படித்ததில் பிடித்தது…

தி இந்துவில் வெளிவரும் நடுப்பக்கக் கட்டுரைகளைத் தவறாமல் படித்து வருகிறேன்.  புனைகதைகள் தவிர தமிழில் நான் படிக்கும் கனமான விஷயம் இந்து கட்டுரைகள்தான்.  மற்றபடி வணிக நோக்குடன் நடத்தப்படும் வார இதழ்களைப் படிக்க நேரம் இல்லை.   இரண்டு தினங்கள் முன்பு இந்துவில் வந்த அரவிந்தனின் கட்டுரை முக்கியமானது.  இன்றைய தினம் வெளிவந்துள்ள சமஸின் கட்டுரை மிக மிக முக்கியமானது.  நான் மாடுகளை தெய்வமாகத் தொழுபவன்.  ஒவ்வொரு பசுவும் எனக்கு தெய்வம்.  ஆனால் நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடும் உரிமைக்காக என் உயிரையும் கொடுத்துப் போராடுவேன்.   சமஸின் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

என் மனம் கவர்ந்த இன்னொரு சிறிய கட்டுரை – கட்டுரை அல்ல, அது ஒரு பதிவு – பெருந்தேவி எழுதியது.  பெருந்தேவி ஒரு பெண் கவிஞர்.  ஆனால் மற்ற பெண் கவிகளுக்கும் பெருந்தேவிக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.  அதை நீங்கள் பெருந்தேவியைப் படித்துப் புரிந்து கொள்ளலாம்.  அவருடைய இந்த சிறிய குறிப்பு மனிதனுக்கு இலக்கியம் ஏன் என்று கேட்கும் மண்டுகளுக்கான பதில்.