நேற்று நடந்த அசோகமித்திரன் நினைவு கூட்டத்திற்கு வாசகர் வட்டத்திலிருந்து ஒருவர் கூட வரவில்லை. ஆர்கே கன்வென்ஷன் செண்டரில் 365 தினங்களும் சங்கீத நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அரங்கம் நிறைந்து விடும். அவர்கள் மட்டுமே நேற்றும் வந்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனும் வாசகர் வட்ட அட்மின் ஸ்ரீராமும் மற்றும் இலக்கியத்துக்குச் சம்பந்தமே இல்லாத என் பார்க் நண்பர்களும் மட்டுமே வந்திருந்தனர். நன்றி. இனிமேல் உங்கள் நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்காதீர்கள். அசோகமித்திரன் எனக்கு மாதா பிதா குரு தெய்வமானவர். அவர் பற்றி நான் நேற்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசினேன். அதற்கே வர முடியாமல் போகும் உங்கள் பிஸி ஷெட்யூலை நான் மிகவும் மதிக்கிறேன். அதே போல் ஒரு நாளில் 18 மணி நேரம் இலக்கியத்துக்காக உழைக்கும் என்னையும் உங்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைக்காதீர்கள். இயக்குனர் வசந்துக்கு நேற்று காலைதான் மெஸேஜ் அனுப்பினேன். ஆறு மணிக்கே வந்து விட்டார். யூட்யூபில் நீங்கள் என் பேச்சைக் கேட்க முடியும். அப்படியானால் இந்தப் பேச்சை நான் ஒரு ஏசி அறையிலேயே பேசி பதிவேற்ற முடியுமே? என்ன மயிருக்குக் கூட்டம்? என் கேள்வி என்னவென்றால் என்னை ஏன் ஐயா உங்கள் கூட்டங்களுக்கு உங்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைத்துக் கழுத்தறுக்கிறீர்கள்? இனிமேல் அறுக்காதீர்கள். எழுத்திலும் யூட்யூபிலும் மட்டுமே சந்தித்துக் கொள்வோம்.
பேச்சைப் பதிவு செய்து இரவே அதைப் பதிவேற்றிய ஷ்ருதி டிவி கபிலனுக்கு எப்போதும் என் அன்பு.