நன்றி

ArtReview Asia Autumn 2017 வெளிவந்துள்ளது.  இதன் அட்டையில் என் கட்டுரை பற்றிய குறிப்பு இருக்கிறது.  அட்டைப்படக் கட்டுரை.  இந்த அளவுக்கு என்னை சர்வதேச அளவில் தெரிய வருவதற்காக உழைத்த தோழி காயத்ரி ஆர்.  அவர் தான் தொடர்ந்து பல பணிகளுக்கு இடையில் என் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தருகிறார்.  என்னோடு பணியாற்றுவது மிகவும் கடினம் என்று எல்லா நண்பர்களும் கூறுகின்றனர்.   காலை ஆறு மணிக்கு போன் பண்ணுவது அதில் ஒன்று.  எல்லா சிரமத்தையும் பொறுத்துக் கொண்டு, 99 சதவிகிதம் மொழிபெயர்ப்பாளரின் பெயர் கூடப் போடாமல் (பல தினசரிகளில் அப்படிப் போட்டால் கட்டுரையை வெளியிட மறுக்கிறார்கள்; பாவ்லோ கொய்லோ உயரத்துக்குப் போனால்தான் அது சாத்தியம் போலிருக்கிறது) மொழிபெயர்த்துக் கொடுத்த காயத்ரிக்கு என் உள்ளத்தின் அடியாழத்திலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.