உங்கள் அழுக்கை என் மூஞ்சியில் அடிக்காதீர்கள்!!!

இந்தக் கட்டுரையின் தலைப்பு “உங்கள் மூத்திரத்தை என் மூஞ்சியில் அடிக்காதீர்கள்” என்றுதான் இருக்க வேண்டும். இருந்தாலும் தலைப்பிலேயே மூத்திரம் என்று வருவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்பதால் அழுக்கு என்று வைத்திருக்கிறேன்.

சக்திவேலுடன்

தில்லையின் தாயைத்தின்னி நாவலுக்கு ஒரு நீண்ட மதிப்புரை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்கு நடுவில் வேறு எந்த வேலையும் செய்யக் கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். நகம் நீண்டு கிடக்கிறது. முடி காடு மாதிரி வளர்ந்து விட்டது. இதுபோல் இன்னும் பல ஜோலிகள். எதையும் செய்யவில்லை. தில்லையின் தாயைத்தின்னி ஒரு மாடர்ன் கிளாஸிக் என்று நான் கருதுவதால் அதற்கான மதிப்புரையை எழுதிவிட்டுத்தான் மறுவேலை என்று இருந்தேன். ஆனால் அதையும் மீறி இதை எழுதுவதன் காரணம், மற்றவர்களின் மொண்ணைத்தனம், மற்றவர்களின் சுரணை கெட்டத்தனம் என் மூஞ்சியில் வந்து அடிப்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாததால்தான். சரியாகச் சொன்னால், என் மூஞ்சியில் அவர்கள் காறித் துப்பியது போல் உணர்ந்தேன். அந்தப் பிரச்சினையை ஆய்வு செய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

இதுவரையிலான புத்தக விழாக்களில் சென்ற ஆண்டு புத்தக விழாவில்தான் யாரும் என்னை பாடி ஷேம் செய்யாமல் விட்டார்கள். காரணம், அதற்கு முந்தின ஆண்டில் என் சக எழுத்தாளர் ஒருத்தர் என்னை ஓட ஓட விரட்டி அடித்து பாடி ஷேம் செய்தது பற்றி இணைய தளத்தில் பிரித்து மேய்ந்திருந்தேன். ஆசாமிக்குக் கொஞ்சம் சுரணை இருந்தது போலும், அவரும் சரி, அதைப் படித்த மற்றவர்களும் சரி, சென்ற ஆண்டு யாரும் என்னை பாடி ஷேம் செய்யத் துணியவில்லை. அவர் மட்டும் இன்னும் கொஞ்சம் என்னை விரட்டியிருந்தால் செருப்பை எடுத்துக் காண்பித்திருப்பேன். அப்படித்தான் ஒருமுறை ஒரு மார்க்சீய அறிஞர் ”சாருவுக்கு யார் கடைசிக் கோப்பை மதுவை வழங்குகிறார்களோ அவர்களை மட்டுமே பாராட்டி எழுதுவார்” என்று எழுதியதால் மறுநாள் அவரை ஒரு சபையில் வைத்து செருப்பால் அடிக்கப் போனேன். அதற்குள் அவர் தன் மகளின் பைக்கில் ஏறிப் பறந்து விட்டார். இருந்தாலும் செருப்பைக் காண்பித்து விட்டேன்.

ஆறு வயதிலிருந்து இந்த பாடி ஷேம் நடந்து கொண்டிருக்கிறது. ஊரில் உள்ள பையன்கள் எல்லாம் என்னை சூத்தாட்டி என்றே அழைத்தார்கள். பத்து ஆண்டுகள் பொறுத்தேன். பதினேழு வயதில் உடல் பயிற்சி நிலையம் சென்று எடை தூக்குதல், குத்துச் சண்டை எல்லாம் பழகிக் கொண்டு, அதற்கு மேல் சூத்தாட்டி என்று என்னை பாடி ஷேம் செய்பவர்களை முஷ்டியால் குத்தித் தாக்க ஆரம்பித்தேன். நிறைய அடிதடிகள். என் மாமன்களைப் போல் எனக்கும் ரவுடிப் பட்டம் கிடைத்து, ரவுடி லிஸ்டில் என் பெயர் சேர்ந்து விட்டால் என் எதிர்காலமே பாழாகி விடும் என்று எங்கள் ஊர் இன்ஸ்பெக்டர் என்னை அழைத்து அறிவுரை சொன்னதால் ஊரை விட்டு வந்து விட்டேன். என் நைனா எங்கள் ஊரில் மிகவும் நல்ல பெயர் வாங்கிய வாத்தியார் என்பதால் இன்ஸ்பெக்டரிடமிருந்து எனக்கு அந்த அறிவுரை கிடைத்தது.

அதற்குப் பிறகு இருபத்தைந்து வயதிலிருந்து இந்த எழுபத்து மூன்று வயது வரை எப்போதெல்லாம் என் சக எழுத்தாளர்களை சந்திக்கிறேனோ அப்போதெல்லாம் தங்களால் முடிந்த வரை அவர்கள் என்னை பாடி ஷேம் செய்து கொண்டே இருக்கிறார்கள். சென்ற ஆண்டுதான் அந்த அசம்பாவிதம் நடக்கவில்லை. இந்த ஆண்டு, இன்று நடந்ததன் காரணம், நான் என் சக எழுத்தாளருக்குக் கொடுத்த செருப்படி இரண்டு ஆண்டு ஆகி விட்டதால் எல்லோருக்கும் மறந்து விட்டது.

நேற்று வரை புத்தக விழாவில் என்னைப் பார்த்த பலரும் “என்ன இப்படி glowingஆக இருக்கிறீர்கள்? என்ன ரகசியம்? எங்களுக்கும் சொல்ல முடியுமா?” என்றே கேட்டு வருகிறார்கள். கவனியுங்கள். இந்தப் “பலரும்” என்பதில் ஒரு ‘இக்கு’ இருக்கிறது. இருபது வயதிலிருந்து முப்பது வரை உள்ளவர்கள்தான் அப்படிக் கேட்பவர்கள். ஒரு பூமர் கூட அப்படிக் கேட்கவில்லை. நானும் சமயத்துக்குத் தகுந்தாற்போல் வாய்க்கு வந்த பதிலைச் சொன்னபடி நகர்வேன். முந்தாநாள் ஒரு இருபத்தோரு வயது பெண் அந்தக் கேள்வியைப் பல தடவை கேட்டபடியே இருந்தார். ஆனால் அவருமே glowingஆகத்தான் இருந்தார் என்றாலும், முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணிடம் அப்படிச் சொல்வது அத்துமீறல் என்று நான் கருதுவதால் நான் நினைத்ததைச் சொல்லவில்லை. புத்தக விழா வளாகத்தை விட்டு வெளியே சென்ற பிறகும் தன் தோழிகளிடம் அதையே கேட்டுக்கொண்டிருந்தார் என்று மறுநாள் ஒரு தோழி சொன்னாள்.

என் முகம் மின்னுவதன் காரணம், பசை அல்ல. என் வாழ்க்கை முறை. நீங்கள் தண்ணீர் குடிக்கிறீர்கள். நான் ஜீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சிக் குடிக்கிறேன். இப்படி நூறு விஷயங்கள் உள்ளன. சுருக்கமாகச் சொன்னால், என் வாழ்க்கை முறையே காரணம்.

ஆனால் பூமர்கள் இந்த வாழ்க்கையை அணுகும் முறையே வித்தியாசமானது. நான் வேலை பார்த்த அலுவலகத்துக்கு ஏதாவது ஓய்வூதியம் சம்பந்தமாகச் சென்றால், அங்கே உள்ள பூமர்கள் அத்தனை பேரும் “ஏன் இளைத்துப் போய் விட்டீர்கள், ஷுகரா?” என்றோ அல்லது இது மாதிரியான ஐம்பது கேள்விகளைக் கேட்டு நொங்கெடுத்து விடுவார்கள். அவர்கள் அத்தனை பேரும் மன நோயாளிகள் மட்டுமல்லாது, உடல் நோயாளிகளும் கூட. இந்தக் கபோதிகள் பற்றி ராஸ லீலாவில் விரிவாக எழுதியிருக்கிறேன்.

தமிழில் எழுதும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட எழுத்தாளர் கூட்டமும் இந்தக் கழுதைகள் மாதிரியான பூமர் கூட்டம்தான்.

இன்று புத்தக விழாவுக்குள் நுழைந்தவுடன் ஒரு நெருங்கிய நண்பர் “என்ன சாரு, டல்லாக இருக்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வியைக் கேட்டு என்னை ass fuck பண்ண ஆரம்பித்தார். என்னடா இது, யாரைப் பார்த்தாலும் நம்மை ராக் ஸ்டார் என்று அழைக்கிறார்கள், இவர் இப்படிச் சொல்கிறார் என்று ஜெர்க் ஆன நான், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தேன்.

சரியாகத் தூங்கவில்லையோ என்று உப கேள்வியைப் போட்டார்.

இல்லையே, நன்றாகத் தூங்கினேனே என்றேன்.

(இந்த எழவுக்காகத்தானே நான் இருட்டில்கூட கருப்புக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு அலைகிறேன்?)

எப்படியாவது என் டல்னெஸ்ஸுக்குக் காரணம் கண்டு பிடித்து விட வேண்டும் என்று சபதம் எடுத்து விட்ட நண்பர் “ரொம்ப வேலையோ?” என்று அடுத்த அஸ்திரத்தை எய்தினார்.

அதற்கு மேல் என் மூளை வேலை செய்யாது. Ass fuck செய்வதற்கு வசதியாக என் குதத்தைக் காண்பிக்க ஆரம்பித்து விட்டேன். என் வீரமெல்லாம் எழுத்தில்தான். இதோ பாருங்கள், வீரம் வழிந்து ஓடுகிறது இங்கே இணைய தளத்தில்.

“ஹிஹி… ரொம்பத்தான் வேலை… ஹிஹி…”

“என்ன அப்படி வேலை? எழுத்து வேலையா?”

“எழுத்து வேலை, படிப்பு வேலை, பூனை வேலை… ஹிஹி…”

அதாவது, நானே என் ‘டல்னெஸ்’ஸை ஒப்புக்கொண்டு அதற்கான காரணத்தையும் சொல்லிக்கொண்டிருந்தேன்.

அதற்குப் பிறகு என் தோழி ரூபாஸ்ரீயும் சக்திவேலும் வந்தார்கள். அவர்களிடம் விஷயத்தைச் சொன்னேன்.

”நீங்கள் ராக்ஸ்டார் போல் அல்லவா இருக்கிறீர்கள்? உங்களை பாடிஷேம் செய்த நண்பருக்கு நாற்பது வயதுதானே இருக்கும்போல் தெரிகிறது, அதற்குள் பூமராகி விட்டாரே?” என்றார் ரூபாஸ்ரீ.

இருபது வயதிலேயே சிலருக்கு கிழட்டுத்தனம் வந்து விடுகிறது, அந்த மாதிரி இது என்றேன் நான்.

இந்த விஷயத்தை இன்னொரு நண்பரிடம் சொன்னேன். இதையெல்லாம் பொருட்படுத்தாதீர்கள் என்றார்.

”என்னது, பொருட்படுத்தக் கூடாதா? ஒருத்தர் என்னை பாடிஷேம் பண்ணுகிறார், இதை அவர் என்னை ass fuck பண்ணினது போல் நினைக்கிறேன், இதை எப்படிப் பொருட்படுத்தாமல் இருப்பது?”

“உங்களைத்தான் எல்லோரும் ராக்ஸ்டார் என்கிறார்களே? அது போதாதா? அதை எடுத்துக் கொள்ளுங்கள். இதை விட்டு விடுங்கள்.”

எப்படி விடுவது? இது தனிநபர் பிரச்சினை அல்லவே? இது தமிழ்ச் சமூகத்தின் பொதுவான நோய்மைக் கூறு. டல்லாக இருக்கிறீர்களே என்று கேட்பது ஒருவரை பாடிஷேம் பண்ணும் காரியம் என்று கூட இந்தப் பொதுச் சமூகத்துக்குத் தெரியவில்லை. இந்த மொண்ணைத்தனத்தையும், சுரணையற்ற தன்மையையும் பற்றித்தான் நாற்பது ஆண்டுகளாக எழுதி தமிழ்ச் சமூகத்தை மாற்றி வருகிறேன். எப்படி மாற்றுகிறேன் என்பதை புத்தக விழாவில் என் அருகிலேயே நின்று கவனித்தால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அதற்கு சாட்சி சொல்வதை நீங்கள் நேரிலேயே காண முடியும்.

நண்பரை விட்டுப் பிரிந்து குருதி வழியும் குதத்தைத் துடைத்தபடி நடந்துகொண்டிருந்த போது ஒரு பெண் எழுத்தாளர் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து என்னிடம் வந்து பேசினார். இந்தப் புத்தக விழாவிலேயே ரொம்பவும் கலர்ஃபுல்லான, ரொம்பவும் அட்ராக்டிவான எழுத்தாளர் நீங்கள்தான் என்றார். அப்பாடா, அவரைப் பற்றி நான் நினைத்து வைத்திருந்த ஒரு விஷயத்தை அவரிடம் சொல்வதற்கு எனக்கு இப்போதுதான் வாய்ப்பு கிடைத்தது என்று மகிழ்ந்தேன். இரண்டு ஆண்டுகளாக நான் நினைத்திருந்த விஷயத்தை அப்போது சொன்னேன்.

“நான் அறிந்த பெண் எழுத்தாளர்களிலேயே பேரழகி நீங்கள்தான்.”

இப்படியாக சுற்றி அலைந்து விட்டு எட்டரை மணி அளவில் கிளம்ப எத்தனித்தேன். அப்போது கண்ணெதிரே தென்பட்ட அந்தப் பெண் எழுத்தாளரிடம் “கிளம்புகிறேங்க” என்றேன். அதற்கு அந்தப் பெண் எழுத்தாளர் மிகவும் அக்கறையான தொனியுடன் “சாரு, நீங்கள் ரொம்பவும் டல்லாகத் தெரிகிறீர்கள்” என்றார்.

அடங்கொக்கா மக்கா, இன்னிக்கு என்னடா ஆம்பளையும் பொம்பளையுமாக சேத்து சூத்தடிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு “ஹீஹீ” என்று ஒரு pimpஐப் போல் சிரித்து விட்டுக் கிளம்பினேன். வேறு என்ன செய்யட்டும்?

ஒரு பெண்ணிடம் போய், “போன வருஷம் உங்கள் முலை பெரிதாக இருந்தது, இந்த வருடம் ஏன் சின்னதாகப் போனதோடு அல்லாமல் கிழவிக்குத் தொங்குவது போல் தொங்குகிறது?” என்று கேட்டால் அவள் என்னை செருப்பைக் கழற்றி அடிக்க மாட்டாளா?

அதை விடுங்கள், அந்தப் பெண் எழுத்தாளர் ஐரோப்பாவில் இருபது ஆண்டுகளாக வாழ்கிறார். எந்த ஐரோப்பியரிடமாவது “என்ன ரொம்ப டல்லாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டால் அவர் இந்த ஜென்மத்துக்கும் உங்கள் முகத்தில் முழிக்க மாட்டார் என்று கூடவா தெரியாது? தெரியும். ஐரோப்பியரிடம் அவர் அப்படிக் கேட்க மாட்டார். இந்தியன் என்றால் கேணப்புண்டை. இங்கே என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். எவன் மூஞ்சியில் வேண்டுமானாலும் மூத்திரம் விடலாம்.

”மூத்திரம் விட்டதை பொருட்படுத்தாதீர்கள் சாரு, எத்தனை பேர் உங்களுக்கு மாலை சூட்டுகிறார்கள்? அதை எடுத்துக் கொள்ளுங்கள், இதை விட்டு விடுங்கள்” என்று சொல்லவும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்.

என்ன டல்லாக இருக்கிறீர்கள் என்று கேட்டு என் மூஞ்சியில் மூத்திரம் விட்ட பெண் எழுத்தாளருக்கு வயது ஐம்பது இருக்கலாம். பூமர்.

ஆனால் இருபது வயதுப் பெண்களெல்லாம் என்னை ராக் ஸ்டார் என்று கொண்டாடுகிறார்கள்.

எழுத்தாளர்கள் எந்த அளவுக்கு வாழ்விலிருந்து அந்நியமாகிக் கிடக்கிறார்கள் என்பதற்கு இதெல்லாம் உதாரணம்.

இவ்வளவும் ஏன் எழுதினேன் என்றால், அக்கறை காட்டுகிறோம் பேர்வழி என்று நினைத்து அடுத்தவன் மூஞ்சியில் மூத்திரம் பெய்யாதீர்கள். மூத்திரம் பெய்ய கழிப்பறை இருக்கிறது. அடுத்த மூஞ்சி அந்த இடம் அல்ல.

டல்லான சாருவுடன் ரூபாஸ்ரீ
இன்றைய “டல்” தோற்றம்

நீங்கள் டல்லாக இருக்கிறீர்களா, உற்சாகமாக இருக்கிறீர்களா என்று பாருங்கள். அடுத்தவன் சூத்தை நோண்டுவதையே அன்பு என்று நினைத்துக்கொண்டிருக்காதீர்கள். இதைத்தான் நான் நாற்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன். கற்றுக் கொள்ளுங்கள். கற்றுக் கொள்ள முடியாவிட்டால் பரவாயில்லை. சூத்தை மூடிக்கொண்டு இருங்கள். அடுத்தவன் மீது செலுத்தும் அக்கறை என்பது எத்தனை பெரிய வன்முறை என்பதைத்தானே அன்பு என்ற நாவலாகவே எழுதியிருக்கிறேன்? அதைப் படித்த பிறகுமா புத்தி வரவில்லை?