வாஸ்தோவை எனக்கு ஒரு மாதமாகத்தான் தெரியும். என்னமாய் எழுதுகிறான். எப்பேர்ப்பட்ட பேரழகன். பெண்ணாக இருந்திருந்தால் அவனைக் காதலித்திருப்பேன். இப்படி ஒரு அழகனை சமீபத்தில் கண்டதில்லை. அவனுடைய சமீபத்திய கவிதை இது:
அலைபேசியதிலிருந்த பதற்றமில்லை அவளிடம்
நிதானமாய் கதவைத் திறந்தாள்
அவரெங்கே என்றேன்
வணக்கம் என்று கை குவித்து
அதைத் தன் வலக்கன்னம் வைத்து
கையோடு தலைசாய்த்தாள்
எட்டிப்பார்த்தேன்
திறந்திருந்த படுக்கையறையின் கதவு
அவர் மல்லாந்து படுத்திருப்பதைக் காட்டியது
என் தோள் மிருதுவான ஸ்பரிசம் உணர
திடுக்கிட்டுத் திரும்பினேன்
வட்டுடையோடு நின்று கொண்டிருந்தாள்
என் கண்கள் படுக்கையறையைப் பார்க்க
அவளென் வலக்கை பிடித்துத்
தன் இடமார்பில் வைத்தாள்
என் இடது மார்பில் விழுந்த இடியின் அதிர்வு
செவிப்பறை வரை நீள
அவளென் இடக்கைப் பிடித்து
தன் இடையோடு சேர்த்துக் கொண்டாள்
முதுகுத்தண்டு ஜில்லிட
உள்ளங்கைகளில் வெம்மை ஏறியது
சோஃபாவில் எனைத்தள்ளி
என் மேலேறி முயங்கினாள்
வழக்கத்திற்கு மாறாக அதிக சப்தம் அவளிடம்
தலை திருப்பிப் பார்த்தேன்
கட்டில் உருவத்திடம் அசைவில்லை
கலவி முடித்து எழுந்தவள்
கட்டிலறைக் கதவை சாத்தினாள்
வந்த வேலை முடிந்ததென
ஆடையை அணிந்து கொண்டு வீடு திரும்பினேன்
அடுத்த நாள் காலையும் அழைப்பு வந்தது
ஆலோசனையோடு சென்றேன்
ஹாலின் நடுவே கண்ணாடிப் பேழையினுள்
மல்லாந்து அவர் படுத்திருந்தார்
தலைவிரி கோலத்தோடு
அருகில் அவளும் அமர்ந்திருந்தாள்