தமிழ் ஸ்டுடியோவின் B. லெனின் விருது வழங்கும் விழா – 2016

leninAWARD_2016

 

தமிழ் ஸ்டுடியோவின் B. லெனின் விருது 2016 பெறுபவர்: தீபா தன்ராஜ்

20-08-2016, சனிக்கிழமை, மாலை 6.30 மணிக்கு.

பிரசாத் லேப், சாலிகிராமம், ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் உள்ள சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வழக்கமாக நிகழ்வுகள் நடைபெறும் பிரசாத் பிரிவியூ திரையரங்கம் அல்ல, பிரிவியூ திரையரங்கிற்கு அடுத்துள்ள பிரசாத் ரெக்கார்டிங் திரையரங்கில்)

தொடர்புக்கு: 9840698236

சிறப்பு அழைப்பாளர்கள்:

இயக்குனர் அனுராக் காஷ்யப்
ஆய்வாளர் வ. கீதா
சாரு நிவேதிதா
இயக்குனர் லீனா மணிமேகலை

&

B. லெனின்

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது, சுயாதீன திரைப்படக் கலைஞர்களை கொண்டாடும் பெரும் கொண்டாட்டம். நல்ல சினிமா உருவாக்கத்தில் அக்கறை கொண்ட அனைத்து நண்பர்களும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். லெனின் விருது வழங்கும் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் மிக முக்கியமான ஒரு இயக்குனரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து தலைமையேற்க வைத்து வருகிறோம். இந்த ஆண்டு இயக்குனர் அனுராக் காஷ்யப் தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது விழாவில் பங்கேற்கிறார்.

நிகழ்வில் தீபா தன்ராஜின் முப்பது நிமிட ஆவணப்படம் ஒன்றும் திரைப்படவிருக்கிறது.

அனைவரும் வருக…அனுமதி இலவசம்.

– தமிழ் ஸ்டுடியோ அருண்