50 Writers 50 Books

50 Wrtiers 50 Books என்ற புத்தகத்தைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  Harper Collins பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது.  இந்தியாவின் மிகச் சிறந்த ஐம்பது புத்தகங்களில் ஒன்றாக ஸீரோ டிகிரியும் தெரிவு செய்யப்பட்டு அதைப் பற்றி ஒரு கட்டுரையும் இந்த நூலில் உள்ளது.  இந்தப் புத்தகத்தைத் தொகுத்தவர்களில் ஒருவரான Chandra Siddan தான் ஸீரோ டிகிரி பற்றிய கட்டுரையையும் எழுதியிருக்கிறார்.  அந்தக் கட்டுரையின் தலைப்பு என்ன தெரியுமா?  Dick wants (to be) Cunt  எவ்வளவு பொருத்தமான தலைப்பு பாருங்கள்!  இதில் என்ன விசேஷம் என்றால், தமிழ் இலக்கியத்தில் சிறந்த புத்தகங்களைத் தெரிவு செய்த யாரும் என் புத்தகத்தைத் தெரிவு செய்யவில்லை.  500 ஆண்டுகள் ஆனாலும் அது நடக்காது.  வெங்கடாசலபதி புதுமைப்பித்தனின் புத்தகத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்.  தியோடர் பாஸ்கரன் பாமாவின் கருக்கு பற்றி.  மற்றபடி, இரண்டு பிராமணத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றி இரண்டு பிராமண விமர்சகர்கள் எழுதியுள்ளனர்.  establishment என்பது இன்னும் பிராமணர்கள் கையிலேயே இருக்கிறது என்பதற்கு இந்த இரண்டு விமர்சகர்களின் தேர்ந்தெடுப்பே சான்று.  சந்திரா ஸித்தன் கனடாவைச் சேர்ந்தவர்.  தமிழே தெரியாது.  ஸீரோ டிகிரியை ஆங்கிலத்தில் படித்து விட்டு இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.  நான் தமிழில் எழுதுகிறேன் என்பதைத் தவிர தமிழ் வாசகப் பரப்புக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லையோ என்று தோன்றுகிறது.

ஸீரோ டிகிரியைப் பற்றி பிரமாதமாக எழுதியிருக்கிறார் சந்திரா.  எக்ஸைல் மற்றும் ராஸ லீலா இரண்டும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன்.  ஏனென்றால், ஸீரோ டிகிரியை விட பல மடங்கு வீர்யமானவை இந்த இரண்டு நாவல்களும்.   மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Comments are closed.