Towards a Third Cinema

Towards a Third Cinema என்ற என் புதிய புத்தகம் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.  இதில் பேசப்பட்டுள்ள இயக்குனர்களைப் பற்றி கூகிளில் கூட அதிக விபரங்கள் கிடைக்காது.  இவர்கள் இயக்கிய படங்களுக்கு ஆங்கிலத்தில் கூட விமர்சனங்கள் இல்லை.  உலகின் மிக முக்கியமான படங்கள் அத்தனைக்கும் விமர்சனம் எழுதும் ரோஜர் எபெர்ட் கூட என்னுடைய இந்த நூலில் விவாதிக்கப்பட்டுள்ள படங்கள் பற்றி எழுதவில்லை என்றால் இந்தப் படங்கள் உலக அளவில் எந்த அளவிற்குப் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.  ஆனால் இந்த இயக்குனர்கள் எல்லாம் புதிய வகை சினிமா மொழியை உருவாக்கியவர்கள் என்றே பல சினிமா விமர்சகர்களால் கருதப்படுகிறார்கள்.  உதாரணமாக, க்ளாபர் ரோச்சா.  இந்தப் படங்களைப் பார்க்கவும் இதைப் பற்றிப் பேசவும் உதவிய நண்பர்கள் ஏராளம்.  முதலில் தமிழ் ஸ்டுடியோ அருண்.  பிரபு காளிதாஸ், ஸ்ரீராம், இந்த நூலை வெளியிட்ட ராம்ஜி, காயத்ரி ஆகிய அனைவரையும் இங்கே அன்புடன் நினைத்துப் பார்க்கிறேன்.  இப்போது உங்கள் அனைவரிடமும் என் வேண்டுகோள்:  இந்த நூலை வாங்குங்கள்.  ஒரு பிரதி என்று இல்லாமல் ஐந்தாறு வாங்கி நண்பர்களுக்குக் கொடுங்கள். தமிழில் உலக சினிமா ஆர்வலர்கள் அதிகம்.  இந்த நூலைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  விலை 200 ரூபாய்.  அமேஸானிலும் கிடைக்கிறது.  லிங்க்:

https://www.amazon.in/dp/9387707059/ref=cm_sw_r_wa_apa_i_QAQ6Ab4EV32WT

TOWARDS A THIRD CINEMA - 1 Chttps://www.amazon.in/dp/9387707059/ref=cm_sw_r_wa_apa_i_QAQ6Ab4EV32WT