எதற்காக எழுதுகிறேன்?

எனக்கே எனக்காக எழுதுவதைப் பற்றி என்ன சொல்ல முடியும்?  விஸ்தாரமாகச் சொல்ல என்ன இருக்கிறது?  எனக்கே எனக்காக எழுத வேண்டும் போலிருக்கிறது.  எழுதுகிறேன்.  அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது.  காதல் செய்கிற இன்பம் அதில் இருக்கிறது.  காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப் போதல், வேதனை – எல்லாம் அதில் இருக்கின்றன.  இன்னும் உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் பிறர் மனைவியைக் காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு – எல்லாம் அதில் இருக்கின்றன.  கண்ய நஷ்டம், பாபம் பாபம் என்று மூலையில் முடங்கியவாறே கையாலாகாமல் முணுமுணுக்கிற மனசாட்சி, சந்தி சிரிப்பு, சந்தேகக் கண்கள் – இத்தனையையும் பொருட்படுத்தாமல் முன்னேறுகிற பிடிவாதம், வெறி, அதாவது ஆனந்தம் – எல்லாம் அதில் இருக்கின்றன.  உங்களுக்காக எழுதும் பொழுதோ மனைவியைக் காதலிக்கிற நல்லபிள்ளைத் தனமும் நிர்ப்பந்தமும்தான் கண்ணுக்குத் தெரிகின்றன.

– இதைச் சொன்னவர் யார் என்று தெரிகிறதா?  யூகியுங்கள்.  நாளை சொல்கிறேன்.