லெபனான்

லெபனான்

அவர் மைலாப்பூர்வாசி.  மற்றொரு மைலாப்பூர்வாசியின் மூலம் 35 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம்.  தொலைக்காட்சி மூலம் அரசியலை அலசும் சமூக ஆர்வலர்.  அப்படிப்பட்ட ஆர்வலர்களுக்கெல்லாம் இவர் முன்னோடி.  மற்றபடி அவரைப் பற்றி எனக்கும் என்னைப் பற்றி அவருக்கும் எதுவும் தெரியாது.  முகம் தெரியும்.  பெயர் தெரியும்.  என்னிடம் கடந்த 15 ஆண்டுகளாக வீட்டில் தொலைக்காட்சி இல்லை.  தொலைக்காட்சி வந்த நாளிலிருந்தே அதைப் பார்த்ததும் இல்லை என்பதால் அவ்விஷயத்தில் நான் ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆள்.  அதனால் சமூக ஆர்வலரின் கருத்துக்கள் பற்றியோ அவரது அரசியல் நிலைப்பாடு பற்றியோ எதுவும் எனக்குத் தெரியாது. 

நானும் ராமசேஷனும் ராகவனும் இப்போதெல்லாம் தினமும் பாரதி மெஸ்ஸில்தான் சாப்பிடுகிறோம்.  அதாவது, நானும் ராமசேஷனும் சாப்பிடுவோம்.  ராகவன் கேழ்வரகுக் கஞ்சி குடிப்பார்.  சனி ஞாயிறுகளில் மட்டும் சாப்பாட்டில் இணைந்து கொள்வார்.  சனி ஞாயிறுகளில் ராமசேஷனுக்கு அலுவலக விடுமுறை.  ராகவனுக்கு பள்ளி விடுமுறை (பேத்தி).  அதனால் சனி ஞாயிறுகளில் மட்டும் சாவகாசமாகச் சாப்பிட்டு விட்டு வரலாம் என்பதால் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சங்கீதாவுக்குப் போய் விடுவோம்.  சங்கீதாவில் கிடைக்கும் பெங்களூர் தோசைக்கு ஈடு இணை இல்லை.  இன்னொன்று, துப்பா தோசை.  அது நெய் தோசை.  இரண்டுமே ரகளை என்றாலும் என் விருப்பம் பெங்களூர் தோசை.  அதனால் சனிக்கிழமை எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருப்பேன்.  திடீரென்று ஸஹானாவுக்கு (ராகவனின் பேத்தி) விடுமுறை என்றாலும் எனக்குக் குஷியாகி விடும்.  சங்கீதா போகலாம். 

இப்படியாகப்பட்ட பின்னணியில் இப்போதெல்லாம் தினந்தோறும் அந்தத் தொலைக்காட்சி சமூக ஆர்வலரை பாரதி மெஸ்ஸில் சந்திப்பது வழக்கம்.  இன்று அவர் என்னிடம் என் தொலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கினார்.  என்னவென்றால், அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் லெபனான் புரட்சி பற்றிப் பேச வேண்டும்.  நான் லெபனான் சென்று வந்தேன் அல்லவா?  அதிலும் நான் சென்ற போதுதானே புரட்சியும் வெடித்தது?  அதனால் அந்தக் கதைகளை என்னிடம் தொலைபேசியில் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டு தொலைக்காட்சியில் பேச வேண்டும்.  மிகவும் நாகரீகமாக, “எப்போது அழைத்தால் சௌகரியமாக இருக்கும்?” என்றெல்லாம் கேட்டார்.  “எப்போது வேண்டுமானாலும் அழையுங்கள்” என்றேன்.  (எடுத்தால்தானே?) 

நினைத்துக் கொண்டேன்.  ”பத்து ஆண்டுகளாகக் கர மைதுனம் செய்து கொண்டிருக்கிறேன், கொஞ்சம் உங்கள் தாரத்தோடு படுத்துக் கொள்ள முடியுமா?” என்று ஒருத்தரிடம் கேட்டால் அது எப்படியோ அப்படித்தான் அந்த சமூக ஆர்வலர் என்னிடம் கேட்டதும்.  ஏனய்யா, intellectual property என்று எதுவும் கிடையாதா?  என் வாசகர்கள் கொடுத்த பணத்தில் உயிரைப் பணயம் வைத்துப் போய் வந்திருக்கிறேன்.  திரும்பி வரும் போது விமான நிலையத்துக்குச் செல்லும் சாலை அடைக்கப்பட்டிருந்தால் திரும்பித்தான் போக வேண்டியிருக்கும்.  திரும்பும் பயணத்தை மூன்கூட்டிப் போட்டு விட்டதால் புதிய விமான டிக்கட் எடுக்கும்படி ஆயிற்று.  எல்லாமே இரட்டிப்புச் செலவு.  ஒரு வாரத்துக்கு முன்னாலேயே துபய் போய் விட்டதால் ஹில்டன் ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஒரு வாரம் அதிகப்படியாகத் தங்கும்படி ஆயிற்று.  எல்லாமே இரட்டிப்புச் செலவு.  இவருக்கு நான் தொலைபேசியில் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும்.  இவர் நோட்ஸ் எடுத்துக் கொண்டு தொலைக்காட்சியில் பேசுவார்.  எப்படி இருக்கிறது கதை?  மேலே நான் சொன்ன உதாரணம் சரிதானே?  படித்தவர்களின் நிலையே இப்படி இருக்கிறது என்றால் படிக்காத பாமரர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள். 

ஷார்ஜா புத்தக விழாவில் ஸீரோ டிகிரி அரங்கத்தில் அமர்ந்திருந்தேன்.  அப்போது அங்கே வந்த ஒரு மலையாள எழுத்தாளர் மறுநாள் புத்தக விழாவில் நடக்க இருக்கும் அவருடைய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்து பேசுமாறு என்னை அன்புடன் அழைத்தார். நான் கேரளத்தில் ஒரு ஸ்டார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.  மறுநாள் மாலை ஐந்து மணிக்கு ஷார்ஜா புத்தக விழாவில் நிகழ்ச்சி.  வருவதாக ஒப்புக் கொண்டேன்.  ஆனால் மறுநாள் ஏழு மணிக்குத்தான் ஓட்டலிலிருந்தே கிளம்பினேன். அந்த எழுத்தாளர் ஸீரோ டிகிரி அரங்கில் வந்து கேட்டு நான் இல்லாததால் மிகவும் வருத்தத்துடன் சென்றதாக நண்பர் சொன்னார்.  ஒருவரை வருத்தப்பட வைத்ததற்காகவும், ஒருவரை ஏமாற்றமடைய வைத்ததற்காகவும் எனக்கும் வருத்தமாகவே இருந்தது.  ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை.  ஏனென்றால், எனக்கு வேறு சாய்ஸ் இல்லை.  “’ஏன், என்னால் வர முடியாது’ என்று முகத்துக்கு நேராகச் சொல்லியிருக்கலாமே?” என்று என்னைக் கேட்டார் நண்பர்.  ஒவ்வொருவரின் மன இயல்பும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது.  எனக்கு முகத்துக்கு நேராக எதிர்மறையாகப் பேசிப் பழக்கம் இல்லை.  என்னிடம் அந்த மலையாள எழுத்தாளர் “உங்களால் வர முடியுமா, வர விருப்பம் உண்டா?” என்றெல்லாம் கேட்கவில்லை.  வந்து விடுங்கள் என்றார்.  சரி என்றேன்.  அத்தோடு உரையாடல் முடிந்து விட்டது. இது நடந்த மூன்றாவது நாளும் அவருக்கு ஒரு புத்தக வெளியீட்டு விழா இருந்தது.  ஷார்ஜா புத்தக விழாவில்.  அன்றைய தினமும் அவர் என்னிடம் வந்து வெளியீட்டு விழாவுக்கு வரச் சொன்னார்.  இரவு ஒன்பது மணிக்கு.  வருகிறேன் என்றேன்.  எட்டரைக்கே ஸீரோ டிகிரி அரங்கிலிருந்து நான் ஓட்டலுக்குக் கிளம்பவும் அருகிலிருந்த நண்பர், “என்னால் வர இயலாது என்று சொல்லியிருக்கலாமே?  ஏன் இத்தனை rude-ஆக நடந்து கொள்கிறீர்கள்?” என்றார்.  என்னால் மனமறிந்து யாரிடமும் rude-ஆக நடந்து கொள்ள முடியாது.  அது என்னால் இயலவே இயலாது.  நான் இப்போதே கிளம்புவதன் மூலம் எனக்கு வந்த இக்கட்டிலிருந்து தப்பிக்கிறேன்.  திரும்பவும் அதே கேள்வி.  “’ஏன், என்னால் வர இயலாது’ என்று நேரடியாகச் சொல்ல வேண்டியதுதானே?”  திரும்பவும் அதே பதில்.  எனக்கு அவர் சாய்ஸே கொடுக்கவில்லையே?  வரச் சொன்னார்.  வருகிறேன் என்றேன்.   

இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் நான் செய்தது சரி அல்ல என்றே தோன்றும்.  வேறொரு உதாரணம் தருகிறேன்.  அப்போது புரியும் பாருங்கள்.  சுஜித் பாலகிருஷ்ணன் என்று ஒரு இளைஞர்.  மலையாள எழுத்தாளர்.  அவருடைய நாவல் ஒன்று – The Chronicle of Golgotha Days –       ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளது. துபயில் வசிக்கிறார்.  அவர் ஒரு ஆன்லைன் பத்திரிகைக்கு என்னிடம் பேட்டி கேட்டார்.  அதன் பொருட்டு ஒரு நாள் என்னிடம் நேரம் கேட்டு என்னை எனக்குப் பிடித்த மலையாள உணவகத்துக்கு அழைத்துச் சென்றார்.  ஆதாமிண்ட சாயாக் கடை என்ற அந்த உணவகத்தில் கிடைக்கும் கேரள உணவைப் போல் கேரளத்தில் கூட நான் சாப்பிட்டதில்லை.  அது பற்றி விரிவாக அப்புறம் சொல்கிறேன்.  கையோடு நான் ஷார்ஜாவில் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த இரண்டு லெபனிய நாவல்களை வாங்கி வந்திருந்தார்.  இரண்டும் சேர்த்து 200 திர்ஹாம்.  பேட்டி முடிந்ததும் என்னைத் தன் காரிலேயே ஷார்ஜா புத்தக விழாவில் கொண்டு போய் விட்டார்.  இதற்காக அவர் ஒருநாள் முழுதும் தன் அலுவலகத்தில் விடுப்பு எடுத்திருந்தார். 

மேலே என்னைத் தன் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்த எழுத்தாளரின் அழைப்புக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறதா? மேலும் இரண்டு உதாரணங்கள் தர விரும்புகிறேன்.  இப்போது என்னிடம் 15 பூனைகள் ஆகி விட்டன.  எங்கள் பென்ஷன் பணத்தில் குடும்பத்தை ஓட்டி விடுவாள் அவந்திகா.  மற்றபடி 15 பூனைகளுக்கும் நான் உணவு தர வேண்டும். அதோடு, என்னுடைய எழுத்து வாழ்க்கை, பயணம் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்.  இதற்காகத்தான் சந்தா கேட்கிறேன்.  சிலர் அனுப்பவும் செய்கிறார்கள்.  இரண்டு மூன்று பேர் பூனை உணவுக்கு உதவி செய்கிறார்கள்.  ஆனால் – இதில் எதுவும் பங்கேற்காமல் என் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வா, என் திருமணத்துக்கு வந்து என்னை வாழ்த்து என்று சொன்னால் நான் அவர்களிடமெல்லாம் என் பாணியில் rude-ஆக நடந்து கொள்ளாமல் வேறு என்ன செய்ய?  ஷார்ஜா புத்தக விழாவுக்கு என் ஓட்டலிலிருந்து வர டாக்ஸிக்கு என்ன செய்வீர்கள், அதற்கு ஏற்பாடு செய்யவா என்று கூடக் கேட்காமல் ஏதோ வழியில் பார்த்து வாருங்கள் என்று சொன்னால் வருகிறேன் என்று சொல்லி விட்டு ஓடித்தான் ஒளிவேன்.  அவர்களிடமெல்லாம் நான் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது.  என்னால் வர இயலாது என்று நான் ஏன் சொல்ல வேண்டும்?  சொன்னால் வரச் சொல்லி வற்புறுத்துவார்கள்.  அது அதை விட தர்மசங்கடமானது இல்லையா?  அதை விட வருகிறேன் என்று சொல்லி விட்டுத் தப்பி விடுவது லகுவாயிற்றே?  அய்யனாரிடம் நான் சொன்னேன்.  ஏற்கனவே குடும்பத்துக்காக நாம் மூச்சு முட்டும் வரை சமரசம் செய்து கொண்டு வாழ்கிறோம்.  மற்றபடி அன்றாட வாழ்க்கையிலும் ஏன் சமரசம் செய்து கொள்ள வேண்டும்?  ஒரு சின்ன பேட்டிக்காக ஒரு முழுநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு சுஜித் பாலகிருஷ்ணன் அன்றைய தினம் முழுவதும் என்னோடு இருந்தார்.  துபய் பூராவும் சுற்றிக் காண்பிக்கிறேன் என்றார்.  200 திர்ஹாம் செலவு செய்து இரண்டு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார்.  எதுவுமே செய்ய மாட்டேன், ஆனால் நீ திருமணத்துக்கு வந்து வாழ்த்து, புத்தக வெளியீட்டு விழாவுக்கு வா என்றால் என்னய்யா அர்த்தம்?  நான் என் பூனைகளுக்கு எப்படி சாப்பாடு கொடுப்பேன்?

ஒரு பேச்சாளர் இருக்கிறார்.  அவர் மீது எனக்கு அத்தனை மரியாதை கிடையாது.  ஆனால் பேச்சு பிரமாதமாக இருக்கும்.  அருவி என்றால் அருவி போல் கொட்டும் பேச்சு.  அவர் ஒரு பேச்சுக்கு ஒரு லட்சம் வாங்குகிறார்.  இது அவருக்கு.  அதைத் தவிர அவர் வைத்திருக்கும் முதியோர் இல்லத்துக்கு 20000 ரூ. நன்கொடை கொடுக்க வேண்டும். 

உங்களுடைய ஹீரோ அப்துல் கலாம் இருக்கிறாரே, லஞ்சம் வாங்காதவர்.  வள்ளுவர் வழி வாழ்ந்தவர்.  அதிலெல்லாம் ஒன்றும் சந்தேகமே இல்லை.  அவருக்குப் பிடித்த எழுத்தாளர் வைரமுத்து.  பிடித்த சிந்தனையாளர் நடிகர் விவேக்.  அதுதான் என் பிரச்சினை.  அதை விடுங்கள். அது என் பிரச்சினை கூட அல்ல. அவரை ஹீரோவாகக் கொண்டாடும் உங்கள் பிரச்சினை அது.  அவர் எழுதிய புத்தகங்கள் ரெண்டு லட்சம் மூணு லட்சம் எல்லாம் போனது.  அதில் ஒரு பகுதி எப்படி விற்றது என்றால் – அவரைப் பேச அழைக்கும் கல்லூரிகள் பள்ளிகளில் அவர் புத்தகத்தை 500 பிரதிகள் விலை கொடுத்து வாங்க வேண்டும்.  இப்படித்தான் நடந்தது.  இதில் எந்தத் தவறும் இல்லை.  ஆனால் எழுத்தாளன் விஷயத்தில் மட்டும் ஏன் ஓசியாகவே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? 

இப்போது அந்த மைலாப்பூர் தொலைக்காட்சி சமூக ஆர்வலருக்கு வருவோம்.  ராகவனிடம் சொன்னேன்.  நானும் 15 ஆண்டுகளாக மைலாப்பூரில் வாழ்கிறேன்.  எனக்கும் கொஞ்சம் மைலாப்பூர் வாசனை வராமலா இருந்து விடும்? இன்னும் அஞ்சாறு தினங்களுக்கு எனக்குத் தெரியாத நம்பரிலிருந்து அழைப்பு வந்தால் எடுக்கவே மாட்டேன் என்றேன். 

இதுவரை ஒரு பைசா சந்தா கட்டவில்லை. ஆனால் திருமணத்துக்கு அழைக்கிறார்.  அந்த வாசகர் இந்தக் கட்டுரையைப் படிக்கப் போவதில்லை.  ஆனால் அவருக்கு என் அன்பும் ஆசீர்வாதமும் என்றும் உண்டு.  40 ஆண்டுகளாக இலவசமாகத்தான் எழுதி வருகிறேன்.  உலகின் மீதான அன்பு மட்டுமே காரணம்.  இப்போதுதான் பணம் கேட்க ஆரம்பித்திருக்கிறேன்.  காரணம், பயணம், பூனைகள்.  அதிலும் பத்திரிகைகள் ஒரு கட்டுரைக்கு 1000 ரூ. அனுப்புகின்றன.  அல்லது, அதிக பட்சம் ஒரு கட்டுரைக்கு 1500 ரூ.  நியாயமாக எவ்வளவு தர வேண்டும் தெரியுமா?  ஒரு கட்டுரைக்கு 15000 ரூ. அதுதான் சரியான சன்மானம்.  ஏனென்றால், 20 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தினசரியில் ஒரு கட்டுரைக்கு ஒரு கதைக்கு 5000 கொடுத்தார்கள்.  ஆனால் அதுவும் அதிலேயே நின்று கொண்டிருக்கிறது.

இன்னொரு அன்பர்.  லண்டனில் வசித்தார்.  அப்போது வாரம் ஒருமுறை என்னை ஃபோனில் அழைப்பார்.  என்னுடைய சினிமா விமர்சனம், மற்ற கட்டுரைகள் பற்றிப் பேசுவார்.  பேச்சு அரை மணி நேரத்துக்கு மேல் போகும்.  கடைசியாக நான்தான் ”வேலை இருக்கிறது, பிறகு பேசுகிறேன்” என்று சொல்லி போனை வைப்பேன்.  அந்த அன்பர் சென்ற ஆண்டு சென்னை வந்தார்.  வருவதற்கு முன் வழக்கம்போல் எல்லா வெளிநாட்டு வாசகர்களும் எல்லா எழுத்தாளர்களையும் கேட்பது போல் என்ன வாங்கி வர வேண்டும் என்று கேட்டார். நான் என் வழக்கப்படி ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.  ஏனென்றால், இப்படிக் கேட்பவர்கள் யாரும் வாங்கி வருவது இருக்கட்டும், நேரில் வந்து பார்ப்பது கூட இல்லை.  அதை நான் புரிந்து கொள்ளவும் செய்கிறேன்.  பத்து நாள் விடுப்பில் வருவார்கள்.  அல்லது அதிகப் பட்சம் ஒரு மாத விடுப்பு.  அதில் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போய் 15 நாள் போய் விடும்.  மீதி 15 நாள் உறவினர் வீடுகள்.  இதில் எழுத்தாளனை எங்கே போய்ப் பார்ப்பது?  ஆனால் பிரச்சினை என்னவென்றால், இதெல்லாம் நன்றாகத் தெரிந்தும் இங்கிருந்து உங்களுக்கு என்ன வேண்டும் என்றும், எப்போது சந்திக்கலாம் என்றும் திரும்பத் திரும்ப என்னைக் கேட்பதுதான். எனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச அறிவு கூட இவர்களுக்கு இல்லையா என்று நினைத்துக் கொள்வேன்.  லண்டன் அன்பரும் கேட்டார்.  யோவ், முதலில் நீர் இங்கே வாரும் ஐயா, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் எல்லாவற்றையும் என்றேன்.  ஆசாமி வந்தார்.  ஒரு வாரம் கழித்துப் பேசினார்.  எப்போது பார்க்கலாம் என்றார்.  எப்போது வேண்டுமானாலும் என்றேன்.  அதற்குப் பிறகு ஆறு மாதங்கள் கழித்து ஆசாமியிடமிருந்து போன்.  முழு மப்பு.  மகாபலிபுரம்.  ”வந்து ஆறு மாசம் ஆச்சு தல.  எப்பவும் உன் நெனப்புதான் தல.  (உருப்பட மாட்டாய்!)  எப்போ பார்க்கலாம்?”  ”எப்போ வேண்டுமானாலும்.”  “நாளையே அழைக்கிறேன், இந்த வாரமே சந்தித்து விடலாம்” என்று சொல்லி விட்டு பெரிதாக ஏதோ ஒரு சப்ஜெக்டை ஆரம்பித்தார்.  நான் உடனே, “இதோ கொஞ்சம் வேலையா போய்ட்டு இருக்கேன்.  நாளைக்கு அழைக்கிறேன்” என்று சொல்லி விட்டு போனைத் துண்டித்து விட்டேன்.  அதற்குப் பிறகு எந்தத் தகவலும் இல்லாமல் நேற்று அவரிடமிருந்து போன்.  ஒரு ஆண்டு இந்தியாவில் இருந்து விட்டு சென்ற வாரம் இங்கிலாந்து திரும்பி விட்டாராம். இப்போது திரும்பவும் – பெண்களாக இருந்தால் டில்டோ – ஆண் இல்லையா?  கூப்பிடு சாருவை.  Bloody assholes… என்று மனதிற்குள் சொன்னபடி அந்த அன்பரின் நம்பரை போனில் ப்ளாக் செய்தேன்.   

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai