தேசியவாதம்: ஒரு விசாரணை : நிர்மல் (அ) ம்ரின்ஸோ

உண்மையில் எனக்குப் பெருமையாக இருக்கிறது.  நம்முடைய வாசகர் வட்டத்திலிருந்து இத்தனை பேர் எழுதுகிறார்களா என்று.  மதியம் நிர்மல் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார்.  நான் அப்போது சினிமாவில் இருந்தேன்.  இப்போது அழைக்கச் சொன்னேன்.  ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன், படித்துப் பாருங்கள் என்றார்.  தயவுசெய்து உங்கள் ப்ளாகில் எடுத்துப் போட்டு விடாதீர்கள் என்றார்.  ஏன் என்றேன் ஆச்சரியத்துடன்.  கூச்சமாக இருக்கிறது என்று பதில் வந்தது.  ஆனால் இந்தக் கட்டுரை தினமலரிலோ தமிழ் இந்துவிலோ இரண்டு மூன்று தினங்கள் தொடராக வந்திருக்க வேண்டும்.  பல லட்சம் பேர் இதைப் படிக்க வேண்டும்.  மிக அற்புதமான கட்டுரை.  கட்டுரையின் நடையை இன்னும் சரி செய்ய வேண்டும்.  சில இலக்கணப் பிழைகள் உண்டு  ஆனாலும் கட்டுரை இன்றைய தேவை.

http://nirmalcb.blogspot.in/