தென்னமெரிக்கப் பயணக் குறிப்புகள் – 2

அத்தாகாமா

பெரூவின் தென்கோடியில் உள்ள ஒரு ஊர் தாக்னா.  அந்த ஊர் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக என் சொந்த ஊர் மாதிரி என் மனதில் தங்கி விட்டது.  ஏனென்றால், அங்கேதான் என் நண்பர் கிருஷ்ண ராஜ் வசிக்கிறார்.  அவரைப் பற்றி விகடன் இணைய தளத்தில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுத ஆரம்பித்த கோணல் பக்கங்களில் நிறைய எழுதியிருக்கிறேன்.  அவரோடு அப்போது பல மணி நேரங்கள் தொலைபேசியில் உரையாடி இருக்கிறேன். அந்த உரையாடல்களையெல்லாம் கோணல் பக்கங்களில் பதிவு செய்திருக்கிறேன்.  அதெல்லாம் உங்களுக்கு பெரூ, சீலே என்ற இரண்டு தேசங்களைப் பற்றியும், அதன் மக்களைப் பற்றியும், அவர்களின் மொழி கலாச்சாரம் பற்றியும், பாரம்பரியம் பற்றியும் புரிந்து கொள்ள உதவக் கூடியவை.  நமக்கு மிகவும் அந்நியமான ஒரு கலாச்சாரத்தின் சாளரங்களைத் திறக்கக் கூடியவை.   சுற்றுலாப் பயணியாகச் சென்று ஒரு தேசத்தை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?  அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு வந்து தாஜ்மகாலையும் தஞ்சை பெரிய கோவிலையும் பார்த்து விட்டுப் போனால் அது இந்தியாவைப் பார்த்ததாக ஆகி விடுமா?  கிருஷ்ண ராஜ் அங்கேயே இருபது ஆண்டுகளாக வாழ்பவர்.  அதிலும் தாக்னா சீலே – பெரூ எல்லைப் பகுதியில் உள்ள ஊர்.  பெரூவில் உள்ள தாக்னாவிலிருந்து சீலேவில் உள்ள அரிக்கா என்ற ஊர் 55 கி.மீ. தூரத்தில்தான் உள்ளது.  அதனால் கிருஷ்ண ராஜுக்கு சீலேவும் சொந்தம்தான்.  தொழில் நிமித்தமாக சீலேவில் அதிகம் சுற்றுபவர் என்பதால் அவருக்கு இரண்டு நாடுகளும் அத்துப்படி.  நான் சந்த்தியாகோவில் எட்டு தினங்கள் தனியாக ரொபர்த்தோ என்ற கைடுடன் சுற்றிக் கொண்டிருந்த போது இரண்டு மூன்று தினங்கள் தாக்னா சென்றிருக்க முடியும்.  அல்லது, கிருஷ்ண ராஜ் சந்த்தியாகோ வந்திருக்கலாம்.  இதுவரை நான் கிருஷ்ண ராஜை சந்தித்ததில்லை.  ஆனால் நான் பெரூவும் சீலேவும் சென்ற போது கிருஷ்ண ராஜ் ஐரோப்பா சென்று விட்டபடியால் சந்திக்க முடியாமல் போயிற்று. 

அவர் சென்ற அத்தியாயத்தைப் படித்து சில கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.  சில பிழைகளையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.  முதலில் Iquique உச்சரிப்பு.  நான் இக்கீக்கே என்று எழுதியிருந்தேன்.  Que (what, that) என்ற ஸ்பானிஷ் வார்த்தையை ‘கே’ என்று உச்சரிப்பார்கள்.  ஆனால் இங்கே Iquique என்பது ஸ்பானிஷ் வார்த்தை அல்ல.  அய்மாரா வார்த்தை.  அய்மாராவில் அது இக்கீக்கே அல்ல.  இக்கிக்கி.  இக்கிக்கி என்ற அய்மாரா மொழி வார்த்தைக்கு ஸ்பானிஷில் sueño.  சுவஞோ என்றால் தூக்கம் அல்லது கனவு அல்லது ஓய்வெடுக்கும் இடம்.  மலையிலிருந்து வந்த அய்மாரா மக்கள் ஓய்வெடுக்கும் இடம் இக்கிக்கி.  அய்மாரா மொழி ஆந்தேஸ் (Andes) மலைப்பகுதி மக்களின் மொழி.  தென்னமெரிக்காவின் ஆதிமொழி.  பொலிவியாவில் ஸ்பானிஷும் அய்மாராவும் தேசிய மொழிகள்.  இந்த மொழி பேசும் மக்கள் இப்போது பொலிவியா, பெரூ, சீலே ஆகிய நாடுகளில் இருக்கிறார்கள்.  என்னுடைய பெரூவிய கைடு ஒருவரின் தாய்மொழி அய்மாரா என்றார்.  அவரை அய்மாராவில் இந்த இடங்களையெல்லாம் விளக்குங்கள் என்றார் என்னோடு பயணித்த ரவி ஷங்கர்.  அவரால் அது முடியவில்லை.  ”ஏனென்றால், அய்மாராவில் நான் இதையெல்லாம் இதுவரை பேசியதில்லை” என்றார்.   அய்மாரா பேசுபவர்கள் மொத்தமாகவே 20 லட்சம் பேருக்குள்தான் இருப்பார்கள். 

இக்கிக்கி நகரில் திரண்டிருந்த தொழிலாளர்களையும் அவர்களது பெண்களையும் குழந்தைகளையும் சுட்டுக் கொன்ற ஸில்வா ரெனார்ட் முதலில் 140 பேர்தான் கொல்லப்பட்டதாக அறிக்கை கொடுத்தார்.  தாராபாக்கா மாநில கவர்னரும் அதையேதான் உறுதிப்படுத்தினார்.  ஆனால் சமூகநீதித் துறை இறந்தவர்களின் எண்ணிக்கையை 3600-ஆக உயர்த்தியது.  (சென்ற கட்டுரையில் வந்த 7000 என்ற எண்ணிக்கை தவறு.)  இந்த உண்மையெல்லாம் சம்பவம் நடந்து பத்து ஆண்டுகள் கழிந்த பிறகே – அதாவது 1917-இல்தான் –  வெளியிலேயே வந்தது.  

சீலே பாடகர் லூயிஸ் ஆத்விஸ் (Luis Advis) 1907-இல் சாந்த்தா மரீயா பள்ளியில் நடந்த அந்தப் படுகொலைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பாடிய பாடல் “Cantata de Santa Maria de Iquique” இன்றளவும் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது.  லூயிஸ் ஆத்விஸ் இந்தப் பாடலை 1969-இல் இயற்றினார்.  அதை நாம் பின்வரும் இணைப்பில் கேட்கலாம்.

இந்தத் திருத்தங்களையும் தகவல்களையும் கிருஷ்ண ராஜ் அனுப்பியிருந்தார்.  ஆனால் எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், பாப்லோ நெரூதாவின் Memoirs-இலேயே சில தகவல்கள் தவறாக வந்துள்ளன.  உதாரணமாக, சாந்த்தா மரீயா சம்பவம்  1906-இல் நடந்ததாக எழுதியிருக்கிறார்.  பதிப்பாளர்களும் அதைத் திருத்தவில்லை.  இந்தியாவின் சிப்பாய்க் கலகம் என்ற முதல் சுதந்திரப் போர் 1858-இல் நடந்ததாக எழுதுவதைப் போன்ற பிழை இது. 

எனக்கு சாந்த்தா மரீயா பள்ளிச் சம்பவம் பற்றி முதலில் தெரிய வந்ததே பாப்லோ நெரூதாவின் ’நினைவுக் குறிப்புகள்’ நூலிலிருந்துதான்.  அவர் பல்வேறு நாடுகளில் தூதராக இருந்து விட்டு 1943-இல் சீலே திரும்பினார்.  அடுத்து இரண்டு ஆண்டுகளில் அத்தாகாமா மக்கள் பாப்லோ நெரூதாவைத் தங்கள் செனட்டராகத் தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்கள்.  அதே சமயத்தில் அவர் சீலே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.  அந்தக் காலகட்டம் அத்தாகாமாவிலும் பாப்லோ நெரூதாவின் வாழ்விலும் மிகப் பெரும் திருப்பங்களை ஏற்படுத்துவதாக இருந்தது.  1946-இல் நடந்த அதிபர் தேர்தலில் காப்ரியல் கோன்ஸாலஸ் விதேலா ரேடிகல் பார்ட்டியின் வேட்பாளராக நின்றார்.  கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற இடதுசாரிகளும் விதேலாவை ஆதரித்தன.  நெரூதாவைத் தனது தேர்தல் பிராச்சாரக் குழுத் தலைவராக பொறுப்பேற்கும்படி கேட்டுக் கொண்டார் விதேலா.  நெரூதாவும் அதற்கு சம்மதித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.  விதேலா அதிபர் ஆனார்.  அதிபர் ஆனவுடனேயே கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தார்.  1947-இல் அத்தாகாமாவில் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  உடனே அவர்களைக் கைது செய்து வதைக் கொட்டடியில் (concentration camp) அடைத்தார் விதேலா.  அப்போது பாராளுமன்றத்தில் நெரூதா ஆற்றிய உரை – Yo acuso (நான் குற்றம் சாட்டுகிறேன்) –  சீலேயின் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக மாறியது.

உடனே நெரூதாவைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டதால் அவர் தலைமறைவானார்.  அவர் பிறந்து வளர்ந்த வால்பரைஸோ நகரில் நண்பர்களின் வீடுகளின் பாதாள அறைகளில் பதிமூன்று மாதங்கள் வீடு வீடாக மறைந்து வாழ்ந்தார்.  அதன் பிறகு தென்சீலேவில் உள்ள வால்திவியா நகரில் சில காலம் தலைமறைவாக இருந்து, பின்னர் குதிரையில் ஏறி ஆந்தெஸ் மலைகளின் வழியாக அர்ஹெந்த்தினாவுக்குத் தப்பிச் சென்றார். 

அத்தாகாமாவின் மக்கள் பிரதிநிதியாக (செனட்டர்) இருந்த போது அந்தப் பாலைவனத்தில் அவர் முடிவின்றி சுற்றி அலைந்திருக்கிறார்.  மனிதர்களோ வேறு எந்த உயிரினமோ இல்லாத ஏதோ ஒரு வேற்றுக் கிரகத்தைப் போல்  இருந்ததாக எழுதுகிறார் நெரூதா.  அத்தாகாமா பாலைவனத்துக்குச் செல்பவர்கள் அத்தனை பேருமே அது செவ்வாய்க் கிரகத்தைப் போல் இருப்பதாகச் சொல்கிறார்கள்.  கடல் மட்டத்தை விட்டு 8000 அடி உயரத்தில் இருப்பதாலும் வானத்தில் தூசுப் படலம் இல்லாததாலும் நட்சத்திரங்கள் வெகு அடர்த்தியாகவும் பெரிதாகவும் நம் கையருகே இருப்பது போல் இருக்கும்.  அதன் காரணமாகவே அந்தப் பிரதேசத்தில் விண்வெளி ஆய்வு நிலையங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன.  ஆனால் நெரூதா பிறந்து வளர்ந்ததெல்லாம் இதற்கு நேர் எதிரான பசுமையான, வளமான நிலப்பரப்பு.  வனங்கள் சூழ்ந்த பகுதி.  அதனால் அவருக்கு அத்தாகாமா ஒரு வேற்றுக் கிரகத்தைப் போலவே இருந்திருக்கிறது. 

”நிர்வாணமாகவும் இறுக்கமாகவும் கிடந்தது அந்தப் பாலைநிலம்.  ஒரு செடி இல்லை.  ஒரு பச்சை இல்லை.  ஒரு துளி நீர் இல்லை.  என்னவென்றே புரிந்து கொள்ள முடியாத புதிர்.  ஆனால் காடுகளும் நதிகளும் நம்மோடு பேசிக் கொண்டே இருப்பவை.  மாறாக இந்தப் பாலை நம்மோடு பேசுவதே இல்லை.  எனக்கு இதன் மொழி புரியவில்லை.  ஏனென்றால், அதன் மொழி, மௌனம்.”

இப்படிப்பட்ட பிராந்தியத்தில் சிதறிக் கிடக்கும் ஒவ்வொரு தொழிலாளியின் வீட்டிலும் சென்று தங்கியிருக்கிறார் நெரூதா.  படுக்க ஒரு பாய் கூட இல்லை.  பழந்துணிகளைப் போட்டுத்தான் படுத்து உறங்குகிறார்கள்.  அவரும் அவர்களோடு அப்படித்தான் உறங்கியிருக்கிறார்…

நெரூதாவைச் சந்திக்கும் போதெல்லாம் ஒவ்வொரு தொழிலாளியும் அவரைக் கவிதை வாசிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.  புரிந்ததோ இல்லையோ, நெரூதாவும் வாசிப்பார்.  சமயங்களில் ஃப்ரெஞ்சுக் கவிகளின் கவிதைகளையும் வாசிப்பார்…

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai