அராத்துவின் ‘பனி நிலா’

இந்த ஆண்டு ஜனவரி மாதம் அராத்துவின் பனி நிலா என்ற கதையைத் தட்டச்சுப் பிரதியில் படித்தேன்.  அப்போது நான் அவரிடம் சில வார்த்தைகளைச் சொன்னேன்.  அதே வார்த்தைகளை – ஒரு வார்த்தை பிசகாமல் – சாதனா இதே கதை பற்றி முகநூலில் எழுதியிருக்கிறார்.   உங்களால் நம்ப முடியாது.  கதையைப் படித்து விட்டு இதே வார்த்தைகளைத்தான் அராத்துவிடம் சொன்னேன்.

“விகடனில் அராத்துவின் ‘பனி நிலா’ வாசித்தேன். ஒரே வார்த்தையில் சொல்வதாகயிருந்தால் அபாரம். அந்தக் கதை ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னமும் மீளாத கணத்தில் இதைச் சொல்லுகிறேன் ; குறித்துவைத்துக் கொள்ளுங்கள். பனி நிலா ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்படி மொழிபெயர்க்கப்படும் பட்சத்தில் ஒர்ஹான் பாமுக், கால்வினோ, செகாவ் போன்ற சர்வதேச எழுத்தாளர்களின் படைப்புகளை விடவும் இக்கதை உலகமெங்கும் கொண்டாடப்படும். இலக்கியத்துக்கான நோபல் பரிசு கூட கிடைக்கலாம். வாய்ப்பிருக்கிறது.

இன்னொன்று, அராத்துவின் மொழிநடை. தமிழ் இலக்கியத்தில் இப்படியொரு அபாரமான மொழிநடையை யாரும் கையாண்டதில்லை. வார்த்தைகளை செதுக்கிச் செதுக்கி எழுதியிருக்கிறார்.

உங்கள் கைகளில் முத்தமிடுகிறேன் அராத்து !”

சாதனா