அராத்துவின் கிண்டில் விற்பனை

Araathu’s post in FBkindle

கிண்டில் பண வரவு குறித்து…..

இதுவரை எந்த பதிப்பகத்தில் இருந்தும் நான் ராயல்டி பெற்றதில்லை. ராயல்டி எதிர்பார்த்து நான் புத்தகங்களை பதிப்பிக்க கொடுக்காததால் எனக்கு எந்த புகாரும் இல்லை.

மார்ச் 19 அன்று உயிர்மெய் கிண்டிலில் வெளியிட்டேன்.மார்ச் 31 வரை அமேசான் கொடுத்த தொகை – 8500 /-

ஏபரல் – 10,000 /-

மே – 9,000/-

மாதா மாதம் இந்த பணம் தொடராது. உயிர்மெய் ஹாட்டாக இருக்கும் வரைதான்.ஜூன் மாதம் 4000 ஆக குறைந்து ,ஜூலை ஆகஸ்டுகளில் 1000 ல் சென்று முடிந்து விடலாம்.

இதுவரை 4 புத்த்தகங்கள் அப்லோட் செய்திருக்கிறேன்.

ஒருவர் ஒரு புத்தகத்தை டவுன் லோட் செய்தால் 50 + ரூபாய் வரும். கிண்டில் அன்லிமிட்டடில் ஒருவர் ஒரு புத்தகத்தை ஒரு பக்கம் படித்தால் 8 பைசா (தோரயமாக) வரும்.

ஒரு மாதத்தில் 80,000 பக்கம் வரை படித்து இருக்கிறார்கள்.நிற்க !

உடனே புத்தகம் அப்லோட் செய்து லட்சாதிபதி ஆகிவிடலாம் என கணக்கு போடக்கூடாது.

இந்த அமோக ஆதரவு உயிர் மெய்க்கு மட்டுமே. இங்கு பஞ்சர் போடப்படும் சுமார் ஆதரவுதான்.

உதாரணமாக , உயிர் மெய் இதுவரை 25,000 வரவு அளித்தது என்றால் ,சயனைட் குறுங்கதைகள் இதுவரை அளித்தது ரூ 800 /- மட்டுமே! இதை இதுவரை 6 பேர் மட்டுமே டவுன்லோட் செய்துள்ளனர்.

எனவே கிண்டிலில் புத்தகம் போட்டாலே ஓடாது. ஒரு நையா பைசா கூட வியாபாரம் ஆகாத புத்தகங்கள் எல்லாம் கிண்டிலில் உண்டு.

உயிர் மெய் செய்தது சாதனை. இப்படி வெறி கொண்ட படித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.மூடுக்கு ஏற்ற அட்டகாசமான அட்டைப்படம் போட்ட பிரேம் டாவின்சி & கார்த்திகேயன் மேடிக்கு அன்பு.

எழுதிய வகையில் முதன்முறையாக இவ்வளவு பணம்.

உயிர் மெய்யில் என்னமோ இருக்கிறது. அது என்ன என்று எனக்கே தெரியாது