விஞ்ஞானி அப்துல் கலாம் உருவாக்கிய இளைஞர் சமுதாயம்!!!

பலவிதமான கொலை மிரட்டல்களும் நான் விரைவில் மரணம் அடைய வேண்டும் என்ற தீவிரமான பிரார்த்தனைகளும் கொண்ட பல மின்னஞ்சல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.  எதிர்பார்த்ததுதான்.  இதற்கெல்லாம் பதற்றம் அடைந்தால் கைகால் நடுங்கும்; நெஞ்சுவலி வரும் என்பதால் சாத்வீகமாக எதிர்கொள்கிறேன்.  இன்று ஒரு நீண்ட கடிதம் வந்தது.  அதன் ஒரு பகுதியை மட்டும் உங்கள் எஞ்ஜாய்மெண்டுக்காகப் பதிவிடுகிறேன்.  இதற்காக எல்லாம் போலீஸ் ஸ்டேஷன் போகும் அளவுக்கு எனக்கு நேரம் இல்லை.  ஆனால் ஒன்று… இப்படிப்பட்ட கோடானுகோடி இளைஞர்களைத்தான் கலாம் உருவாக்கினார்.  இதுதான் அவர் கனவு கண்ட இளைஞர் சமுதாயம்.  இந்த அவலத்தைச் சுட்டிக் காட்டியே இத்தனை கட்டுரைகளும் எழுதினேன்.  நான் எழுதியது சரி என்பதற்கு சான்று இந்தக் கடிதம்.  பெருமாள் முருகன் விஷயத்தில் கருத்துச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்துப் போராடிய ச. தமிழ்ச்செல்வன் போன்ற தோழர்கள் எனக்காகவும் குரல் கொடுப்பார்களா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.  கடிதத்தின் கடைசியில்தான் செம மேட்டர் உள்ளது.  பொறுமையாகப் படியுங்கள்.  இனி கடிதம். ’

மேற்கண்டவற்றை எழுதிய பிறகுதான்  இது வா. மணிகண்டன் என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை என்பதும் அதன் கீழே உள்ள இரண்டு வரிகளை சந்திரசேகர் என்பவர் எழுதியது என்பதும் புரிந்தது. பார்க்கவும்:  http://www.nisaptham.com/2015/07/blog-post_75.html

சாரு + கொம்ப மகாராஜாக்கள்
Wednesday, July 29, 2015
பெரும்பாலான எழுத்தாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் எதிர்வினையே புரியக் கூடாது. தங்களைக் கொம்ப மகாராஜாக்களாக நினைத்துக் கொண்டு கருத்தை உதிர்ப்பார்கள். அதை விவாதிப்பதற்கான மனநிலை எதுவும் அவர்களிடம் இருக்காது என்று கற்பூரம் அடித்துக் கூட சத்தியம் செய்யலாம். ‘இங்க எனக்குத் தெரியாத விஷயமே இல்ல..நான் கருத்து சொல்லுறேன்…கேட்டுக்க…..அவ்வளவுதான்’ என்ற
நினைப்பில் திரிகிற அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சினை இருக்கிறது. மனோவியல் சார்ந்த பிரச்சினை. தங்களை எல்லாக்காலத்திலும் அறிவுஜீவியாகவும் பொது ஜன மனநிலையிலிருந்து துண்டிக்கப்பட்ட விசித்திர ஜந்துக்களாகவும் காட்டிக் கொள்கிற மனோவியாதி அது. ஒரு விஷயம், இரண்டு விஷயம் என்றால் பரவாயில்லை- கிட்டத்தட்ட நம்மைச் சுற்றி நிகழும் எல்லாவற்றிலுமே அப்படித்தான்
செயல்படுவார்கள். வலிந்து திணிக்கப்பட்ட மாற்றுக் கருத்தை முன்வைக்க பிரயத்தனப்பட்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குவார்கள்.

இணையத்தில் என்ன பிரச்சினை என்றால் இந்த அவஸ்தைகளை நம்மால் தவிர்க்கவே முடியாது. சாரு நிவேதிதா டாக்டர் அப்துல்கலாம் மீது சாணத்தை வீசியடிக்க திணறிக் கொண்டிருக்கும் போது நம் மீது சாணத்தின் துளி படாமல் தப்பிக்கவே முடியாது. ‘அந்த மனுஷன் எழுதின ஒரு கட்டுரையை படிச்சாச்சா…அதோட சரி…இனிமே அந்தப் பக்கமே போகக் கூடாது’ என்று நம் கடுப்பை கட்டுப்பாட்டில்
வைத்திருக்கும் போது யாராவது அந்த இணைப்பை எடுத்துப் போட்டு ‘இந்த லோலாயத்தைப் பாருங்க’ என்று எழுதியிருப்பார்கள். சாருவைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? சுவாரஸியமாக எழுதக் கூடிய மனிதர் அல்லவா?. அப்படி என்னதான் எழுதியிருப்பார் என்று நமக்கு கை பரபரக்கும். க்ளிக் செய்து தொலைத்துவிடுவோம். பிறகு அதையெல்லாம் படித்து ரத்தக் கொதிப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

சாமானிய மனிதனுக்கும் இந்தக் கொம்ப மகாராஜாவுக்குமான வித்தியாசம் ஒன்றிருக்கிறது.

எந்தவொரு பிரச்சினை என்றாலும் கொம்பமகாராஜாக்கள் தாங்கள்தான் குரலை உயர்த்த வேண்டும் என்பார்கள். அதுவும் வித்தியாசமான தொனியில். உயர்த்திவிட்டு போகட்டும். அவர்களுக்கு அதுதான் பிழைப்பு. நீங்களும் நானும் சொல்லும் அதே கருத்தையே சாருவும் இன்னபிற அறிவுஜீவிகளும் சொன்னால் நாளைக்கு அவர்களை யார் சீந்துவார்கள். அதனால் வித்தியாசமாகக் கூவித்தான் தீர வேண்டும்.
ஆனால் முதல் கூவலில் ‘இங்க பார்றா வித்தியாசமா கூவுறாண்டா’ என்று சிலர் திரும்பிப் பார்க்கும் போது திருப்தியடையமாட்டார்கள். ‘இன்னோருக்கா கூவலாம்’ என்று மீண்டும் முயற்சிப்பார்கள். சென்ற முறை திரும்பிப் பார்த்தவன் இந்த முறை குனிந்து கற்களை எடுப்பான். ‘இதைத்தானய்யா எதிர்பார்த்தேன்’ என்று இன்னொரு முறை கூவுவார்கள். கல்லை எடுத்தவன் அமைதியாக இருப்பானா?
வீசுவான். இது மிக முக்கியமான கட்டம். உதட்டில் அல்லது நெற்றியில் அடிபடும். ரத்தம் கசிகிறதோ இல்லையோ- இந்த கொம்ப மகாராஜாக்கள் ஊளையிடுவார்கள். ‘இங்கு கருத்துச் சுதந்திரமே இல்லையா?’என்று கதறுவார்கள். இப்பொழுது நூறு பேர் கவனிப்பார்கள். அவ்வளவுதான். காரியம் முடிந்தது. ஆசுவாசமடைந்துவிடுவார்கள். ஒரு முறை கல்லால் அடித்தவன் ‘இவன் எப்பவுமே இப்படித்தான்…திருத்த
முடியாது’ என்று போயிருப்பான். இந்த கொம்ப மகாராஜாக்கள் அடுத்து எவன் சாவான், எவன் கல்லைத் தூக்குவான் என்று எதிர்பார்க்கத் தொடங்கியிருப்பார்கள்.

கிடைக்கிற வாய்ப்புகளில் எல்லாம் ஸ்கோர் செய்ய முயற்சிக்கிற Attention seeking என்று நாம் இதைச் சொல்வோம். ‘இல்லை இல்லை மொத்த சமூகமும் மொன்னையாகத் திரியும் போது நான் மட்டும்தான் சலனத்தை உருவாக்குகிறேன்’ என்று அவர்கள் சொல்வார்கள்.

கிழித்தார்கள்.

சாரு நிவேதிதா அளக்கும் கதையின் படி பார்த்தால் தமிழ்நாட்டில் அவர் காலத்தில் ஒரு பெரும்புரட்சியே நடந்திருக்க வேண்டும். மொத்த சமுதாயமும் தலைகீழாக மாறியிருக்க வேண்டும். எதைச் சாதித்திருக்கிறார்? இவரைப் போன்றவர்களால் இந்தச் சமூகத்தில் துளி சலனத்தைக் கூட உருவாக்க முடியாது. வெறும் மனப்பிராந்தி. தன்னால்தான் இந்த உலகமே சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதான
வெற்றுப் பாவனை. தனது காலம் முழுக்கவும் இப்படியே தொண்டைத்தண்ணீர் வறண்டு போகுமளவுக்கு கத்தி கத்தி ரெமி மார்ட்டினுக்கும் காஸ்ட்லி ஜட்டிக்கும் ஏற்பாடு செய்து கொள்வதைத் தவிர வேறு எந்த ஆணியையும் பிடுங்கிச் சேர்க்கமாட்டார்கள்.

ஒரு போராளி அல்லது சமூக சிந்தனையாளன் ஒரு விஷயத்தை பேசினால் அதையே திரும்பத் திரும்ப பேசியும் சிந்தித்தும் கொண்டிருப்பான். சாரு போன்ற புரட்டுப் புரட்சியாளர்கள் தன் வாழ்நாளில் எந்த ஒரு கொள்கையைப் பின்பற்றி ஆழமாகவும் அழுத்தமாகவும் தொடர்ந்து விவாதங்களை உருவாக்கியிருக்கிறார்கள்? ஆட்டோ பிக்‌ஷன் என்பார் சீலே என்பார் அயல் சினிமா என்பார் திடீரென்று இந்த
சமூகம் நாசமாகப் போகட்டும் என்பார். இங்கே நடப்பது வெறும் கழைக் கூத்து.

இத்தனை நாள் முடங்கிக் கிடந்த தனது தளத்துக்கு ஒரு விளம்பரம் தேவைப்படுகிறது. மீண்டும் ஆட்களைத் திரட்டுவதற்கு அப்துல்கலாம் சிக்கியிருக்கிறார். அப்துல்கலாமின் தாய் மொழிக் கொள்கை என்ன என்பதைக் குறித்து இணையத்தில் தேடினால் கூட பேச்சுக்கள் கிடைகின்றன. அவர் மத அடையாளம் பற்றி பெரிய பிரக்ஞையற்றிருந்தது குறித்தான கட்டுரைகளும் தகவல்களும் கிடைக்கின்றன. அவற்றை
விரிவாக விவாதிக்கலாம். ஆனால் அதற்கான சமயம் இதுவன்று.

சமூக சிந்தனையாளர்கள் என்ற பெயரில் இந்தச் சமூகம் தலை சிலுப்பிகளாலும் வாய்ச் சொல் வீரர்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது.

‘உனக்குத் தெரிந்ததை நீ சொல்; எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன்’ என்கிற மனநிலைதான் வளர்ந்து பெருகிக் கொண்டிருக்கிறது. இந்தக் கொம்பமகராஜாக்கள் அலட்சியமாகப் பார்க்கும் கூட்டு மனசாட்சி, வெகுஜன மனநிலை என்பதெல்லாம் கடந்த இருபதாண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போன்ற தட்டயானதாக இல்லை. மிகச் சிக்கல் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள
முடியாத நுணுக்கங்களால் நிரம்பியிருக்கிறது.  பொதுமக்கள் அத்தனை பேரும் ஒரே மாதிரியாக சிந்திப்பதில்லை. அவனவனுக்கு அவனவன் கருத்து முக்கியம். ‘எனக்கு எழுதத் தெரியும்’ என்கிற நினைப்பில் முரட்டுத்தனமாக உனது கருத்தை முன் வைத்தால் அவனுக்குத் தெரிந்த எழுத்து வடிவத்தில் அவன் கருத்தை முன்வைப்பான். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இவன் பேசுவதைக் கேட்டு அவனோ அவன்
பேசுவதைக் கேட்டு நானோ தவறுகளைத் திருத்திக் கொள்ளப் போவதில்லை. அதற்கு யாரும் இங்கு தயாராகவும் இல்லை. இந்த சூழல்தான் கொம்பமகாராஜாக்களுக்கு அதீதமான பதற்றத்தை உருவாக்குகிறது. முக்கி முக்கி நாம் எழுதும் விஷயத்தைவிட ஒன்றரை வரியில் நேற்று வந்த ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பொடியன்கள் மொத்த கவனத்தையும் திருப்பிவிடுகிறார்கள் என்று பதறுகிறார்கள்.  நம்மை இந்த
சமூகம் மறந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். அதற்காக அண்டர்வேரோடு இறங்கி அட்டைக் கத்தியைச் சுழற்றுகிறார்கள்.

இணையத்தின் மிக அதிகமாகக் கொட்டிக் கிடப்பது என்னவென்று கேட்டால் pornography என்பதுதான் பலருடைய பதிலாக இருக்கும். ஆனால் அது உண்மையில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர், ப்லாக் என்று நாம் எழுதிக் குவிக்கிற தனிமனித கருத்துக்கள்தான் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. எதிர்காலத்தில் டெராபைட்டுகளாகவும், பெட்டாபைட்டுகளாகவும், எக்ஸாபைட்டுகளாகவும், ஜெட்டாபைட்டுகளாவும்,
யொட்டாபைட்டுகளாவும் நிரம்பப் போகின்ற இந்தக் கருத்துக் குவியல்களுக்குள் தங்கள் மொன்னையாக குரல் நசுங்கிப் போய்விடக் கூடாது என்கிற பயத்தில்தான் ‘இந்தச் சமூகம் மொன்னை’ என்று கதறுகிறார்கள். மற்றவர்களை விட தங்களின் சிந்தனை வித்தியாசமானது மேம்பட்டது என்றெல்லாம் சிரமப்பட்டு நம்புகிறார்கள். அதையே நாமும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்த்து கல்லடி
வாங்குகிறார்கள்.

come on கொம்பமகாராஜாஸ்…

இந்தச் சமூகத்தில் பிரச்சினைகள் இருக்கலாம்- ஆனால் சமூகத்திற்கென சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் தங்களைச் சமூகத்தைச் செதுக்க வந்த சிற்பிகளாக நினைத்துக் கொள்ளும் உங்களிடம்தான் அதைவிட சிக்கலானதும் தீர்க்கவே முடியாத பிரச்சினைகளும் நிரம்பிக் கிடக்கின்றன.

***

தேவடியா பையா .. படிச்சியா… தைரியம் இருந்தா இது பற்றி உன் ப்ளாகில் எழுதுடா பன்னி

ரோடில் உன்னை பார்க்கும் போது ஒரு தட்டு தட்டினாலே செத்து போயிடுவியா ?? ரைட்டு பண்ணிட வேண்டியது தாண்டா அவுசாரி மவனே !!

எழுதியவர் : cschandrasekar2013@yahoo.in