லெனின் விருது : தமிழ் ஸ்டுடியோஸ்

தமிழ் ஸ்டுடியோ அருணின் கோரிக்கை:
லெனின் விருது – அனுராக் காஷ்யப் சென்னை வருகை – நன்கொடை 
 
தமிழ் ஸ்டுடியோ இயக்கம் ஒவ்வொரு ஆண்டும் சுயாதீன திரைப்படக் கலைஞர்களை தெரிவு செய்து அவர்களுக்கு லெனின் விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ஆவணப்பட இயக்குனர் தீபா தன்ராஜ் லெனின் விருதிற்காக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். ஆகஸ்ட் 20 ஆம் தேதி சனிக்கிழமை சென்னையில் விழா நடைபெறவிருக்கிறது. ஒவ்வொருமுறையும் லெனின் விருது நடைபெறும்போது நன்கொடை கேட்டு எழுதுவேன். ஆனால் சென்ற ஆண்டே இனி நன்கொடை கேட்கக்கூடாது என்று முடிவு செய்தேன். அத்தனை கசப்பான சம்பவங்கள். அதன்படியே தொடர்ந்து ஓராண்டாக எவ்வித நன்கொடையும் இல்லாமல் தமிழ் ஸ்டுடியோவின் நிகழ்வுகளை, செயல்பாடுகளை நிகழ்த்தி வருகிறேன். ஆனால் இந்த ஆண்டு லெனின் விருது மிக பிரம்மாண்டமாக தானாகவே உருவெடுத்துவிட்டது. குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் செல்வமாகும். ஆனால் அவ்வளவு பணம் நல்ல சினிமா சார்ந்து இயங்கும் இயக்கத்திற்கு எப்படி கிடைக்கும். எனவே நண்பர்கள் தங்களால் இயன்ற தொகையை தமிழ் ஸ்டுடியோவிற்கு நன்கொடையாக கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். அல்லது இன்னொரு வழியும் இருக்கிறது. அனுராக் காஷ்யப் போன்ற உலகப் புகழ்பெற்ற இயக்குனர் இந்த நிகழ்விற்கு வரவிருப்பதால் இதற்கென ஒரு சிறப்பும் தானாகவே சேர்ந்துவிடுகிறது. எனவே நண்பர்கள் நன்கொடை கொடுக்க தயங்கினால், ஸ்பான்சர் செய்யலாம். உங்கள் நிறுவனம் அல்லது தொழில் கொஞ்சம் பிரபலமடைய இந்த ஸ்பான்சர்ஷிப் உதவலாம். இதுவரை இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே நன்கொடை கிடைத்துள்ளது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பெரிய அளவில் பணம் தேவைப்படுகிறது. நண்பர்கள் ஆயிரக்கணக்கில் கொடுக்க இயலாவிடிலும் தங்களால் இயன்ற வகையில் 500, 1000 என்று கூட நன்கொடை செலுத்தலாம். தொகையைவிட உங்களது பங்களிப்பு மிக முக்கியம்.
நன்கொடை கொடுக்கவிரும்பும் நண்பர்கள் கீழ்க்கண்ட வங்கி கணக்கில் பணத்தை செலுத்திவிட்டு தமிழ் ஸ்டுடியோவிற்கு மின்னஞ்சல் செய்யவும். ஐந்தாயிரத்திற்கு மேல் நன்கொடை கொடுக்கும் நண்பர்களுக்கு மேடையில் சிறப்பு செய்யப்படும்.
நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விபரங்கள்:
வங்கிக் கணக்கு எண் விபரங்கள்:
 
கணக்கு வைத்திருப்பவர் பெயர்: PADACHURUL
வங்கிக்கணக்கு எண்: 035005500700
வங்கி பெயர் & கிளை: ICICI Bank, Adyar Branch
IFSC Code: ICIC0000350
 
பணம் செலுத்திய பிறகு, thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் முகவரி, தொடர்பு எண் போன்றவற்றை அனுப்பி விடவும்.
 
தொடர்புக்கு: 9840698236
 
– தமிழ் ஸ்டுடியோ அருண்