

Comments are closed.