அரசு எந்திரத்தின் அடியாள் ரஜினி

…….
தூத்துக்குடியில் ரஜினி சற்றுமுன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு அவர் ஒரு அரச பயங்கரவாதத்தின் கொள்கைப் பிரச்சாரகர் என்பதையும் மக்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் ஒரு சமூக விரோதி என்பதையும் மறுபடி நிரூபித்திருக்கிறார். காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதற்குப்பதில் ‘ காவல் துறை மேல் கல்லெறிந்தவர்களின் புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளியிட்டு’ அந்த சமூக விரோதிகளை அடையாளம் காட்டவேண்டும் என்கிறார். போராட்டத்தில் வன்முறையாளர்கள் ஊடுருவி விட்டார்கள் என்று எடப்பாடி- சங்கி கும்பல் எடுக்கும் வாந்தியை மறுபடி எடுக்கிறார். தமிழகத்தில் அதிகரித்துவிட்ட  சமூகவிரோத சக்திகளை ஜெயலலிதாபோல இரும்புக்கரம்கொண்டு அடக்கவேண்டும் என்கிறார். துப்பாக்குச்சூட்டிற்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகவேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கைப்பற்றிக் கேட்டால்  ‘ எல்லாத்துக்கும் பதவி விலகச் சொன்னா என்ன அர்த்தம்? சும்மா அரசியல் பண்றாங்க’ என்கிறார். போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும்போது இனிமேல் அரசு ஸ்டரிக்டாக இருக்கவெண்டும் என்கிறார். இப்படியே போராடிக்கொண்டே இருந்தால் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கவலைப்படுகிறார்.
அரசு எந்திரத்தின் பச்சை ரத்தப்படுகொலையை நியாயப்படுத்தி அதற்கான பொறுப்பிலிருந்து ஆட்சியாளர்களை விடுவிப்பத்கற்காக அவர்களால் அனுப்பப்பட்ட அடியாள் ரஜினி. மக்களின் பிணங்ககளை தன்னுடையை பிரபல்யத்தினால் விற்றுக்கொண்டிருக்கிறார் ரஜினி. ரஜினியின் குரல் எடப்பாடியின் குரல். பா.ஜ.கவின் குரல். போலீசின் குரல்.
ரஜினி ஏன் முன்னிறுத்தப்படுகிறார் என்பதற்கு இனியும் பதில் தேடவேண்டியதில்லை. அடியாள்கள் உதவியின்றி அதிகாரம் சாத்தியமில்லை.
ரஜினி தமிழ்ச்சமூகத்தின் எதிர் அரசியலை சிதைக்க அனுப்பப்பட்டிருக்கும் நச்சுக்கிருமிகளில் தலையாய கிருமி.
– மனுஷ்ய புத்திரன்