சினிமா சர்வாதிகாரம்

விவேகம் வெளியானது முதல் அட்லீஸ்ட் ஒரு பதிவாவது விவேகத்தைப் பற்றிச் சாரு ஆன்லைனில் வந்து கொண்டிருக்கிறது.

அவரது விமர்சனம், வசைகள், தல-க்குக் கடிதம், நேர்மறை / எதிர்மறை பதிவுகள் என தொடர்ந்து விவேகத்தைக் கட்டிக் காத்து கொண்டிருக்கிறார் சாரு.

ரொம்பவும் நாசூக்காக அவரது குரு அசோகமித்திரன் அன்றே புட்டுப் புட்டு வைத்து விட்டார்.

‘இன்று கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து ஸ்டண்ட் படங்களைத்தான் எடுக்கிறோம். இவற்றைக் குறை கூறினால் ரசிகர் மன்றங்கள் எச்சரிக்கைகள் விடுக்கின்றன. தமிழ் நாட்டில் இப்படங்களுக்கும் இப்படங்களின் சார்ந்தோருக்கும்தான் எவ்வளவு செல்வாக்கு! (எழுதிய வருடம் 1996, பக்கம் 257).

இன்று ரசிகனே தொலைபேசி எண்ணைக் கொடுத்து மிரட்டுமளவுக்கு வளர்ந்திருக்கிறது!

ஆனால், அசோகமித்திரன் இத்தோடு விடவில்லை. தமிழ் சினிமாவில் யதார்த்தத்தைத் தேடுபவரைப் பகடி செய்கிறார்.

வாழ்வே மாயம் என்பது போல் யதார்த்தமே மாயம் என்று கூறத் தோன்றுகிறது. அனைவரும் எல்லாக் காலத்துக்கும் ஒப்புக்கொள்ளக்கூடிய யதார்த்தம் என்று ஒன்று கிடையவே கிடையாது போலிருக்கிறது. தமிழ் சினிமாவில் மட்டும் நாம் ஏன் அதைத் தேடிப் போக வேண்டும்? (எழுதிய வருடம் 1993, பக்கம் 239).

பயாஸ்கோப் என்கிற புத்தகம் முழுவதும் அசோகமித்திரனின் சினிமாப் பயண அனுபவங்கள் இறைந்து கிடக்கின்றன. மீண்டும் புத்தகத்தைப் படித்த போது, இன்றைய சூழலுக்கு(ம்) பொருந்துவதைக் காணும் போது, அசோகமித்திரனை வியக்கவே தோன்றுகிறது.

பயாஸ்கோப், கிழக்கு பதிப்பக வெளியீடு இப்போது இருட்டிலிருந்து வெளிச்சம் என்கிற டைட்டிலுக்கு மாறி நற்றிணை பதிப்பகப் பிரதியாய் உருப்பெற்றிருக்கிறது.

-ரங்கநாதன் கோதண்டராமன், பெங்களூரு.

https://www.facebook.com/chchumma/photos/a.587611901305064.1073741827.257423547657236/1432978743435038/?type=3&theater