டச் வுட்

உப்புக் கருவாடு என்ற படத்தின் முதல் காட்சியின் போதுதான் ராம்ஜி நரசிம்மனைப் பார்த்தேன்.  பக்கத்தில் இயக்குனர் ராதா மோகன்.  ராம்ஜி பற்றி ஏற்கனவே காயத்ரி மூலம் அறிந்திருந்தேன்.  ஒருபோதும் அவரிடம் பழகி விடக் கூடாது என்று நினைத்திருந்தேன்.  காரணம், அவர் ஒரு தயாரிப்பாளர், ஃபைனான்ஷியர்.   அந்த இரண்டு தொழில்களிலும் இருப்பவர்கள் மீது நமக்கு ஒரு மன பிம்பம் இருக்கிறது அல்லவா, அதுதான் அப்படி நான் நினைத்ததற்குக் காரணம்.  அதனால் கொஞ்சம் ’தள்ளியே’ நின்று பேசினேன்.  படம் எப்படி இருந்தது என்றார் ராம்ஜி.  அவர்தான் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்.  எனக்கோ படம் ஒருசிறிதும் பிடிக்கவில்லை.  ஆனால் பிடிக்கவில்லை என்று நினைக்கவே அச்சமாகவும் பீதியாகவும் இருந்தது.  ஏனென்றால், சில கோடிகளை செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர்.  பல பேரின் வாழ்க்கை அது.  ஆனால் நானோ பொய்யே சொல்ல மாட்டேன்.  அப்படி ஒரு கொள்கை.  என்ன செய்யலாம்?  ம்ம்ம்… அந்த ஹீரோயின் செமயா நடித்திருந்தார் என்று சொல்லி விட்டு வேறு பக்கம் நகர்ந்தேன்.  அது மட்டும் உண்மைதான்.  அதற்கப்புறம் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று தெரியவில்லை.  இரண்டே மாதங்களில் தினந்தோறும் சந்தித்து இரண்டு மணி நேரம் பேசும்படி ஒரு நட்பு மலர்ந்து விட்டது.  இந்த ‘மலர்ந்து விட்டது’ என்ற வார்த்தை படு கேவலமாக இருக்கிறது.  ஆனால் வேறு என்ன வார்த்தைதான் போடுவது?  (கார்ல் மார்க்ஸைக் கேட்க வேண்டும்.)  டச் வுட்.

இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.  நான் ஒரு சோதனை வைத்தேன்.  வைக்கும் போது அது ஒரு சோதனை என்று எனக்கே தெரியாது.  இதெல்லாம் தெரிந்தே செய்வதில்லை.  தானாக நடக்கும்.  ராஸ லீலா, எக்ஸைல் ஆகிய இரண்டு நாவல்களையும் வாசிக்கக் கொடுத்தேன்.  பொதுவாக இப்படிக் கொடுத்தால் யாரிடமிருந்தும் எந்தப் பதிலும் வராது.  கிணற்றில் போட்ட கல் தான்.  நமக்கும் ‘படித்தீர்களா?’ என்று கேட்க மனம் கேட்காது.  கொடுத்ததே தப்பு.  படித்தீர்களா என்று கேட்பது தப்பு மேல் தப்பு.  ஆனால் அந்த விதியை உடைத்தார் ராம்ஜி.  எக்ஸைலைப் படித்து விட்டு அவர் பேசியது போல் ஒரு எழுத்தாளர் கூடப் பேசியதில்லை.  ஒவ்வொரு அங்கம் அங்கமாக வர்ணித்தார், விவரித்தார்.   ஃபைனான்ஷியர் அல்ல; கனாய்சியர் என்று உடனே புரிந்தது.  நல்ல ஞாபக சக்தியும் இருப்பதால் மனிதர் அந்தப் பிரதியில் பூந்து விளையாடினார்.  ரசிகன் என்ற வார்த்தையின் மொத்த உருவம் ராம்ஜி.  டச் வுட்.

இலக்கியம் மட்டும் அல்ல; உணவு, பயணம், உடை, அலங்காரம் என்று எல்லாவற்றிலும் ஒரு ஹெடோனிஸ்டாகவே திகழ்ந்தார்.  சென்னையில் எந்த எந்த இடத்தில் எந்த எந்த உணவு விசேஷம் என்று அக்குவேறு ஆணி வேறாகத் தெரிந்து வைத்திருக்கிறார்.  அதில் அவரை ஒரு மாஸ்டர் என்றே சொல்லலாம்.  நானும் எத்தனையோ ஆயிரம் முறை நுங்கம்பாக்கத்தில் உள்ள கண்பத் ஓட்டல் பக்கம் போயிருக்கிறேன்.  ஆனால் அதன் வாசலில்தான் உலகின் அதி அற்புதமான ராம் துலாரி பான் கிடைக்கும் என்று எனக்குத் தெரியாது.  ராம்ஜி அறிமுகப்படுத்தினார்.  அப்படி ஒரு பானை நீங்கள் போட்டிருக்க முடியாது.  சார், இதெல்லாம் சும்மா பிஸாத்து.   ஔரங்காபாதில் உள்ள தாரா பான் செண்டரில் கிடைக்கும் பானுக்கு நிகர் எதுவுமே இல்லை என்றார் ராம்ஜி.  டச் வுட்.

ஔரங்காபாதுக்கு எப்படிச் செல்வது? 1200 கி.மீ.  சாலை வழியே போனால் 20 மணி நேரம்.  விமானத்தில் போனால் ஒன்றரை மணி நேரம்.  மும்பையிலிருந்து ஔரங்காபாத் 327 கி.மீ. ”ஒருநாள் போக வேண்டும்” என்று நினைத்தேன்.  சத்தமாக நினைத்து விட்டேன் போலிருக்கிறது.  நீங்கள் எப்போது போகலாம் என்று சொல்லுங்கள், கிளம்பி விடலாம் என்றார் ராம்ஜி.  டச் வுட்.

img_1718_1456911153

tara_pan_counter_1456911640

img_20121207_223929_1456911684_725x725

இது அராஜகம் இல்லையா?  ஒரு பான் போடுவதற்காக மும்பை அருகில் உள்ள ஔரங்காபாத் வரை விமானத்தில் போவது?  அம்பானி கூட போக மாட்டாரே ராம்ஜி? டச் வுட்.

அவர் ஹெடேனிஸ்ட் இல்லையே சார்?  நீங்களும் நானும் ஹெடோனிஸ்ட் ஆயிற்றே?  அந்தப் பானுக்காகப் போகலாம்.  அப்படி ஒரு பான்.  விலையும் ஒன்றும் கம்மி அல்ல.  விமான டிக்கட்டை விட அதிகம்தான்.  டச் வுட்.

என்னது?  விமான டிக்கட்டை விட அதிகமா?  டச் வுட்.

ஒரு பான் ஐந்தாயிரம் ரூபாய் சார்.  அது aphrodisiac சேர்ந்தது.  எல்லாம் மூலிகைதான்.  இல்லாமல் சாதா பானும் உண்டு. டச் வுட்.

நேரம் கிடைக்கும் போது போயே ஆக வேண்டும் ராம்ஜி.  டச் வுட்.

நிச்சயமாக சார்.  நானும் போய் நாள் ஆகிறது.  டச் வுட்.

ஔரங்காபாத் பான் மட்டும் அல்ல; இந்தியாவில் எங்கெங்கே என்னென்ன உணவுப் பொருள் விசேஷம் என்பது ராம்ஜிக்கு அத்துப்படி.  ராம்ஜி தயார் என்றால், இந்தியா பூராவும் ஒரு உணவுப் பயணமே சென்று பெங்குவினுக்காகத் தனியாக ஒரு புத்தகம் எழுதலாம்.  டச் வுட்.

அடுத்து, உடை.  இந்தியா முழுவதும் லினன் துணி பிரபலம் அடைவதற்கு முன்பே – அதாவது, இருபது ஆண்டுகளாக நான் லினன் அணிந்து வருகிறேன்.  அப்போதெல்லாம் லினன் கிடைப்பது ரொம்பக் கஷ்டம்.  ராம்ஜிக்கு சென்னையிலேயே சிறந்த லினன் கிடைக்கும் இடம் தெரிந்திருந்தது.  அவரும் என்னைப் போலவே லினன் விரும்பி.  இப்படிப் பல விஷயங்களில் அவரது ரசனையும் என் ரசனையும் ஒத்துப் போவதை ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தேன்.  எத்தனையோ விதவிதமான ஃப்ரெஞ்ச் நறுமணத் திரவியங்களைப் பயன்படுத்தியிருக்கிறேன்.  ஆனால் அது எல்லாவற்றையும் விட ஃபாரஸ்ட் எஸ்ஸென்ஷியல்ஸ் தான் ஆகச் சிறந்தது என்பது என் அபிப்பிராயம்.  ஒருநாள் ராம்ஜியிடமிருந்து ஃபாரஸ்ட் எஸ்ஸென்ஷியல்ஸ் வாசனை வந்தது.  கேட்டால் அதைத்தான் பல ஆண்டுகளாக உபயோகிப்பதாகச் சொன்னார்.  இப்படி ரசனையில் எக்கச்சக்கமான ஒற்றுமைகள். டச் வுட்.

ராம்ஜி சமீபத்தில் செய்த ஒரு அசகாய வேலை பற்றிச் சொல்ல வேண்டும்.  சில தினங்களுக்கு முன்னால் பதினைந்து அபூர்வ எழுத்தாளர்கள் என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன் அல்லவா?  அது வெளிவந்த மறுநாளே அதில் உள்ள பதினான்கு நூல்களையும் வாங்கி விட்டார் ராம்ஜி.  ஸீரோ டிகிரி ஆங்கிலம் எங்கேயும் கிடைக்கவில்லையாம்.  பதிப்பாளருக்கு எழுத வேண்டும்.  டச் வுட்.

http://charuonline.com/blog/?p=5847  டச் வுட்.

அதில் இருந்த நூல்கள்: டச் வுட்.

  1. Aatish Taseer – The Temple-Goers டச் வுட்.
  2. RV Raman – Saboteur டச் வுட்.
  3. Vivek Rao – Shot, Down டச் வுட்.
  4. Arnab Ray – Sultan of Delhi: Ascension டச் வுட்.
  5. Anand Pandian – Reel World டச் வுட்.
  6. Saurabh Duggal – Akhada டச் வுட்.
  7. Subhash Chandran – a Preface to Man டச் வுட்.
  8. Karan Mahajan – The Association of Small Bombs டச் வுட்.
  9. Amitava Kumar – Husband of a Fanatic டச் வுட்.
  10. Charu Nivedita – Zero Degree டச் வுட்.
  11. Amit Chaudhuri – The Immortals டச் வுட்.
  12. Mukul Kesavan – Looking Through Glass டச் வுட்.
  13. Monisha Rajesh  – Around India In 80 Trains டச் வுட்.
  14.  Chitra Banerjee Divakaruni – Oleander Girl டச் வுட்.
  15. Suketu Mehta – Maximum City : Bombay Lost and Found டச் வுட்.

இந்தப் புதையல் எங்கே கிடைத்தது என்றேன் ராம்ஜியிடம்.  ஒருநாள் அழைத்துச் செல்கிறேன் என்றார்.  அமிஞ்சிக்கரையில் இருந்தது.  வைக்கோல் போரைப் போல் புத்தகங்கள் குவிந்து கிடந்தன.  அது ஒரு புத்தக விநியோகஸ்தர் நிலையம்.  மேலாளரின் அறை மட்டுமே குளிரூட்டப்பட்டிருந்தது.  மற்றபடி அந்தப் பரந்து விரிந்திருந்த ஹால் ஒரு சுண்ணாம்புக் காளவாய் போலவே அனலைக் கக்கிக் கொண்டிருந்தது.  சொன்னால் யாருமே நம்ப மாட்டீர்கள்.  என்னோடு உடனிருந்து பார்த்தால்தான் தெரியும்.  நான் இருபத்து நாலு மணி நேரமும் குளிரூட்டப்பட்ட அறையிலேயே இருக்க விரும்புவேன்.  சொகுசுப் பேர்வழி என்பார்கள்.  அதே நேரம் சுண்ணாம்புக் காளவாயிலும் எந்தப் புகாரும் இன்றி மணிக்கணக்கில் நின்று புத்தகங்கள் தேடுவேன்.  அக்னி நட்சத்திர வெயிலிலும் அலைவேன்.  எப்படியென்றால், அடிக்கடி குடித்துக் கொண்டிருந்தேன்.  எட்டு லார்ஜ் தான் மினிமம் கணக்கு.  மாலை ஆறு மணியிலிருந்து அதிகாலை நான்கு வரை குடித்து, பேசிக் கொண்டிருந்து விட்டு, நான்கு மணிக்குப் படுக்கப் போய் ஆறு ஆறரைக்கே எழுந்து தியானம் செய்து கொண்டிருப்பேன்.  அல்லது, அடுத்த பாட்டிலைத் திறந்து தனியாகக் குடித்துக் கொண்டிருப்பேன்.  குடிகாரன் என்றார்கள்.  சொடக்கு போட எத்தனை நேரம் ஆகும்.  விட்டு விட்டேன்.  குடிக்கும் ஆசையே போய் விட்டது.  நெஞ்சு வலியினாலா?  ஒயின் குடித்தால் இதய அடைப்பு கூட போகும் என்றார்கள்.  ம்ஹும்.  ஒயினைக் கூடத் தொடத் தோன்றவில்லை.  காரணம்?  என் நாவல்கள் ஆங்கிலத்தில் வர வேண்டும்.  அதுவரை தொட மாட்டேன்.  ஓ, அதற்குப் பிறகு?  அப்போதும் தொட மாட்டேன்.  அந்த மனநிலையே போய் விட்டது.  இனிமேல் மது என் வாழ்வில் இல்லை.  அப்படித்தான் குளிரும் வெப்பமும்.  குளிர் பிடிக்கும்.  அதேபோல் அக்னி நட்சத்திரமும் பிடிக்கும்.  அதையும் ரசிப்பேன்.  என் எழுத்தில் நீண்ட நாள் அனுபவம் இருப்பவர்களுக்குத் தெரியும், வெய்யிலை எந்த அளவுக்கு ரசித்து எழுதியிருக்கிறேன் என்று.  டச் வுட்.

புத்தகக் கடல் இல்லையா?  அப்படியே மூழ்கி விட்டேன்.  ராம்ஜியின் குரல் அடிக்கடி கேட்ட வண்ணம் இருந்தது.  சார், நாம் போய் மேனேஜர் அறையில் உட்கார்ந்து கொண்டு, உங்களுக்கு என்ன புத்தகங்கள் தேவையோ அதையெல்லாம் எழுதிக் கொடுப்போம்.  கொண்டு வந்து கொடுப்பார்கள்.  டச் வுட்.

ம்.  டச் வுட்.

கொஞ்ச நேரம் கழித்து மேலே சொன்ன வாக்கியம் மீண்டும் கேட்டது ராம்ஜியிடமிருந்து.  அப்போதுதான் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.  வியர்வையில் குளித்திருந்தார்.  ஐயோ, நீங்கள் மேனேஜர் அறையில் இருங்கள்.  நான் ஒரு அரை மணியில் வந்து விடுகிறேன் என்றேன்.  புத்தகங்களைத் தேடும் போதுதான் நாம் பல ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்த புத்தகங்கள் கிடைக்கும்.  டச் வுட்.

அன்றைய தினம் நாங்கள் வாங்கிய புத்தகங்கள்:  டச் வுட்.

  1. Roberto Bolano – The Secret of Evil டச் வுட்.
  2. -do – The Third Reich டச் வுட்.
  3. -do- Nazi Literature in Americas டச் வுட்.
  4. -do- The Romantic Dogs டச் வுட்.
  5. -do- The Return டச் வுட்.
  6. -do- Monsieur Pain டச் வுட்.
  7. -do- Amulet டச் வுட்.
  8. -do-          Skating Rink டச் வுட்.
  9. -do- The Insufferable Gaucho டச் வுட்.

10.-do-                     2666 டச் வுட்.

  1. -do- Roberto Bolano: The Last Interview டச் வுட்.
  2. -do- Antwerp டச் வுட்.

13.-do-                     Woes of the True Policeman டச் வுட்.

14.-do-                     Baltasar & Bimunda டச் வுட்.

  1. Murakami Dance Dance Dancde டச் வுட்.
  2. Herman Hesse Siddhartha டச் வுட்.
  3. Tsu Sun The Art of War டச் வுட்.
  4. Salman Rushdie The Ground Beneath Her Feet டச் வுட்.
  5. Ray Bradbury Bradbury Classic Stories 1 டச் வுட்.
  6. Jose Saramago Year of the Death of Ricardo Reis டச் வுட்
  7. Michel Houellebecq Submission டச் வுட்.
  8. Zahir Dehliv Dastan-e-Ghadar டச் வுட்
  9. Mario Vargas Llosa The Discreet Hero டச் வுட்

24.-do-                       Way to Paradise டச் வுட்

25.Jorge Luis Borges The Last Interview டச் வுட்

26.Naguib Mehfouz    Palace of Desire டச் வுட்

  1. Milan Kundera Joke டச் வுட்
  2. P.G. Wodehouse Mr. Mulliner Speaking டச் வுட்.

இந்த டச் வுட் விஷயம் என்னவென்றால், ராம்ஜியை எனக்கு அறிமுகப்படுத்தியவர் காயத்ரி.  உடனே இவரைப் பற்றி எழுதி விடாதீர்கள் என்றார் காயத்ரி.  ஏன் என்றேன்.  கெட்டவர்களின் பார்வை பட்டு விடும்.  அதனால் நட்பு முறிந்து போக வாய்ப்பு ஏற்படும்.  இத்தனைக்கும் காயத்ரி ஒரு agnostic.  ஆனால் நான் அக்னாஸ்டிக்காக இருக்கும் போதும் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் எனக்கு இருந்தது.  சரி, திருஷ்டி ஏற்பட்டால் அதை முறிக்க டச் வுட் என்ற மந்திரம் இருக்கிறது அல்லவா, அதைத்தான் செமயாகப் பயன்படுத்தி விட்டேன்.  இனிமேல் ஒரு பயல் அல்லது சிறுக்கி எங்கள் நட்பை முறிக்க முடியாது.  கபர்தார்.