ஃபாஸிஸம் பற்றி எத்தனையோ புத்தகங்களைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாததை ஒரே ஒரு ஆவணப்படத்தின் மூலம் புரிய வைத்தவர் Leni Riefenstahl. ஆச்சரியம் என்னவென்றால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஹிட்லர். ஆக, ஃபாஸிஸத்தைப் புரிந்து கொள்ள ஃபாஸிஸ்டே உதவி செய்கிறார். அந்தப் படத்தின் பெயர் Triumph of the Will. 1935-இல் ஹிட்லரின் புகழ் உச்சத்தில் இருந்த போது அவரது மேற்பார்வையில் எடுக்கப்பட்ட ஆவணப்படம். இந்தப் படத்தைப் பார்த்த எவராலும் தன் வாழ்வில் ஃபாஸிஸத்துக்குத் துணை போக இயலாது.
மேலும் படிக்க: http://minnambalam.com/k/2017/06/12/1497205805