Thanks Charu,
At least you tried to answer my question.
Past 24 hours, this question keeps running in my mind.
In social media, Kalam is compared to Gandhi, sometime to Vivekananda. Even some people see him as Martin Luther King. But outside India (I am not sure outside India or outside Tamil Nadu), Kalam is seen as just ex minister or director. Example, BBC and in US media. I am in US. My question is why such a disconnect.
Your answer clearly explains once one side of the answer, that is : Kalam is seen as hero/role model by money loving or fame loving youngsters.
Do you see any other dimension?
Thanks again.
Ram
டியர் ராம்,
கலாம் பற்றி எழுதத் துவங்கிய போதே சற்று பயந்து கொண்டுதான் ஆரம்பித்தேன். தெருவில் போகும் போது தாக்கப்பட்டால் என்ன செய்வது என்பதுதான் பயத்துக்குக் காரணம். இப்போதைய உடல்நிலையில் ஒரே ஒரு அடி போதும் என் உயிர் போக. காரணம், ஏதேனும் மன அதிர்ச்சி ஏற்பட்டால் உடனடியாக நெஞ்சு வலிக்கிறது. அதன் காரணமாகவே உணர்ச்சிவசப்படுவதோ கத்துவதோ கோபப்படுவதோ கிடையாது. கலாமை விமர்சனம் செய்து உயிரை விட வேண்டுமா என்று கொஞ்ச நேரம் பயந்து விட்டு, அடப் போடா, அப்படி உயிர் போனா போகுது என்று துணிந்தே எழுதினேன். பொதுப் புத்திக்கு எதிராக எழுதுவது அவ்வளவு கடினமாக இருக்கிறது இங்கே. ஒன்றுமில்லை, நண்பர் கருந்தேள் ராஜேஷ் ஜெயமோகனின் புகைப்படத்தில் கொஞ்சம் மீசை வைத்து அனுப்பியிருந்தார். அது என் வாசகர் வட்டத்தில் உள்ள டேய் மனோ என்பவரைப் போலவே இருந்ததால் ஒரு ஜாலிக்காக அதை சாருஆன்லைனில் போட்டேன். உடனே ஜெயமோகனின் ரசிகர்கள் டேய் தேவடியாப்பையா அது இது என்று திட்டி எனக்கு எக்கச்சக்கமான கடிதங்களை அனுப்பினர். எனக்கு நன்றாகத் தெரியும், அந்த மூடர்களில் ஒருத்தன் கூட ஜெயமோகனை ஒழுங்காகப் படித்தவன் இல்லை என்று. ஒரு எழுத்தாளனைப் படித்தால் இன்னொரு எழுத்தாளனை ங்கோத்தா ங்கொம்மா என்றா திட்டத் தோன்றும்? ஆனால் அது எனக்கு ஒரு மிகப் பெரிய விஷயத்தைக் கற்பித்தது. தமிழர்கள் அனைவருக்கும் ஒரு வழிபாட்டு பிம்பம் தேவை. சிலருக்கு ஜெயலலிதா, சிலருக்குக் கருணாநிதி, சிலருக்கு ரஜினி, சிலருக்குக் கமல், சிலருக்கு ஜெயமோகன். என் வாசகர்கள் இது பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. அவர்களெல்லாம் ஹிப்பிகளைப் போன்ற மனம் கொண்டவர்கள். அதைத்தான் என் எழுத்தின் பலம் என்று நான் கருதுகிறேன். ஒருவேளை நான் நினைப்பது தவறோ என்னவோ.
ஜெயமோகனை கேரிகேச்சர் செய்ததற்கே இந்த ஓத்தான் பாட்டு என்றால் கலாம்? ஒட்டு மொத்த இந்தியர்களின் வழிபாட்டு பிம்பம். அதிலும் தமிழர்கள் கொண்டாடும் தெய்வப் பிறவி. அவரைப் பற்றி விமர்சித்தால் உயிரோடு விடுவார்களா என்று அஞ்சினேன். பிறகு ஜெயகாந்தனை நினைத்தே எழுதினேன். அண்ணாதுரை இறந்த போது ஜெயகாந்தன் என்ன பேசினார் என்று நினைத்தேன். உடனே எழுத ஆரம்பித்தேன். இன்று காலை கூட ஒருத்தர் என்னை வீட்டுக்கு வந்து உதைக்கப் போவதாக அஞ்சல் செய்திருக்கிறார்.
போகட்டும். எனக்கு அடி வாங்க பயம் உண்டே தவிர அதற்காகக் கருத்தைச் சொல்ல அஞ்ச மாட்டேன். அடிகளை வாங்கிக் கொண்டே கலாம் மந்திரிகளிடமும் எம்.பி.க்களிடமும் திருக்குறள் கேட்ட கதையை சொல்லத்தான் செய்வேன். கலாம் நம் தமிழ்நாட்டு எம்.பி.க்களிடமும் தமிழ்நாட்டு மத்திய மந்திரிகளிடமும் திருக்குறள் சொல்லச் சொல்லி டார்ச்சர் செய்த கதையை எழுதியிருக்கிறேன், படித்தீர்களா? தெறித்து ஓடினார்கள் அவர்கள். என் கண்ணால் பார்த்தது அது. ஒவ்வொரு முறை ஜனாதிபதி மாளிகைக்குப் போகும் போதும் ஒவ்வொரு குறள் மனப்பாடமாகச் சொல்ல வேண்டும். எதார்த்தத்துக்கும் வாழ்க்கைக்கும் எவ்வளவு அந்நியமாக இருந்தார் திரு கலாம் என்பதற்கு அந்தத் திருக்குறள் சம்பவங்கள் ஒரு சிறிய உதாரணம்.
தாஸ்தயேவ்ஸ்கி எழுதிய அழையா விருந்தாளி என்ற குறுநாவலைப் படித்துப் பாருங்கள். அதில் வரும் அதிகாரி வேறு யாரும் அல்ல. நம் கலாம் அவர்கள்தான்.
கலாமை இந்தியாவே கொண்டாடுவதன் இன்னொரு முக்கிய காரணம், அவர் தன்னை பெரும்பான்மை இந்து அடையாளத்துடன் இணைத்துக் கொண்டார். முதலிலேயே சொல்லி விடுகிறேன், எனக்கு மதங்களைப் பிடிக்காது. எனக்கும் எந்த மத அடையாளமும் இல்லை என்றே நினைப்பவன் நான். அதே சமயம், உலகிலேயே சகிப்புத்தன்மை அதிகம் உள்ள மதம் இந்து மதம் என்பதையும் தைரியமாகச் சொல்லக் கூடியவன் நான். நாத்திகத்தையே தன்னுடைய ஒரு பிரிவாக அங்கீகரித்துக் கொண்ட மதம் இந்து மதம். ஆனால் மத அடையாளங்களின் அரசியலைப் பேசும் போது இதெல்லாம் எதற்கு? கலாம் சைவ உணவு உண்பவர். இந்தியா முழுவதும் அவர் ஒரு வழிபாட்டுக் குறியீடாக மாறுவதற்கு இது ஒன்றே போதும். ஒருவர் சைவ உணவு உண்பது அவருடைய தனிப்பட்ட, அந்தரங்கத் தேர்வு. ஆனால் கலாம் தன்னுடைய பெயரைத் தவிர மற்ற எல்லாவற்றிலுமே தன்னுடைய இஸ்லாமிய அடையாளத்தை ஒதுக்கி வைத்தவர். அவருடைய இல்லத்தின் புகைப்படம் ஒன்று 15 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது; இன்னமும் என் நினைவில் ஓவியமாகத் தங்கியிருக்கிறது. ஒரு பெரிய, விசாலமான அறை. அதில் வேறு எந்தப் பொருளும் இல்லை, ஒரே ஒரு வீணையைத் தவிர. இந்தப் புகைப்படம் எதன் அடையாளம்? அவர் தனக்குப் பிடித்த உணவு ஆப்பம், பாயா என்றோ, மட்டன் பிரியாணி என்றோ ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இப்போதைய வழிபாட்டு பிம்பம் அவருக்குக் கிடைத்திருக்காது. அவர் தன் வாழ்நாள் முழுக்கவும் பிராமண அடையாளங்களை மட்டுமே கொண்டிருந்தார். இதுதான் கலாம் இந்தியாவின் வழிபாட்டு பிம்பமாக மாறியதன் முக்கியமான காரணம். அவர் தாடியும் குல்லாவும் அணிந்திருந்தால் அவருக்கு இப்போது கிடைத்திருக்கும் அந்தஸ்து கிடைத்திருக்காது என்பது திண்ணம். அப்படி அணிந்திருந்தால் அதில் என்ன தவறு இருக்க முடியும்? சுப்ரமணியம் சுவாமி வேஷ்டி சட்டையோடு தானே தோற்றமளிக்கிறார்? ஆக, கலாம் தன் மத அடையாளத்தைத் துறந்து இந்து/பிராமண அடையாளத்தை ஏற்றதாலேயே ஏற்றம் பெற்றார்.
இன்னொரு முக்கிய காரணம், சராசரித் தன்மை (mediocrity). காமன்மேன்களுக்குத் தங்களுக்கேற்ற ஒரு காமன்மேன் தலைவனாகத் தேவை. காமன்மேன் காமன்மேனாக இருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்களின் தலைவரும் காமன்மேனாக இருந்ததில் தான் பிரச்சினை. அவர்களுக்குத் தெரிந்த கவிஞர் வைரமுத்து. அவர்களுக்குத் தெரிந்த சிந்தனையாளர் நடிகர் விவேக். அவர்களுக்குத் தெரிந்த சிந்தனாபூர்வமான பேச்சு, மெழுகுவர்த்தி – கிறித்தவம்; குத்துவிளக்கு – இந்து; நான் – முஸ்லீம்; மத நல்லிணக்கத்தின் அடையாளம். இந்தப் பேச்சைத்தானே நாம் நம்முடைய பல்கலைக்கழக விழாக்களிலும், இலக்கிய விழாக்களிலும், பட்டிமன்ற மேடைகளிலும் நாள் தோறும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்? அதையே கலாமும் பேசினார். ஆக, காமன்மேனுக்கு அவர் ஒரு நம்பிக்கை தீபம். நாம் ஒன்றும் காமன்மேன் அல்ல; ஒரு விஞ்ஞானியே நம்மைப் போல் தான் பேசுகிறார்; ஒரு மேதையே நம்மைப் போல் பேசுகிறார் என்ற பொய்யான நம்பிக்கையை கலாம் 120 கோடி இந்தியக் காமன்மேன்களுக்கு அளித்தார். அதனால்தான் அவரை இப்படிக் கொண்டாடுகிறார்கள்.
அன்புடன்,
சாரு