வெகுஜன உளவியலும் ஃபாஸிஸமும்: ஏவுகணை நாயகன்

கலாம் பற்றிச் சொல்ல இன்னும் அதிகம் இருக்கிறது.  முகநூல் அறிவாளிகளிடம் அதை முன்வைப்பதை விட ஒரு பத்திரிகையிலேயே விரிவாக எழுதலாம் என்று நினைத்தேன்.  இந்தக் கட்டுரைக்கு வித்திட்டது இன்று காலையில் என்னோடு உரையாடிய இரண்டு ஆட்டோக்காரர்கள்.  ஒரு ஆட்டோக்காரர், ”கலாம் சாருக்கு மெரீனா பீச்சில் சிலை வைக்க வேண்டும் .  ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி கவர்னரிடம் கொடுத்தால் சிலை வைப்பலாங்களா சார்?” என்று கேட்டார்.  “நானும் அதையே தான் நினைத்தேன்.  நீங்கள் சொல்லி விட்டீர்கள்.  அவசியம் அவருக்கு வைக்க வேண்டும்.  ஒரு லட்சம் கையெழுத்து இருந்தால் போதும்.  அவருக்கு வைக்காமல் வேறு யாருக்கு வைப்பது?” என்று உணர்ச்சிகரமான தொனியில் பதில் சொன்னேன்.  (எவ்வளவு சிவாஜி படம் பார்த்திருக்கிறோம்?) உடனே அவர் ஒரு சக தோழன் கிடைத்து விட்ட சந்தோஷத்துடன், “ஆமா சார்.  நம்ம நாட்டுக்காக ஏவுகணை விட்டவராச்சே…  அவருக்கு ஒரு சிலை வைக்கணும்” என்றார்.  அப்போதுதான் எனக்கு இந்தக் கட்டுரைக்கான பொறி கிடைத்தது.  அந்த சந்தோஷத்தில் இது பற்றிப் பத்திரிகையில் எழுதுகிறேன் என்று அவருக்கு வாக்குக் கொடுத்தேன்.  அதன்படி உயிர்மையில் இது பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்.  ஒரு மாதம் காத்திருங்கள்.

நாளை வரப் போகும் உயிர்மையில் பாபநாசம் படத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன்.