மதுரை உரை

சாரு,

மதுரை உயிர்மை விழாவில் உங்கள் உரையை ஷ்ருதி டிவியில் பார்த்தேன். பொதுவாக, உங்கள் எழுத்தைத்தான் உன்மத்தம், பித்த நிலை என்றெல்லாம் சொல்வார்கள். முதன்முறையாக, இந்த உரையைக் கேட்கும்போது அவ்வாறு தோன்றியது. சாமி வந்தது போல் பேசியுள்ளீர்கள் (like in a trance). It was unadulterated, naked, pristine. சொல்ல சரியான வார்த்தை என்னிடம் இல்லை.

பத்து வருடங்கள் முன்னமே, கவிதையைப் பற்றி ‘மொழியின் கருவூலம்’ என்று எழுதியுள்ளீர்கள். இந்த உரையிலும் அந்தக் கருத்தை சொல்லியுள்ளீர்கள். (வைரம் போல்).

கார்சியா லோர்கா பெயரை எல்லாம் சரியாக சொல்லிவிட்டு, விஜய் (நடிகர்) பெயரை இரண்டு முறை மறந்துவிட்டீர்கள். இந்த உரையைப் பார்த்தால், நீங்கள் யார் என்று ஒருவர் அறிந்துகொள்ளலாம்.

கபிலனுக்கு நன்றி. அவர் இல்லையென்றால், இந்த உரைகள் எல்லாம் காற்றில் கரைந்திருக்கும்.

ஸ்ரீராம்