கருந்தேள் ராஜேஷுக்கு அறிமுகம் தேவையில்லை. தினகரன் இதழில் திரைக்கதை பற்றி ஒரு நீண்ட தொடர் எழுதினார். அது புத்தகமாகக் கிடைக்கிறது. பிறகு தி இந்துவில் உலக சினிமா பற்றிப் பிரமாதமான ஒரு தொடர் எழுதினார். அது வரும் புத்தக விழாவில் வெளியாகும். இதற்கிடையில்
இண்டியா க்லிட்ஸ் வெப்சைட் சார்பாக, திரைக்கதை எழுதும் முறையைப் பற்றி சில வீடியோக்கள் வர இருக்கின்றன. ராஜேஷ் பேசுகிறார்.இதுதான் முதலாவது வீடியோ.. இந்த வீடியோவை நீங்கள் நண்பர்களிடையே பகிர்ந்து கொண்டால் அது பலருக்கும் செல்லும்; திரைக்கதை எழுத அவர்களுக்கு அது உபயோகப்படும். எனவே இதைப் பகிர்ந்து கொள்ளவும்.