நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? (2)

Dear Sir,

I read your post this morning, about the letter to Mr.Kannan.

There is a core sincerity in your writings, even when its just a letter intended to a person.

The amount of sincerity which i could see in your writings throws young people like me to shame because we rarely have any such sincerity on any one thing in life.

I do not have any qualification to criticise or even appreciate you. I am sure that you will be remembered in history, like Si.su. Chellappa and Ka.Na.Su, apart from your straight literary contributions.

Zero degree translation was excellent and your writings have a style where the writings have an universal appeal. I do not know to explain these things but, i can sense them in your writings.  I am not a great fan of your writings, no, not so but am great fan of your sincerity in writings.

It is better to be on the losing side of a game rather than giving a useless running commentary on it. That would be my reply to Mr. Kannan.

Ramkumar Sathurappan

டியர் ராம்குமார்,

உங்கள் கடிதத்துக்கு என் மனமார்ந்த நன்றி.  உங்கள் கடிதம் மேலும் சில விஷயங்களை எழுதத் தூண்டுகிறது. அதாவது, என்னுடைய நேர்மைக்காக நான் பலரையும் பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.  கமல் எனக்கு நீண்ட கடிதமெல்லாம் எழுதியவர்.  அவருடைய குருதிப் புனலைத் திட்டி எழுதினேனா, நான் அவருடைய ஜென்ம வைரி.  கௌதம் மேனன் சந்திக்கும் போது புன்னகைப்பார்.  அவருடைய படங்களின் பரம ரசிகன் நான்.  இப்போது நீதானே என் பொன் வசந்தத்தைத் திட்டி விட்டேனா, இனிமேல் அவருக்கும் நான் ஜென்ம வைரி.  சினிமா என்று அல்ல; தினசரி வாழ்க்கையில் கூட இப்படித்தான் பலரையும் வருத்தப்பட வைக்கிறேன்.  பாருங்கள், என் பொருட்டு ஒரு ஆண்டுக் காலம் தன் ராப்பகலாக உழைத்த ஜெயேஷே “என்னைத் தவிர்க்கிறீர்களா?” என்று கேட்கும் அளவுக்கு ஆகி விட்டது.  இரண்டொரு தினங்களில் நான் கோணல் பக்கங்களைக் கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலை.

கண்ணன் என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.  அதனால் அந்தக் கட்டுரையை நான் மிகுந்த வேதனையுடன் தான் எழுதினேன்.  ஏனென்றால், எக்காரணம் கொண்டும் என் மொழிபெயர்ப்பாளர்கள் விமர்சிக்கப்படுவதை என்னால் அனுமதிக்க முடியாது.  பாருங்கள், அந்த காமெண்டுகளைப் படித்து விட்டுத் தன் மொழிபெயர்ப்பையே நிறுத்தி விட்டதாக எழுதியிருந்தார் ஜேகே என்ற நண்பர்.  என் கட்டுரையைப் படித்த பிறகுதான் திரும்பவும் ஆரம்பித்தாராம்.  இப்போது புரிகிறதா என் கட்டுரையின் காரணம்?

மேலும், இதெல்லாம் மிகவும் relative ஆன விஷயங்கள்.  ஒரு நாவல் புகழ் அருந்ததி ராய்க்கு புக்கர் பரிசு கொடுக்கப்பட்ட போது பரிசுக்கான காரணமாக புக்கர் நிறுவனம் சொன்னது, அருந்ததி ராய் தன் நாவலின் மூலம் ஆங்கில மொழியை மிகவும் செழுமைப்படுத்தியிருக்கிறார்.  ஆனால் ஆங்கிலத்தை முறையாகப் பயிலாத எனக்கே அவருடைய நாவலில் பக்கத்துக்கு ரெண்டு தப்பு புலப்பட்டது.  Undress, disrobe என்ற வார்த்தைகளுக்குக் கூட வித்தியாசம் தெரியாமல் மட்டமாக எழுதியிருந்தார் அவர்.  யார் அவருடைய ஆங்கிலத்தை மோசம் என்று விமர்சிக்கிறார்கள்?  அவருடைய ஆங்கிலத்தை விட என் மொழிபெயர்ப்பாளர்களின் ஆங்கிலம் ஒன்றும் குறைந்து விடவில்லை.  குறைந்திருக்கிறது என்றால் அதை யாரேனும் சுட்டிக் காட்ட வேண்டும்.  பொத்தாம் பொதுவாக உளறக் கூடாது.  நாதன் கூட மொழிபெயர்ப்பு சரியில்லை என்றார்.  பலருக்கும் சாமான் கூடத்தான் சரியாக வேலை செய்ய மாட்டேன் என்கிறது.  அதற்காக அதை வெட்டியா போட்டு விட்டார்கள் மிஸ்டர் நாதன்?  இருப்பதைக் கொண்டுதானே உச்சம் தொட வேண்டியிருக்கிறது? நான் என்ன சொல்வது? உங்களுக்குத் தெரியாதது அல்ல.

மிகவும் எதிர்மறையான சூழ்நிலையில்தான் நாம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.  அதனால் விமர்சனங்களைக் குப்பையில் போட்டு விட்டு நம் பணியைப் பற்றி மட்டுமே சிந்திப்போம்.

என் பெயர் மட்டும் அல்ல; என் மொழிபெயர்ப்பாளர்களின் பெயரும் காலத்தால் அழியாமல் இருக்கும்.

சாரு

charu.nivedita.india@gmail.com

 

 

 

 

Comments are closed.