சிங்காரம் சொல்கிறார்: “இதுவரை நான் ஒரு நல்ல தமிழ் நாவலைப் படித்ததில்லை. நான் படித்ததெல்லாம் ஆங்கில நாவல்கள்தாம். இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பித்தவுடனேயே இந்தியாவுடனான கடல் போக்குவரத்து நின்று போனது. தமிழ்நாட்டிலிருந்து ஒரு பத்திரிகை கூட அங்கே வரவில்லை. நான் படித்தது பூராவும் பினாங் பொது நூலகத்தில்தான். ஹெமிங்வே, டால்ஸ்டாய், ஃபாக்னர், செக்காவ், தாஸ்தாவெஸ்கி, மற்றும் ஏகப்பட்ட பேர்.”
ஆக, சிங்காரத்துக்கு உலக மொழிகளில் உள்ள நவீன இலக்கியப் பரிச்சயம் கிடைத்துவிட்டது. ஆனால் மொழி? நவீனத் தமிழ் இலக்கியமே தெரியாமல் நவீனமான தமிழ் மொழியை எப்படி எழுதுவது? அதற்கு அவருக்கு உதவியது பழந்தமிழ் இலக்கியம். ஆம், பாரதி எப்படி பழந்தமிழ் இலக்கியத்திலிருந்து நவீன தமிழுக்கு வந்தாரோ அதே போல் நவீன தமிழ் இலக்கியப் பொற்காலத்தின் விளைபொருட்கள் குறித்த அறிமுகம் இல்லாமலேயே தமிழின் மிகச் சிறந்த நாவலை எழுதினார் சிங்காரம். அந்த வகையில் சிங்காரத்துக்கு முன்னோடியே இல்லை எனலாம்.
மேலும் படிக்க: தினமணி இணையதளம்