டாக்டர் அயெந்தே உங்கள் இல்லத்துக்கு வந்திருக்கிறாரா?

நேற்று தமிழ் ஸ்டுடியோஸ் அருணின் மாணவர்கள் மூன்று பேர் என்னைப் பேட்டி கண்டார்கள்.  ஒளிப்பதிவு செய்யப்பட்டது.  மொத்தம் நான்கு மணி நேரம்.  இப்படி ஒரு பேட்டியை நான் இதுவரை கொடுத்ததில்லை.  இனிமேலும் கொடுக்க முடியும் என்று தோன்றவில்லை.  காரணம், அந்த அளவுக்கு என்னை வாசித்திருந்தார்கள்.  அவர்கள் தென்னமெரிக்க நாடுகள் பற்றிக் கேட்ட போது என் கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டன.  ஏன் கலங்க வேண்டும்?  40 ஆண்டுக் காலமாக தொலைதூரத்தில் இருக்கும் தன் தாயைக் காணாத ஒருவனின் துயரமே அது.  அது என்ன தாய்?  மற்றவர்களுக்கு சீலே, ப்ரஸீல் என்பதெல்லாம் வெறும் பெயர்கள்.  வரைபடத்தில் எங்கோ ஒரு இடத்தில் தெரியும் நிலப்பரப்புகள்.  ஆனால் எனக்கு அப்படி அல்ல.

20 ஆண்டுகளுக்கு முன்னால் மாத்யமம் பத்திரிகையில் விக்தோர் ஹாரா (Victor Jara) (1932 – 1973) பற்றி நான் எழுதிய போது என்னிடம் கணினி கிடையாது.  யூட்யூப் என்றால் என்ன என்றே தெரியாது.  அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பர்கள் கொண்டு வந்து கொடுக்கும் குறுந்தகடுகள் மூலம் மட்டுமே கேட்டேன்.  அவர்களும் மிகுந்த சிரமப்பட்டுத்தான் அத்தகடுகளை வாங்கிக் கொடுத்தனுப்புவார்கள்.  அமெரிக்காவில் கூட அப்போது எளிதில் கிடைக்காது.  ஒருமுறை பாதுகாவலர்கள் விமான நிலையத்தில் ரொம்பக் குடைச்சல் கொடுத்ததாக ஒரு நண்பர் சொன்னார்.  காரணம், விக்தோர் ஹாராவின் கதை அப்படிப்பட்டது.

https://www.youtube.com/watch?v=2xLyLKsfDuE

இந்தப் பாடலின் வார்த்தை வடிவம்:

Yo no canto por cantar
ni por tener buena voz,
canto porque la guitarra
tiene sentido y razón.

Tiene corazón de tierra
y alas de palomita,
es como el agua bendita
santigua glorias y penas.

Aquí se encajó mi canto
como dijera Violeta
guitarra trabajadora
con olor a primavera.

Que no es guitarra de ricos
ni cosa que se parezca
mi canto es de los andamios
para alcanzar las estrellas,
que el canto tiene sentido
cuando palpita en las venas
del que morirá cantando
las verdades…

Ahí donde llega todo
y donde todo comienza
canto que ha sido valiente
siempre será canción nueva.

 

இதன் மொழிபெயர்ப்பு:

 

I don’t sing just to sing

niether because I have a good voice.

I sing because the guitar

makes sense and has a reason,

It has a heart made of earth

and wings of a little dove,

It’s like holy water

it blesses glories and sadness

Here my singing got stucked

just like Violeta used to say,

a working guitar

with a spring smell.

 

A guitar that doesn’t belong to the rich ones

nor anything like it.

My singing comes from the scaffoldings

used to reach the stars.

Because singing makes sense

when the veins palpitate

from whom will die singing

the truthful truth

not the brief flatterings

or the foreigner fames

but the singing of a lark instead

until the bottom of the earth.

 

There where everything arrives

and where everything begins

The song that has been brave

will always remains as ‘canción nueva’*

கான்ஸியோன் நூயவா (புதிய பாடல்) என்பது அறுபதுகளில் லத்தீன் அமெரிக்காவில் நடந்த இசை இயக்கத்தைக் குறிப்பிடுகிறது.  அங்கெல்லாம் இசை என்பது ஒரு போராட்ட வடிவம்.  இசைக் கலைஞர்கள் அங்கே நம் தனிப்பட்ட சுகதுக்கங்களுக்கு ஒத்தடம் கொடுக்கும் கேளிக்கைக் கலைஞர்கள் அல்ல;  மாறாக அவர்கள் போராளிகள்.

பொதுவாக விக்தோர் ஹாராவின் பாடல்களை அவரேதான் எழுதி, பாடி, கித்தாரும் வாசிப்பது வழக்கம்.  இந்தப் பாடலை என்னால் மனப்பாடமாகப் பாட முடியும் என்ற அளவுக்குக் கேட்டிருக்கிறேன்.  பாடலில் வரும் வியோலெத்தா (1917 – 1967) யார் தெரியுமா?  நான் அடிக்கடி குறிப்பிடும் நிகானோர் பார்ராவின் சகோதரி.  முழுப்பெயர் வியோலெத்தா பார்ரா.  பாடகர், இசையமைப்பாளர், கான்ஸியோன் நூயெவா என்ற புதிய பாடல் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்.  இவரது மகன், மகள் இருவரும் கூட இசைப் போராளிகள்தான்.

இந்த விபரங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

காரணம், சீலேவின் வரலாறு, பண்பாடு, இலக்கியம், இசை எல்லாம் என் குருதியில் கலந்துள்ளது.  கடந்த நாற்பது ஆண்டுகளாக.  Battle of Chile என்ற படத்தைப் பார்த்தால் நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.  பத்ரீஸியோ குஸ்மான் இயக்கிய மூன்று பாகங்களைக் கொண்ட இந்த ஆவணப் படத்தின் முதல் பாகம், மூன்று மணி நேரம் பதினோரு நிமிடங்கள் ஓடக் கூடியது.  இரண்டாம் பாகம், ஒன்றரை மணி நேரம்.  மூன்றாம் பாகம், ஒரு மணி நேரம் 19 நிமிடம்.  மொத்தம், ஆறரை மணி நேரத்துக்கு மேல் ஓடக் கூடியது இந்தப் படம்.

ஆரம்பத்தில் சே குவேராவின் துப்பாக்கித் துளைக்கப்பட்ட முகம் ஐந்தாறு நிமிடங்களுக்குக் காண்பிக்கப்படும்.  பலருக்கும் என்ன நடக்கிறது என்றே புரியாது.  சீலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் ஸால்வதோர் அயெந்தே (Dr. Salvador Allende – 1908 – 1973) அமெரிக்க சி.ஐ.ஏ.வின் ஆதரவு பெற்ற சீலே ராணுவத் தளபதி பினோசெத் ஏற்படுத்திய ராணுவப் புரட்சியால் கொல்லப்பட்டார்.  டாக்டர் அயெந்தே அளவுக்கு மக்களால் விரும்பப்பட்ட ஒரு அரசியல் தலைவரை உலகம் பார்த்ததில்லை என்றே சொல்லலாம்.  சந்த்தியாகோ நகரிலும் சீலேவின் மற்ற ஊர்கள் பலவற்றிலும் ஒவ்வொரு வீட்டிலும் ”இது டாக்டர் உட்கார்ந்த நாற்காலி” என்று அன்புடன் சுட்டிக் காட்டுவார்கள்.  இதை எழுதும் போது என் உணர்வுகள் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.  ஒவ்வொரு வீட்டுக்கும் சென்றிருக்கிறார் டாக்டர் அயெந்தே.  அவரது அதிபர் மாளிகை பினோசெத்தின் ராணுவ டாங்கிகளால் தாக்கப்படுகிறது.  மேலே ஆகாயத்தில் அமெரிக்க விமானங்கள் அதிபர் மாளிகையின் மீது குண்டு வீசுகின்றன.  Battle of Chile-வின் கேமராமேன் டாக்டர் அயெந்தேவுடன் இருந்து எல்லாவற்றையும் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.  டாக்டர் அயெந்தே நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்; இந்த குண்டுகளுக்கு அஞ்சி சரணடைய மாட்டேன் என்று வானொலியில் உரையாற்றுகிறார்.  அதையும் படம் பிடிக்கிறார் ஒளிப்பதிவாளர்.  அடுத்த காட்சியில் நம் கண் முன்னே ஒரு ராணுவ அதிகாரி.  கையில் பிஸ்டல்.  நம்மைக் குறி பார்த்து டோண்ட் ஷூட் டோண்ட் ஷூட் என்று கத்துகிறார்.  என்ன அர்த்தம்?  ஒளிப்பதிவாளர் அவரைப் படம் எடுக்கிறார்.  அடுத்த கணம், ராணுவ அதிகாரியின் மீது குண்டு பாய்வதை நாம் உணர்கிறோம்.  நாம் பார்ப்பது ராணுவ அதிகாரியை மட்டுமே.  அப்போது இயக்குனர் குஸ்மானின், எங்கள் ஒளிப்பதிவாளர் அந்த ராணுவ அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அறிவிக்கிறது.

இது படம்.  இதைப் பார்த்து 38 ஆண்டுகள் ஆகின்றன.  ஒவ்வொரு காட்சியையும் என்னால் அணுஅணுவாக விளக்க முடியும்.  ஒரே ஒருமுறைதான் பார்த்தேன்.  1980-இல்.

எனக்கு இப்போது சீலேவின் சந்த்தியாகோவில் 60 வயது ஆன ஒருவரையாவது Battle of Chile பார்த்திருக்கிறீர்களா, pablo neruda

Pablo Neruda’s home in Valparaiso

Parra01f

violeta parra

குறைந்த பட்சம் விக்தோர் ஹாராவைக் கேட்டதுண்டா என்று கேட்க வேண்டும்.  40 ஆண்டுகளாக இந்தக் கலாச்சார உலகிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவனுக்கு இப்படித்  தோன்றுமா, தோன்றாதா?

இதனால்தான் என்னால் உங்களுக்குப் பிடித்த இசைக் கலைஞரோடு சேர முடியவில்லை.  புரிந்து கொள்ளுங்கள்.  என்னைப் பொறுத்தவரை இசையும் இலக்கியமும் சமூக விடுதலை சார்ந்தது.  என் ரசனை அதைப் பொறுத்தே உருவாகிறது.  ஹாரா பாடுவதைக் கேளுங்கள்.  நான் பாடகன் என்பதால் பாடவில்லை.  என் குரல் பாடகனுக்கானது அல்ல.  ஆனால் என் கித்தார் புனித நீரைப் போலே வாழ்வையும் துக்கத்தையும் பாடுகிறது; அதற்கு ஓர் அர்த்தம் இருக்கிறது.

விக்தோர் ஹாரா நடந்த மண்ணை நான் என் வாழ்வில் ஒருமுறையாவது முத்தமிட விரும்புகிறேன்.

டாக்டர் அயெந்தேயின் நெருங்கிய நண்பர் பாப்லோ நெரூதா.  இப்போது நான் எழுதப் போவதை ஊன்றிப் படியுங்கள்.  அயெந்தே கொல்லப்பட்டது 11 செப்டம்பர் 1973.  பாப்லோ நெரூதா மரணம் அடைந்தது 23 செப்டம்பர் 1973.  இயற்கை மரணம் அல்ல.  கொல்லப்படவும் இல்லை.

பினோசெத்தின் உத்தரவின் பேரில் மருத்துவர்கள் மூலம் விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டார் பாப்லோ.

கவிஞர்கள் ஆட்சிக்கு ஆபத்தானவர்கள் என்று நினைத்தார் பினோசெத்.  அந்த பாப்லோ வாழ்ந்த வீட்டை நான் பார்க்க வேண்டும் என்று விரும்புவேன் தானே?   வால்பரைஸோ என்ற ஊரில் இருக்கிறது அந்த வீடு.  சந்த்தியாகோ நகரிலிருந்து ஒன்றரை மணி நேர தூரத்தில் உள்ளது வால்பரைஸோ.

victor

victor jara

என் இதயத்தின் ரத்தக் குழாய்களில் 50 சதவிகித அடைப்பு உள்ளது.  அதற்காகக் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டோடு மருந்தும் சாப்பிடுகிறேன்.  ஆனாலும் மாலை ஆறு மணிக்கு மேல் அதிக தூரம் நடக்க முடிவதில்லை.  எப்போதுமே கனம் தூக்க முடியவில்லை.  மீறிச் செய்தால் ஆஞ்ஜைனா (Angina).  தாடையில் வலி.  தாடை வலி என்பது மார்பு வலியின் மற்றொரு வடிவம்.  வலி தொடர்ந்து கொண்டே இருந்தால் Monit 20 என்ற மாத்திரையை நாக்குக்கு அடியில் அடக்கிக் கொள்ளுங்கள் என்றார் ஸ்ரீராம்.  அவர் டாக்டர்.  ஆனால் அவர் பள்ளிக்கூட மாணவராக இருந்த போதே சுஜாதா இதை எழுதிப் படித்திருக்கிறாராம்.  அதற்குப் பிறகுதான் மருத்துவத்திலும் படித்திருக்கிறார்.   ஸ்ரீராமின் ஞாபக சக்தி அபாரமானது.   அவர் சொன்னது போல் மோனிட் 20-ஐ அடக்கிக் கொண்டால் பத்து நிமிடத்தில் வலி மறைந்து விடுகிறது.  அதனால் என் பாக்கெட்டில் எப்போதும் மோனிட் 20-ஐ வைத்துக் கொண்டிருக்கிறேன்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், இனிமேலும் என் தென்னமெரிக்கப் பயணத்தை ஒத்திப் போட முடியாது.  ஏற்கனவே அந்தப் பயணத்தின் 50 சதவிகித இன்பம் என்னை விட்டுப் போய் விட்டது.  மதுவை விட்டு விட்டேன்.  25 சதவிகிதம் காலி.  எப்படி?  மெக்ஸிகோ போய் விட்டு ஒரு வாய் டகீலா குடிக்க முடியாது இல்லையா?  குடி இல்லாமல் தென்னமெரிக்க வாழ்க்கை இல்லை.  25 சதவிகிதம் காலி.  அடுத்த 25 சதவிகிதம், மாலையில் நடக்க முடியாது.  கனம் தூக்க முடியாது.  ஆக, பயணத்தை இன்னும் ஒத்தி வைத்தால் உடல் சுத்தமாக ஒத்துழைக்காது.  சமீபத்தில் என் நண்பர் “எப்போது அடுத்த புத்தக வெளியீட்டு விழா?” என்று கேட்ட போது இதைத்தான் சொன்னேன்.  என் உயிருக்கு உயிரான ஒரு விஷயத்தைச் செய்ய முடியாமல் 65 வயது வரை வந்து விட்டேன்.  இப்போதே உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. இனிமேலும் தென்னமெரிக்கப் பயணத்தை மேற்கொள்ளாமல் விழாக்கள் நடத்திக் கொண்டிருப்பதில் பயனில்லை.   இப்படியே வாழ்க்கை முடிந்து விட்டால் என் ஆவி துர் ஆவியாக மாறி விடும்.  ஏற்கனவே தமிழ்நாட்டில் பல நூறு துர் ஆவிகள் நடமாடிக் கொண்டிருப்பதால் துர் ஆவி ஜனத்தொகையை அதிகரிக்க வேண்டாம் என்று எண்ணி, இந்த ஆண்டு முடிவுக்குள் சீலே போய் வந்து விடலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

ஆனாலும் இந்த ஆண்டு சீலே பயணம் நிச்சயம்.  எனவே இதையெல்லாம் உத்தேசித்து இப்போது கிண்டிலில் வெளியாகியிருக்கும் ஊரின் மிக அழகான பெண் என்ற தொகுதியின் விலையை 999 ரூ. என்று நிர்ணயம் செய்தேன்.  இதன் மூலம் சேரும் தொகையை சீலே பயணத்துக்கு உபயோகப்படுத்தலாம் என்று நினைத்தேன்.  என்னுடைய பல வாசகர்கள், நண்பர்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பது எனக்குத் தெரியும். அநேகமாக பழம் வாங்கி வருவார்கள்.  பணம் கொடுக்க நினைக்கும் நண்பர்களுக்கு அதை எப்படிக் கொடுப்பது என்று தெரியாது.  அப்படிக் கொடுப்பதை அவமரியாதை என நினைப்பார்கள்.  ஆனாலும் கொடுக்க வேண்டும் என்று நினைப்பதால், டாட்டா சொல்லிப் பிரியும் போது பாக்கெட்டில் வைத்து விட்டு நாம் அவர்களின் முகம் பார்த்து நன்றி சொல்வதற்குள் கிளம்பி விடுவார்கள்.  இன்னும் சில சென்ஸிடிவ் நண்பர்கள் ஸ்ரீராமிடம் கொடுத்து என்னிடம் கொடுக்கச் சொல்வார்கள்.

காரணம், என் எழுத்து அவர்களின் வாழ்க்கையையே மாற்றி விட்டதாகக் கருதுகிறார்கள்.  அவர்களின் வாழ்வை மேன்மையுறச் செய்திருப்பதாக நம்புகிறார்கள்.  திருப்பூரில் ஒரு பனியன் தொழிற்சாலை வைத்திருக்கும் நண்பரின் காரில் நான்ஸி அஜ்ரமின் பாடல்கள் ஒலித்தன.  இது ஒரு உதாரணம்.

இப்படிப்பட்ட நண்பர்களுக்காக மட்டுமே ஊரின் மிக அழகான பெண் தொகுப்பின் விலையை 999 ரூ. என்று நிர்ணயம் செய்தேன்.  ஆனால் கிண்டிலில் விலை உச்சவரம்பு விதித்து விட்டார்கள், இந்த மாதத்திலிருந்து.  அதிக பட்சம் 499 தான் வைக்கலாம்.  அப்படி வைத்தால் எனக்கு 250 ரூ.  கிடைக்கும்.  அதில் பயனில்லை என்பதால் 99க்கே இறங்கி விட்டேன்.

சில சமயங்களில் ஆஞ்ஜைனா வரும் போது அர்ஷியாவின் ஞாபகம் வந்து விடுகிறது.  என் அருமை நண்பர் அர்ஷியாவுக்கு இன்னும் 60 வயது கூட ஆகவில்லை.  தினமும் நடப்பார்.  வாக்கர்ஸ் கிளப்பின் முக்கிய புள்ளி.  ஆர்கானிக் சாப்பாடுதான்.  பிரியாணி சாப்பிட்டால் கூட அதில் உள்ள மட்டனை எடுத்து வைத்து விடுவார்.  மது, சிகரெட் எதுவும் கிடையாது.  கோபம் கிடையாது.  ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு கடும் மன உளைச்சலில் இருந்த  காரணமாக ஹார்ட் அட்டாக்.  முதல் வலியிலேயே கிளம்பி விட்டார். ஆனால் மற்ற நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள் அறுபது வயதில் புதிய கேர்ள் ஃப்ரெண்டோடு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  85 வயதில் விஸ்கியும் சிகாரும் குடிக்கிறார்கள்.  60 வயது டிக்கட் இந்திய வாழ்க்கை தரும் பரிசு.  இப்படிப்பட்ட சூழலில் முதலில் சீலே கிளம்ப வேண்டும்.

எனவே அதிக எண்ணிக்கையில் ஊரின் மிக அழகான பெண் மொழிபெயர்ப்புத் தொகுப்பை கிண்டிலில் வாங்குங்கள்.  அதிக எண்ணிக்கையில் பழுப்பு நிறப் பக்கங்களுக்கு முன்பதிவு செய்யுங்கள்.  இணைப்பு

ஊரின் மிக அழகான பெண்

https://www.amazon.in/dp/B07DD38F91/ref=cm_sw_r_wa_apa_i_zelfBb23YQB33

பழுப்பு நிறப் பக்கங்களுக்கு

https://tinyurl.com/pazhuppu2