To Be or Not To Be

பொதுவாக நான் மேடையில் பேசுவதை யூட்யூபில் மீண்டும் கேட்க மாட்டேன். பிடிக்காது. தமிழருவி மணியனைப் போல், வேளுக்குடி கிருஷ்ணனைப் போல், எஸ். ராமகிருஷ்ணனைப் போல் பேச முடியாததால் என் பேச்சு எனக்குப் பிடிக்காது. என்னுடைய உடல் மொழி, அசைவுகள், குரல் எதுவுமே எனக்குப் பிடிக்காது. அதன் காரணமாகவும் என் பேச்சை நான் கேட்பதில்லை. கேட்டதே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் ஏப்ரல் 8, 2018 அன்று ஹிப்னாடிக் சர்க்கிளில் நான் பேசிய பேச்சை நான் பலமுறை கேட்டேன். காரணம், புஷ்கினும் ஷேக்ஸ்பியரும். இந்தப் பேச்சின் இடையே புஷ்கினின் மிகப் புகழ் பெற்ற கவிதையான Prophet-ஐ நான் படிக்கிறேன். இந்தக் கவிதையை தஸ்தயேவ்ஸ்கி தான் கலந்து கொள்ளும் இலக்கியக் கூட்டங்கள் அனைத்திலும் உணர்ச்சிகரமாகப் பாடிக் காண்பிப்பது வழக்கம். தஸ்தயேவ்ஸ்கி பற்றிய ரஷ்ய சீரியலில் தஸ்தயேவ்ஸ்கியாக நடிப்பவர் இந்தக் கவிதையைப் படிக்கும் போது நமக்கு செத்து விடலாமா என்று இருக்கும். உணர்வெழுச்சியின் உச்சம் அது.

Prophet by Pushkin
Tormented by a spiritual thirst,
I stumbled through a gloomy waste,
And there a six-winged seraph
Appeared before me at the crossroad.
With touch as light as slumber,
He laid his fingers on my eyes,
Which opened wide in prophecy
Just as a startled eagle’s might.
Upon my ears his touch then fell,
And they were filled with noise and clangs:
I heard the heavens shift on high,
The whispering of angels’ wings,
Sea monsters moving in the deep,
The growing grapevines in the vales.
And then he bent down towards my mouth,
My sinful tongue he ripped right out-
Its slander and its idle lies-
And with his bloody hand inserted
Between my still and lifeless lips
A cunning serpent’s forked tongue.
And with his sword he cleaved my breast
Removed my shaking heart,
And then he seized a blazing coal,
And placed it in my gaping breast.
Corpse-like I lay upon the sand
And then God’s voice called out to me:
“Arise, O Prophet, watch and hark,
Fulfill all my commands:
Go forth now over land and sea,
And with your word ignite men’s hearts.

இந்த ஒன்றரை மணி நேரப் பேச்சை தயவு செய்து கேளுங்கள். இலக்கியமே அறியாத கனவான்களிடையே பேசிய பேச்சு இது. கு.ப.ரா. பற்றிய ஒன்றரை மணி நேரம் பேசினேன். அதுதான் என் உரைகளிலேயே சிறந்தது என்று நினைத்திருந்தேன்.  ஆனால் இந்த உரைதான் இது வரையிலான பேச்சுக்களில் சிறந்தது.

ஷேக்ஸ்பியரின் To be or Not To Be வசனத்தை பலரும் பேசியிருக்கிறார்கள்.  அதில் ஆகச் சிறந்ததாகக் கருதப்படுவது Kenneth Branagh. இணைப்பு கீழே:

 https://www.youtube.com/watch?v=SjuZq-8PUw0

To be, or not to be, that is the question:
Whether it is nobler in the mind to suffer
The slings and arrows of outrageous fortune,
Or to take arms against a sea of troubles
And by opposing end them. To die—to sleep,
No more; and by a sleep to say we end
The heart-ache and the thousand natural shocks
That flesh is heir to: it is a consummation
Devoutly to be wish’d. To die, to sleep;
To sleep, perchance to dream—ay, there’s the rub:
For in that sleep of death what dreams may come,
When we have shuffled off this mortal coil,
Must give us pause—there’s the respect
That makes calamity of so long life.
For who would bear the whips and scorns of time,
Th’oppressor’s wrong, the proud man’s contumely,
The pangs of despised love, the law’s delay,
The insolence of office, and the spurns
That patient merit of the unworthy takes,
When he himself might his quietus make
With a bare bodkin? Who would fardels bear,
To grunt and sweat under a weary life,
But that the dread of something after death,
The undiscovere’d country, from whose bourn
No traveller returns, puzzles the will,
And makes us rather bear those ills we have
Than fly to others that we know not of?
Thus conscience does make cowards of us all,
And thus the native hue of resolution
Is sicklied o’er with the pale cast of thought,
And enterprises of great pitch and moment
With this regard their currents turn awry
And lose the name of action.

ஆனால் அதை விட சிறந்த பேச்சு Adrian Lester பேசுவது என்பது என் அபிப்பிராயம்.  இந்த லைட்டிங்கில் இந்தக் கவிதையை நான் பேச பிரபு காளிதாஸ் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்பது என் ஆசை.  குறைந்த பட்சம் இந்த ஒளியில் ஒரு புகைப்படம்.

https://www.theguardian.com/stage/video/2016/feb/01/adrian-lester-hamlet-to-be-or-not-to-be-shakespeare-solos-video

இதன் காரணமாகவே என்னுடைய இந்த உரை என் வாழ்நாளில் முக்கியமான தருணமாகக் கருதுகிறேன்.  ஏப்ரலில் பேசிய இந்தப் பேச்சை இப்போது வெளியிடுவதன் காரணம், நான் Prophet கவிதையைப் படிக்கும் போதும், To be or Not To Be யைப் படிக்கும் போதும் அந்த வரிகள் ஸ்க்ரீனில் ஓட வேண்டும் என்று நினைத்தேன்.  அது முடியவில்லை.

என்னுடைய இந்தப் பேச்சை இப்போதே கேட்டு விடுங்கள்.  நான் விடை பெற்ற பிறகு கேட்டால் அந்தத் துயரை உங்களால் தாங்க முடியாது.  ஏதோ செண்ட்டிமெண்ட் என்று நினைக்க வேண்டாம்.  Prophet என்ற கவிதையும், To Be or Not To Be-யும் காலத்தைக் கடந்தவை.   இந்த இரண்டு கவிதைகளையும் இதுவரை யாரும் தமிழ்நாட்டில் மேடையில் பேசியதில்லை; படித்ததில்லை.  இதுவே முதல்.

***

What a piece of work is man,
How noble in reason, how infinite in faculties,
In form and moving how express and admirable,
In action how like an Angel,
In apprehension how like a god,
The beauty of the world,
The paragon of animals.
And yet to me, what is this quintessence of dust?
Man delights not me; no, nor
Woman neither;