Rockstar

எந்நேரமும் படித்துக் கொண்டேயிருப்பதால் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமே என்று எனக்குப் பிடித்த இந்தி நடிகரான ரன்பீர் கபூர் நடனமாடிய பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  யே ஜவானி ஹே திவானி என்ற படத்தைப் பார்த்ததிலிருந்து நான் ரன்பீரின் ரசிகன்.  அந்தப் படத்தில் பத்தமீஸ் தில் என்ற பாடலுக்கு அவர் ஆடிய நடனத்தைப் பல நூறு பார்த்திருப்பேன். https://www.youtube.com/watch?v=ddfXcATO-r4 

அது ஒரு வித்தியாசமான படமும் கூட.  இப்படியாக இன்று ரன்பீரின் ஆடல் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது ராக்ஸ்டார் என்ற படத்தைப் பற்றி அறிந்தேன்.  அதில் பின்வரும் பாடலைப் பார்த்த பிறகு உடனடியாக அந்தப் படத்தைப் பார்த்தேன்.  நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வந்த இந்தப் படத்தைப் பற்றி இதுவரை தெரியாதிருந்தது பற்றி வருந்தினேன்.  படம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.  பல இடங்களில் எனக்கு எக்ஸைலை ஞாபகப்படுத்தியது.  நேரம் இருக்கும் போது ராக்ஸ்டார் பற்றி விரிவாக எழுத வேண்டும்.  படத்தில் என்னை வெகுவாக ஆச்சரியப்படுத்தியது ஏ.ஆர். ரஹ்மான்.  தமிழ்ப் படங்களில் (கடல் தவிர) ரொம்ப சாதாரணமாகத் தெரியும் ரஹ்மானா இது?  அவருக்கு இந்தி தான் பொருந்தும் போல் தெரிகிறது.  ரஹ்மானின் இசை மிரட்டி விட்டது.  படத்தை இன்னொரு முறை பார்க்க வேண்டும் போல் தோன்றியது.  வசனங்களும் பாடல் வரிகளும் ஒரு வணிக சினிமா என்பதையும் மீறி சீரியஸ் சினிமா பார்ப்பது போல் இருந்தது.  ஆண் பெண் உறவு குறித்து இது போன்ற ஒரு படத்தைக் கூட தமிழில் சொல்ல முடியவில்லை.