அடியேனைப் பற்றி அராத்து

பின்வரும் பொன்மொழிகள் அடியேனைப் பற்றி அராத்து எழுதியிருப்பது.

சாரு நிவேதிதாவை பற்றி பெரும்பாலும் நான் எங்கும் எழுதுவதில்லை.அவர் என்னை அடிக்கடி பாராட்டி தள்ளி சாருவை தெரிந்த அனைவருக்கும் அராத்துவையும் தெரியும்படி வைத்து விட்டார். சச்சின் லோக்கல் கிரவுண்டில் ஆடும் ஒரு சிறுவனை பாராட்டுகிறார் என வைத்துக்கொள்வோம் , பதிலுக்கு அந்த பயலும் சச்சின் திறமையான ஆட்டக்காரர் என பாராட்டினால் எப்படி ? அந்த லூஸுத்தனத்தையும் வலிய போய் ஏன் செய்யணும் என்றுதான்.
அ:அடுத்து , இணையத்தில் பலராலும் அடிக்கடி விமர்சனத்திற்கு உள்ளாகும் ஆள் , தினமும் பலராலும் வெறி கொண்டு கெட்ட வார்த்தையால் திட்டு வாங்கும் ஆள் .

நான் எங்கும் போய் இது விஷயமாக யாரிடமும் சண்டையிட்டதில்லை , சப்போர்டிவாக ஒரு வார்த்தையும் கூறியதில்லை.ஆனாலும் நேரிலும் சாட்டிலும் தொடர்ந்து அவரைப்பற்றி என்னிடம் கேள்வி கேட்பது , அவரை என்னிடம் திட்டுவது என தொடர்ந்து நடந்து வருகிறது.

அவர் என் நண்பர். அதற்காக அவர் செய்யும் ,வினையாற்றும் எல்லா விஷயத்திற்கும் என்னிடம் கேட்டு என்ன பயன் ? என்ன லாஜிக் ?

எனக்கு தெரிந்த சில லாஜிக்குகள் மற்றும் என் பார்வையை பகிர்ந்து கொள்கிறேன் . மற்றபடி நீங்கள் அவரை தொடர்ந்து திட்டுங்கள் . நானே அவரை அவ்வப்போது திட்டிக்கொண்டுதான் உள்ளேன் !

பலருக்கும் சாரு லூஸாக தெரிகிறார் . சாருவுக்கு அவர்கள் படு லூஸாக முற்றிய பைத்தியங்களாக ,கோமாளிகளாக தெரிகின்றனர்.அவ்ளோதான் மேட்டர். எழுத்தாளர்களுக்கு ஒரு மேட்நெஸ் இருக்கும் , அதை கொஞ்சம் புரிந்து கொண்டால் நலம்.இல்லையெனில் அவர்கள் எழுத்தாளர்களாகவே இருக்க முடியாது . சைக்கோவாக எக்செண்ட்ரிக்காக கூட எழுத்தாளர்கள் இருப்பார்கள் , இருக்கலாம் . அப்போதுதான் வேறு பார்வை , புதிய படைப்பு கிடைக்கும். திங்கிங்க் அவுட் ஆஃப் தி பாக்ஸ் என்றால் பெட்டி போல இருக்கும் அபார்ட்மெண்டில் இருந்து வெளியே வந்து ரோட்டில் நின்று யோசிப்பது அல்ல .உங்களால் விரும்பப்படும் நபராக , உங்கள் பார்வையையே அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என நினைப்பது அபத்தம் அல்லவா ?

பல விமர்சனங்கள் இருக்கிறது , அது அனைத்திற்கும் விளக்கமளிக்க ஆரம்பித்தால் நான் சைக்கோவாக மாற நேரிடும் என்பதால் இந்த வாசகர்களிடம் காசு கேட்டு வாங்கி ரெமி மார்டின் குடிப்பது , கால்வின் க்ளைன் ஜட்டி போடும் விஷயத்திற்கு மட்டும் ஒரு சின்ன விளக்கம் சொல்லலாம் என் முயற்சிக்கிறேன்.

அவரை பிச்சைக்காரன் என திட்டுகிறீர்கள். அவரே அதைத்தானே சொல்கிறார். இந்த சூழலில் ஒரு எழுத்தாளன் வேறு வேலை இல்லையெனில் பிச்சைக்காரனாக மட்டுமே இருக்க முடியும் , நான் பிச்சைக்காரந்தான் என்கிறார்.

அப்புறம் பிச்சை போட்ட காசில் குடிக்கிறார் , பிச்சை போட்ட காசில் தாய்லாந்து போகிறார் என புகார். இந்த புகாரை பிச்சை போடாதவர்கள்தான் வாசிக்கின்றனர்.பிச்சை போட்டாலுமே பிச்சை போட்டதுமே அந்த பணத்தின் மேல் உங்களுக்கு உரிமை போய்விடுகிறது.பிச்சை போட்ட காசை இப்படித்தான் செலவழிக்க வேண்டும் என சொல்ல முடியாது .

எனக்கு என்ன குழப்பம் எனில் அவருக்கு 50 ரூபாய் முதல் 5,00,000 வரை கொடுத்து உதவிசெய்யும் யாரும் இப்படி புகார் வாசிப்பது இல்லை. அவரே ரெமி மார்ட்டின் குடிக்க வேண்டும் , யாரேனும் காசு இருந்தால் கொடுங்கள் என வெளிப்படையாக கேட்கிறார். விருப்பமுள்ளவர் கொடுக்கிறார். விருப்பம் இல்லையெனில் கொடுக்க வேண்டாம் , சிம்பிள் . ஏன் பிளட் பிரஷர் ஏறி கொதித்து திட்ட வேண்டும்?

காமனான திங்கிங்க் எப்படி இருக்கிறது என்றால் அரசியல்வாதி போல கோடி கோடியாக கொள்ளை அடித்து பதுக்கி வெளியே எளிமையாக நடித்துக்கொண்டு நைஸாக வெளியே தெரியாமல் உச்சகட்ட உல்லாசத்தை அனுபவித்துக்கொண்டு இருந்தால் பிரச்சனை இல்லை. தாய்லாந்து சென்றிருந்தபோது கூறினார்கள் – உங்கள் ஊர் அரசியல்வாதிகளுக்கு என இங்கே தனியாக தினுசாக அறை உள்ளது . குட்டி ஸ்விம்மிங்க் பூல் , பாத் டப் , ஜாக்குஸி , டேன்ஸிங்க் ஃப்ளோர் .அங்கு 4 பெண்களோடு அரசியல்வாதி செல்வாராம் . மெயின் மேட்டரில் ஆள் எப்படி என தெரியவில்லை, மற்ற மேட்டர்களில் திளைத்து 5 முதல் 10 லட்சம் வரை செலவழித்து டிப்ஸை அள்ளீ கொட்டி விட்டு செல்வாராம். இங்கே ஒரு வெள்ளை வேட்டி , சட்டை கோடு போட்ட அண்றாயர் . இதைப்பற்றி புகார் இல்லை , ஏனெனில் அவர் வெளிப்படையாக இல்லை . அதுவும் இல்லாமல் அவர் பிச்சை எடுக்க வில்லை , கொள்ளை அடிக்கிறார். நேரடியாக நம்மிடம் இருந்து கொள்ளை அடிக்காததால் உறைப்பதில்லை.

ஒன்று யோசியுங்கள் . எனக்கு ஹார்ட் பிராப்ளம் , நிறைய மருந்து சாப்பிட வேண்டும் என சொல்லி மட்டுமே காசு வாங்கி , வெளிப்படையாக சொல்லாமல் ரெமி அடித்தால் உங்களுக்கு தெரியவா போகிறது ? அதைப்போல செய்வது சாருவுக்கு கஷ்டமா என்ன?வெளிப்படையாக இருப்பதுதான் நமக்கு பெரும் கஷ்டம். சாருவுக்கு செம ஈஸி . நீங்கள் வேண்டுமானல் உங்கள் மனசாட்சிப்படி வெளிப்படையாக இருக்க முயற்சி செய்து பாருங்கள். எவ்வளவு கஷ்டம் என புரியும்.

கடைசியாக , இவர் ஆடம்பரமாக செலவு செய்கிறார் என காசு கொடுக்காமலேயே திட்டிக்கொண்டு இருப்பவர்களிடம் ஒரு கேள்வி . கடும் பணக்கஷ்டத்தில் எளிமையாக , சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் பஞ்ச பரதேசி போல வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனை எழுத்தாளர்களுக்கு நீங்கள் பண உதவி செய்துள்ளீர்கள்?

Comments are closed.