சூரிய ஒளியில் மின்னும் தேனீக்கள்

என்னுடைய புதிய கிண்டில் புத்தகம்.  இதுவரை இப்படி ஏழெட்டு புத்தகங்கள் வந்து விட்டன.  அனைத்தும் என் நண்பர் விமலாதித்த மாமல்லனின் உதவியால் வெளிவருகிறது.  மாமல்லனுக்கு என் நன்றி.  இலக்கிய ரீதியாக எத்தனை கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் ’அது வேறு; நட்பு வேறு’ என்று நினைத்து எனக்கு உதவி செய்ய முன்வந்த அவரது அன்புக்கு என் நன்றி.

சூரிய ஒளியில் மின்னும் தேனீக்கள் தொகுப்பில் விஸ்வரூபம் பற்றிய என் கட்டுரைகளும் உண்டு.  கமல்ஹாசன் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்தப் படத்தை வைத்து ஆய்வு செய்திருக்கிறேன்.  வழக்கம் போல் மற்ற கட்டுரைகளும் இதில் உண்டு.  விலை 49 ரூ.  உலகின் எந்த மூலையிலிருந்தும் இதை வாங்கலாம்.

https://www.amazon.in/dp/B07PNYHRBJ