கதாநாயகன்

தப்பு எம்மேல தான்; எம் புத்திய செருப்பால அடிச்சுக்கணும்னு பெரியவங்க சொல்லுவாங்கல்ல.  அந்த மாதிரி ஒரு காரியத்தைச் செய்து விட்டேன்.  நாய் வேஷம் போட்டாச்சு.  குரைக்காமல் இருக்க முடியுமா?  படத்தைப் பார்த்து விட்டு வெளியே வரும் போது ஒரு உணர்ச்சி வேகத்தில் – இப்படியெல்லாம் நம் வாழ்க்கை சீர்கெட்டுப் போச்சே என்ற சுய பரிதாபத்தில் மாலின் நாலாவது மாடியில் ஏறி விழ முயற்சித்தேன்.  என்னைத் தடுத்தாட்கொண்டு வீட்டில் கொண்டு வந்து விட்ட நண்பருக்கு என் நன்றி.

சின்னப் பசங்க சைக்கிள் டயர்ல ஏரோப்ளேன் விட்டுக்கிட்டுப் போவானுங்க பார்த்திருக்கீங்களா, ஓரம் போ ஓரம் போ ஏரோப்ளேன் வருது என்று சொல்லிக் கொண்டே சைக்கிள் டயரை கையால் உருட்டிக் கொண்டு போவான்கள்.  அந்த மாதிரி ஒரு ஏரோப்ளேன் தான் கதாநாயகன்.

இப்படி ஒரு கொடூரமான அனுபவத்தை என் வாழ்நாளில் அனுபவித்ததில்லை.  நான் பரவாயில்லை.  சக பார்வையாளர்கள் பச்சை பச்சையாகத் திட்டினார்கள்.