ஜனாதிபதியான ஒரு வழிப்பறிக் கொள்ளையனும் ஒரு கவிஞனும்…

1985-இல் வெளிவந்த என்னுடைய லத்தீன் அமெரிக்க சினிமா என்ற நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்காக எடிட் செய்து கொண்டிருந்த போது கீழ் வரும் தகவலைக் கண்டேன்.  அப்போதெல்லாம் இண்டர்நெட், கணினி இல்லாத காலம் என்று சொல்லத் தேவையில்லை.  அப்படியெல்லாம் வரும் என்று கூட யூகிக்க முடியாத காலம்.  எப்போதும் தில்லி செண்ட்ரல் செக்ரடேரியட் நூலகத்தில்தான் இருப்பேன்.  அமெரிக்காவிலிருந்து வந்து கொண்டிருந்த சிறுபத்திரிகைகளிலிருந்துதான் இந்த விபரங்களைப் பெற்றிருப்பேன் என்று தோன்றுகிறது.  அல்லது, கூபாவிலிருந்து வந்து கொண்டிருந்த granma பத்திரிகையிலிருந்து இருக்கலாம்.  அந்ரந்த நூலிலிருந்து ஒரு சிறிய பத்தி:

 

தூக்குத் தண்டனை பெற்று இறந்து போன ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரனான Barnabe Somoza-வின் பேரனான, Tacho ஒரு சமயம் பண மோசடி செய்து ஒரு பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டவன். ஆனாலும் நிகராகுவாவின் செல்வாக்கு பெற்ற குடும்பம் ஒன்றில் மணம் செய்து கொண்டதால் குறிப்பிடத்தகுந்த புள்ளிகளுள் ஒருவனானான். அமெரிக்காவின் உதவி இருந்தால்தான் நாட்டைப் பிடிக்க முடியும் என்பதை முதலிலேயே அறிந்து அமெரிக்க அதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்துக்கொண்டான். இதன் காரணமாகவே இவனால் 1933-இல் அமெரிக்கத் துருப்புகள் வெளியேறிய போது தேசியப் படையின் உதவியைக் கொண்டு Sacasa ராஜினாமா செய்வதற்கு அவரைக் கட்டாயப் படுத்தினான். தொடர்ந்து 1936-இல் தன்னைத் தானே அதிபராக நியமித்துக் கொண்டான். இருபது ஆண்டுகளில் மத்திய அமெரிக்காவின் மாபெரும் செல்வந்தன் என்ற நிலையை அடைந்தான். 21-9-56 அன்று 27 வயதே நிரம்பிய Rigoberto Lopez Perez என்ற கவிஞனால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

Rigoberto Loez Perez: நிகரகுவாவைச் சேர்ந்த கவிஞர். பிறப்பு: 1929. நிகரகுவாவில் 1979-ஆம் ஆண்டில் சான்டிஸ்டா புரட்சியால் தூக்கியெறியப்பட்ட சொமோஸாவின் தந்தையான சொமோஸா கார்ஸியாவைக் (Anastasio Somozo Garcia) கொன்றவர். சொமோஸா கார்ஸியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவனைக் கொல்லுவேன் என்று அறிவித்து, 21.9.1956 அன்று அவன் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட போது (லியோன் என்ற நகரத்தில் மட்டும் வாக்களிப்பில் பங்குகொண்ட மொத்த வாக்காளர் எண்ணிக்கை: 96) லோபஸ் பெரஸ் என்ற 27 வயதுக் கவிஞன் தான் அறிவித்ததை நடைமுறைப் படுத்தினான். பின் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டான். தான் சாவதற்கு முன் அவன் தன் அன்னைக்கு எழுதிய கவிதை மடலின் ஆங்கில மொழிபெயர்ப்பே பின்வரும் Letter – Testament.

Letter – Testament

Rigoberto Lopez Perez

San Salvador, September 4, 1956.

Senora Soledad Lopez

Leon, Nicaragua.

Dearest Mama,

Although you never knew it,

I

Have

Always taken part

In every kind

Of activity

Aimed against

Our country’s

Evil regime

And since

All the efforts

Have been in vain,

The efforts

To make

Nicaragua

A free country again

(If not for the first time)

A country free

Of outrage and ignominy.

I have decided

Even though

My comrades

Were against it,

To try to be the

One

To bring about

 

The beginning of the end

Of this tyranny

If God wills

That I die in the attempt

 

I don’t want

Anyone to be blamed

Anyone at all,

Since it has all been

My decision.

———————-1

Who knows us all

Very well,

 

Can be relied on

Like all

My other compatriots

Resident in this country

To help you

In anything you need.

 

As I already told you,

Some time ago

I took out a life insurance

Policy

For .10 000.00

With a double indemnity

That’s to say C.20 000.00

 

—————–2

Will take

All the steps

To ensure that you get

The money,

Since it is in your name.

There is one Proviso:

As you know,

 

I have

Always

Lived

At the home of the Andrade family

 

Who have been

Very good to me

For such a long time,

And I would like

C.1000.00 of the money

To be given

To Senorita Dina Andrade

To finish her studies,

Since she might have to

Give them up

For lack of funds.

You can arrange things

With Miriam Andrade de Rivera,

Her sister,

And my good friend,

Since you will have to

Travel

To this city (San Salvador)

Where,

When all the legalities are completed

They will give you

The value of this policy

As I said already

————-3 and the other

Comrades

Will do everything to ensure

That the policy is cashed.

 

I hope

You will take

All this

Calmly

And you must see that what

I

Have done

 

Is a duty

That any

Nicaraguan

Who really

Loved

His homeland

Should

Have carried out

A long time ago.

 

Mine

Has not been a sacrifice

But a duty

Which I hope to have fulfilled.

 

If you

Take everything as

I hope you do

Then

I will be happy.

So

No sadness,

The duty

To one’s homeland

That one carries out.

 

Is the greatest satisfaction

That can be had

By a good man

As

I

Have tried to be.

 

If you take

It all

Calmly

And with the absolute idea that

 

I have fulfilled

My highest duty

As a Nicaraguan

I would

Really appreciate it.

 

Your son

Who always

Loved you dearly,

Rigoberto

 

  1. Crossed out in the photocopy of the original.

TRANSLATED BY MICHAEL TARR