விவேகம் – மறுபரீசிலனை

நேற்று கனிங்காப்புதூர் என்ற ஊரில் விவேகம் பார்த்தேன். ரொம்பக் கடினமான படம் என்பதால் முதல் தடவை சரியாகப் புரியவில்லை. nuances அதிகம். அதிலும் தல விவேக் ஓபராயிடம் nothingness, angst போன்ற விஷயங்களைப் பற்றி விளக்கம் சொல்லும் இடத்தில் எனக்கு சில சந்தேகங்கள் இருந்தன. மேலும் அக்‌ஷ்ரா ஹாசனின் பாத்திரப் படைப்பு ஒரு சிலந்தி வலைப்பின்னல் அளவுக்குப் பல பரிமாணங்களைக் கொண்டதாக இருந்தது. வில்லனும் தலயும் சண்டை போடும் கடைசிக் காட்சியில் ஹீரோயின் பாடும் போது அந்த ராகம் சந்தியா ராகமா சாவேரியா என்ற குழப்பமும் இருந்தது. கனிங்காபுத்தூர் ஜனத்தொகை 60000. சிற்றூர். மூன்று சினிமா தியேட்டர். ஒவ்வொன்றிலும் கொள்ளளவு 700. நான் பார்த்த ஷோ காலைக்காட்சி. அப்போதே 550 பேர் இருந்தார்கள். இனிமேல் தான் இருக்கிறது விஷயமே. அந்த மூன்று தியேட்டரிலுமே விவேகம் தான். கபாலியை விட மூன்று மடங்கு சாதனை வசூல்.

இப்போது நம் இயக்குனர் சிவாவை ஹாலிவுட் அழைத்திருக்கிறது. அடுத்த படம் நம் தலயை வைத்து சிவா ஹாலிவுட்டில் எடுக்கிறார். இசை ஸிம்மர்மேன். லியனார்தோ தி காப்ரியோ வில்லனாக நடிக்கிறார். மார்ட்டின் ஸ்கார்ஸஸி சிவாவுக்கு துணை இயக்குனராக பணியாற்ற இசைந்திருக்கிறார். தல வாழ்க.
தலயத் திட்டும் நாதாரிங்கள்ளாம் இப்போ எங்கடா வச்சுப்பீங்க மூஞ்சிய…