எனக்குப் பிடித்த தமிழ்ப் பெண் எழுத்தாளர் – 2

லுலுவின் சிறு-கதை ஒன்றைப் பற்றி எழுதியிருந்தேன். என் எழுத்துக்களைத் தொடர்ந்து கவனிக்காதவர்களுக்கு இது புரியாது. லுலுவுக்கே தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. 30 ஆண்டுகளுக்கு முன் என் அம்மா ஒரு விபச்சாரி என்று ஒரு கதையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தேன். ஊரின் மிக அழகான பெண் என்ற என் தொகுதியில் அந்தக் கதை உள்ளது. Oscar Lewis என்று ஒரு ஆந்த்ரபாலஜிஸ்ட் இருந்தார். அவர் டொமினிகன் ரிபப்ளிக் (மத்திய அமெரிக்கா) எல் சால்வதோர் போன்ற நாடுகளின் சேரிப் பகுதிகளைப் பேட்டி எடுத்து, தொகுத்து, தலையணை சைஸ் புத்தகமாகப் போட்டார். லா வீதா என்று பெயர். என் வாழ்க்கை என்று அர்த்தம். பெரிய இலக்கிய நுணுக்க dick எல்லாம் இருக்காது. எல்லாமே பச்சை எதார்த்தம். தன் காதலனோடு படுக்க முடியவில்லையே என்ற எரிச்சலில் தன் 13 வயது மகளை அடித்து வீட்டை விட்டுத் துரத்தும் அம்மாக்களால் நிறைந்தது அந்த நூல். அந்த ஆள் அம்மாவை முடித்து விட்டு, அவள் வேலைக்குப் போனதும் – விபச்சார வேலை – அவள் வீட்டை விட்டுத் துரத்திய மகளை அழைத்துக் கொண்டு வந்து அவளோடு படுத்து அவளை கர்ப்பம் ஆக்கி விடுவான். இதெல்லாம் அந்த நூலில் ரொம்ப சாதாரணம். லுலுவின் கதையில் அந்த thread உண்டு. ஏதோ போகிற போக்கில் லுலுவின் கதையைப் பாராட்டிவிடவில்லை…