the discreet hero

mario vargas llosa எழுதிய the discreet hero என்ற நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். மை காட். ஒரு ஆள் எப்படி வாழ்நாள் பூராவும் சுவாரசியமாகவே எழுதிக் கொண்டிருப்பான். தமிழில் சுஜாதாவின் எழுத்து தான் சுவாரசியத்துக்குப் பஞ்சமே இல்லாமல் இருக்கும். ஆனால் யோசா சுஜாதாவையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடுவார் என்று தோன்றுகிறது. நாவலில் வரும் 80 வயது இஸ்மாயில் தன் நண்பன் ரிகபர்த்தோவிடம் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் நீ தான் சாட்சிக் கையெழுத்துப் போட வேண்டும் என்றும் சொல்கிறான். ரிகபர்த்தோவுக்கு அதிர்ச்சியில் கையில் இருந்த ஃபோர்க் கீழே விழுந்து விட்டது. உன் பையன்கள் ஆட்சேபிக்க மாட்டார்களா என்கிறான் ரிகபர்த்தோ. ரிகபர்த்தோவுக்கே 62 வயது. ஆட்சேபிப்பதா? ரவுடிகளை வைத்து என்னைக் கொன்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. இன்னும் யார் பெண் என்று நீ கேட்கவில்லையே? தெரிந்தால் உனக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும்.
யார்? யார்?
இரண்டு பேரும் பெரும் பணக்காரர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இஸ்மாயில் சொல்கிறார். ஆர்மிதா தான் அந்தப் பெண்.
ரிகபர்த்தோவுக்கு யார் என்று புரியவில்லை.
உனக்குத் தெரிந்த பெண் தான் ரிகபர்த்தோ.
ம்ஹும். தெரியவில்லை.
அதுசரி, யார் நம் நண்பர் வீட்டுப் பணிப்பெண்களின் பெயர்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்? என் வீட்டுப் பணிப்பெண் தான் ஆர்மிதா.

ஒரு நிமிஷம் கூட கீழே வைக்க முடியவில்லை. செம நாவல்.