முகநூலில் ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ள விமர்சனம்:
பொதுவா எவ்ளோ கேவலமான, முட்டாள்தனமான, பிற்போக்குத்தனமான, நம்மள வெறுப்பேத்தற மாதிரியான படங்கள பாத்தாலும் அத பத்தி பொதுவுல எழுதும்போது கெட்ட வார்த்தைகள யூஸ் பண்ணக்கூடாதுன்னு நம்ம ஒரு கட்டுப்பாடு வச்சுருப்போம். அப்படி நீங்க வச்சுருக்கற கட்டுப்பாடுகள் அத்தனையையும் தகர்க்கும் வல்லமையோடு உருவாக்கப்பட்டுள்ள படம் AAA.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் இத பத்தின எந்தவொரு அடிப்படை பிரக்ஞையும் இல்லாம, பார்வையாளர்கள லூசுக்கூமூட்டைங்கனு நெனச்சு எடுத்துருக்கற படம் இது. அரை நிமிஷத்துக்கு மேல இதபத்தி இன்டர்வியூ கொடுக்கவோ, கலாய்க்க நெனச்சா கூட இதுல கலாய்க்க ஒன்னுமில்லனு சொல்லவோ ஒரு அசாத்திய நெஞ்சுரம் வேணும். அதுக்காகவே இயக்குனருக்கும் சிம்புவுக்கும் பாராட்டுக்கள்.
தான் விரும்புன பொண்ணு தன்னை விரும்பலன்னாலே அவ கெட்டவ, ஏமாத்திட்டா, அவள பழிவாங்கனும்ன்ற எண்ணத்தை விதைக்கற இந்த மாதிரியான கேடுகெட்ட படங்கள ரசிகர்கள் காறித்துப்பி வெளியேத்தனும். அதுதான் உங்க வீட்ல இருக்கற பெண்களுக்கு நீங்க செய்யுற மரியாதை !!