சூம்பி – சிறுகதை – அராத்து

சிறுகதை பற்றி: சிறுகதை வடிவமே செத்து விட்டது என்று சில ஆண்டுகளுக்கு முன்பு நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் முராகாமியின் சிறுகதைகளைப் படித்த போது அந்த என் கருத்தை மாற்றிக் கொண்டேன். பிறகு அராத்துவின் சிறுகதைகள். இந்தக் கதையின் போக்கில் சில இடங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளன. அதையெல்லாம் புத்தகமாக வரும் போது திருத்திக் கொள்ளலாம். பிரசுரத்துக்குப் போகும் முன்பே கொடுத்திருந்தால் திருத்திக் கொடுத்திருப்பேன். இந்தக் கதையை அச்சுக்காக சீனி கடுமையாக மாற்றியிருக்கிறார். என்னிடம் சொன்னபடியே பு, சு போன்ற cuss wordsஐப் போட்டு எழுதியிருந்தால் இன்னும் எங்கேயோ போய் இருக்கும். பின்வரும் கதை நடந்த கதை. ஒழிவு திவசத்தக் களி போன்ற ஒரு அட்டகாசமான கதை. சொல்லப் போனால் அதை விடவும் இது நல்ல கதை. ஏனென்றால், ஒழிவு திவசத்தக் களியில் ஒரு சமூகவியல் பார்வை இருந்தது. இதில் வெறும் absurdityதான். இந்த absurdity நவீன வாழ்க்கை கொடுத்தது. பழமை மறைந்து புதுமையை எதிர்கொள்ள முடியாத வாலிபர்களின் absurdity இது. இது ஒரு மாபெரும் சிறுகதை. நவயுக வாழ்வின் ஒரு துளி. அவ்வகையில் இது ஒரு மகத்தான சிறுகதை. இன்னும் சொல்லப் போனால், எழுத்தை விட கதையைச் சொல்வது இன்னும் இதை மேலே எடுத்துச் செல்லும். அராத்து இதை அப்படியே ஓர் இரவில் சொல்லக் கேட்டேன் நான். அந்தக் கதை சொல்லலில் கிடைத்த கதை இதை விடவும் சிறப்பானது. கதையின் உரையாடலை நடந்தபடியே கொடுத்திருந்தால் இன்னும் பல மடங்கு சிறப்பாகியிருக்கும். புண்டை, சுன்னி என்ற வார்த்தைகள் வந்தால் என்ன? கதை அப்படித்தானே நடந்தது? இருந்தாலும் இந்தக் கதை நான் தமிழில் படித்த மறக்க முடியாத கதைகளில் ஒன்று. பிழைகள் திருத்தப்பட வேண்டும்.

சீனிக்கு ஒரு அன்பு வேண்டுகோள்: கதை narration-இல் நீங்கள் சென்ஸார் செய்யாமல் கதாபாத்திரங்கள் பேசினபடியே கெட்ட வார்த்தைகளை அப்படி அப்படியே பெய்து வெளியிட்டால் நலம். அட்லீஸ்ட் புத்தகத்திலாவது…

இனி வருவது கதை…

சாரு.

ஒரு பெரிய மாமரத்தின் அடியில் சிறிய சூரிய விளக்குகளை வெளிச்சத்துக்காக வைத்துக்கொண்டு , இருவர் அமர்ந்திருக்கிறார்கள் தெரிகிறதா ? இதை நாம் பத்து அடி தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு கட்டில் நடுவே இருக்கிறது , அதன் ஒரு மூலைக்கு அருகில் இரண்டு பக்கங்களில் சூம்பியும் ஒடப்புவும் நாற்காலிகளில் அமர்ந்து இருப்பது தெரிகிறதுதானே ?

சூம்பி , பிராந்தியை உடைத்து , கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலந்து கொண்டிருக்கிறான். ஒடப்பு தன் பற்களால் பியரை உடைத்துக்கொண்டு இருக்கிறான். மேலே நிலா , சூரியனிடம் இருந்து கடன் வாங்கிய வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டே , சூரிய விளக்குகளை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டு இருக்கிறது.

அந்த இருவருக்கு நடுவே ஒருவன் அமர்ந்திருக்கிறானா? தெரியவில்லையா ? ஆம் தெரியமாட்டான். அவன் மாயை. இந்தக் கதையை சொல்ல ஒருவன் வேண்டுமல்லவா ? அவன் தான் அவன். கதையைச் சொல்ல வேண்டுமென்பதால் அங்கே இருக்கிறானே ஒழிய , நடக்க இருக்கும் கதையின் போக்கு அவனால் மாறவே மாறாது.

அவர்கள் இருவரும் குடிக்க ஆரம்பிப்பதற்கு முன் இந்த இடத்தைப் பற்றி தெரிந்து கொண்டு விடலாம். கிட்டத் தட்ட வனம் போலத்தான். மின்சாரம் கிடையாது , தோப்பு. நான்கு கிலோ மீட்டர்கள் வரை நடந்து சென்றால்தான் மண் சாலையையே அடைய முடியும். நடுவே ஒரு காட்டாறு ஓடுகிறது. இரவுகளில் காட்டெருமை , காட்டுப்பன்னிகள் உலாவும் இடம். இந்த தோப்புக்கு மின்சார வேலி அமைத்திருக்கிறார்கள்.

சூம்பி , அரை கிளாஸை ஒரு கமத்து கமத்தி விட்டு கீழே வைத்தான். ஒடப்பு பொங்கிய நுரையை ஒரு உறிஞ்சு உறிஞ்சி விட்டு , மீசையில் ஒட்டிய நுரையை நாவால் கக்கிக்கொண்டான்.

“சூம்பி , எனக்கு ஒரு டவுட் “

“சொல்லுங்க தல “

“நீங்க ஃபேஸ்புக்ல ஃபேமஸா இருக்கறதுக்கு குத்து மதிப்பா மாசம் எவ்ளோ செலவழிப்பீங்க ?”

சூம்பி மடக்கென்று மீதமுள்ள கிளாஸை எடுத்து கவுத்திக்கொண்டான்.

“அதான் சூம்பி , இந்த ஃபேமுக்கு , எல்லாருக்கும் சரக்கு வாங்கி குடுக்கறது , காசா குடுக்கறாதுன்னு எவ்ளோ செலவு பண்ணுவீங்க ?”

“இதுக்கு நீங்க என் வாயில காத்தடிச்சி இருக்கலாம்”

சூம்பி உறும ஆரம்பித்து இருப்பது ஒடப்புக்குத் தெரியவில்லை.

“சும்மா ஃபிரண்ட்லியாதான் கேட்டேன் , தெரிஞ்சிக்கலாம்னுதான் சூம்பி “

“இதுக்கு நீங்க என்னை முண்ட கட்டயா சேத்துல உருட்டி விட்டு பன்னிய விட்டு ரேப் பண்ணி இருக்கலாம் “

“தேவையில்லாம பேசாதீங்க சூம்பி , நான் சும்மா ஜெண்டிலாதான் கேட்டேன் “

“இந்த ஜெண்டில் லுண்டை எல்லாம் எனக்குத் தெரியாது , பெரிய புழுத்தி மாதிரி கேட்டுட்டு ஜெண்டில் லுண்டையாம் “

“ சீ , நான் ஜஸ்ட் கேட்டேன் , மரியாதை இல்லாம பேசறது எல்லாம் டூ மச் சூம்பி “

சூம்பி சிகரட் பற்ற வைத்துக்கொண்டான். கதையை எழுதுவதற்காக ,கண்ணுக்குத் தெரியாமல் அமர்ந்திருக்கும் மாய உருவத்தைப் பார்த்து சூம்பி பேசினான்.

“தல , என்னா தல இது , என்னை ரேப் பண்ணிட்டாரு தல . என் இடம் , கெஸ்டுன்னு பாக்கறேன் “

“ இதுக்குத்தான் நான் மரியாதை தெரியாதவங்க இடத்துக்கு வர்ரது இல்லை . ஐ ஆம் டூ மச் அப்ஸ்ட் “

“ஆமாங்க , நாங்க எல்லாம் மரியாதை தெரியாதவங்க , தொழிலாளி. நீங்க மொதலாளி. நலல வாய்லயே ஊழ்த்துட்டு போங்க “

“திஸ் ஈஸ் நாட் மேனர்ஸ் , கூப்டு வச்சி அவமானப் படுத்துறீங்க சூம்பி “

“யாரு நானா ? அப்ப கெளம்புங்க “

மணி இரவு 11 . இங்கே இருந்து போக ஒடப்புக்கு வண்டி ஏதும் இல்லை. இருப்பது சூம்பியின் பைக் மட்டும் தான்.

ஒடப்பு வீராவேசமாக எழுந்து விட்டான். சின்ன குடிலை நோக்கி நடக்கிறான். சூம்பி இரண்டாவது ரவுண்டை முடிக்கிறான். ஒடப்புக்கு பியரில் கடைசி களுக் பாக்கி இருக்கிறது. ஒடப்பு தன் உடைகளை பையில் போட்டு எடுத்துக்கொண்டு மீண்டும் கட்டிலுக்கு வருகிறான். மீதமிருக்கும் பியரை குடித்து முடிக்கிறான்.

“இப்ப எல்லாம் போகாதீங்க தல , ரிஸ்க் . ஏதாச்சும் வழில அடிச்சிடும். “

“நோ நோ , ஐ ஹேவ் டூ கோ . என்னால இங்க இருக்க முடியாது”

“தல , போனா பிரச்சனை ஆயிடும். உங்க கால்ல வேணா வுழுவறேன். போவாதீங்க ப்ளீஸ் “

ஒடப்பு காலில் சூம்பி விழ முயற்சிக்க …

“நோ நோ , ப்ளீஸ் சூம்பி இப்டில்லாம் பண்ணாதீங்க. உங்க மேல நான் எவ்ளோ ரெஸ்பெக்ட் வச்சிருக்கேன். கெடுத்துக்காதீங்க ப்ளீஸ்”

“ஒக்காருங்க தல , பீர் குடிங்க ப்ளீஸ் “

“பீர் வேணா குடிக்கிறேன் , பட் , நான் போயிடுவேன் “

ஒடப்பு இரண்டாவது பியரை குடிக்க ஆரம்பிக்கிறான். சூம்பி மூன்றாவது ரவுண்டை முடிக்கிறான்.

சூம்பி சிகரட் பற்ற வைத்துக்கொண்டே, நடந்து கொண்டிருக்கும் கதையை சொல்வதற்காக இருவருக்கும் இடையில் அமர்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படும் மாயை மனிதனிடம் , “தல , நாளைக்கு காலைல பக பகா வரான் என்றான்”

மாயை மனிதன் உண்மையில் ஏதும் பேச முடியாது . அப்படி பேசுவதாக சூம்பியும் ஒடப்பும் நினைத்துக்கொண்டாலும் , கதையை படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்குக் கேட்காது என்பதால் மாயை மனிதனின் பேச்சுகள் கதைக்குள் வராது.

“நான் காலைல போய் பக பகாவை பிக்கப் பண்ணி கூட்டியாந்துர்ரேன் தல .செம்மயா எஞ்சாய் செய்யலாம் “ என்றான் சூம்பி.

அதோடு விட்டிருக்கலாம். ஒடப்புக்கு காலைல பஸ் டிக்கட் போட்டு அனுப்பிடலாம் தல என்றான் சூம்பி.

குடித்துக்கொண்டிருந்த பியர் பாட்டிலை தன் வாயிலிருந்து தானே பிடுங்கினான் ஒடப்பு. கொஞ்சம் பியர் அவனது டி ஷர்டில் ஊற்றியது.

“ஐ ஆம் டிராவலிங்க் த்ரோ அவுட் இந்தியா …ஐ நோ எவ்ரிதிங்க். நீங்க என்னா எனக்கு டிக்கட் போடறது ? அவமானப் படுத்துறீங்களா ? இதெல்லாம் கூப்டு வச்சி சேத்தடிக்கிறது . ஐ கேன்னாட் ஸ்டே ஹியர் “

இப்படி கத்திய ஒடப்பு , பையை எடுத்துக்கொண்டு கிளம்ப முயற்சிக்கையில் ….

“தல ரூம்ல உங்க துண்டு ஜட்டில்லாம் காயிது ,அதையும் சேத்து எடுத்துட்டுப் போங்க “என்றான் சூம்பி .

ஒடப்பு வீரமாக துண்டையும் ஜட்டியையும் எடுக்கப் போவதற்கு முன் மிச்சம் இருந்த பியரை களக் களக் என கவுத்திக்கொண்டான். அறையை நோக்கி நடந்தான்.

“என்னா தல இப்டி பண்றாரு ? போயிடுவாரா ? போனா ரிஸ்க் தல “ என மாயை மனிதனிடம் பேச ஆரம்பித்தான் சூம்பி.

மீசை துடிக்கத் துடிக்க ஜட்டியையும் துண்டையும் சுருட்டி பைக்குள் வைத்துக்கொண்டிருக்கும் ஒடப்பு வைப் பார்த்தான் சூம்பி. மீசை போலவே தாடியும் துடித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. மனதை ஒருமுகப் படுத்திப் பார்த்தான் சூம்பி. கை ,கால் , தலைமுடி , பேண்ட் , டிஷர்ட் என அனைத்தும் துடித்துக்கொண்டிருந்தது தெரிந்தது.

திடீரென முடிவெடுத்த சூம்பி ஒரு ஸ்மால் ஊற்றி “ரா” வாக அடித்தான். எழுந்து நின்றான். தீர்மானமாக நடந்து சென்றான் ஒடப்பை நோக்கி .

இவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து , அந்த சின்ன அறை 200 அடி தூரத்தில் இருக்கும். மாயை மனிதனால் அங்கே நடந்த சம்பாஷணைகளை தெளிவாக கேட்க முடியவில்லை. நிலா வெளிச்சத்திலும் , சூரிய விளக்கின் உதவியாலும் , தூரத்தில் நடக்கும் நாடகக் காட்சிகளை பார்ப்பது போல இருந்தது.

பையை வைத்திருக்கும் ஒடப்புவின் காலை சூம்பி பிடிக்க முயற்சிக்க , ஒடப்பு காலை உறுவுக்கொண்டு பின்னால் ஒரு அடி போக , சூம்பி இன்னொரு காலை பிடிக்க முயற்சிக்க , ஒடப்பு அதையும் இழுத்துக்கொண்டு பின் வாங்க சூம்பி விடாமல் முயற்சிக்க , ஒடப்பு பின்நகர்ந்து பின்நகர்ந்து சுவற்றில் ஒட்டிக்கொள்ள சூம்பி இப்போது முட்டிக்கால் போட்டு அமர்ந்து கொண்டான்.

காளியாங்குட்டி பாம்பு , லேடீஸ் ஹாஸ்டலில் நுழைந்தால் , அறையில் தனியாக பேண்டி மட்டும் அணிந்தபடி மொபைலை நோண்டிக்கொண்டு நடந்து கொண்டிருக்கும் பெண் எப்படி குதிப்பாளோ , அப்படி குதித்துக்கொண்டிருந்தான் ஒடப்பு.

காற்று வேறு பலமாக அடித்துக்கொண்டு இருந்ததால் , அவர்கள் பேசிக்கொண்டது தெளிவாக கேட்கவில்லை. விட்டு விட்டு கேட்ட சொற்கள் கீழே.

“கால் தல , சூம்பி , சும்மா இருங்க , நக்கறேன் தல , மொதலாளி , ரெஸ்பெக்ட் , கால எல்லாம் , மன்னிச்சுடுங்க , அட ஏங்க , கால கழுவறேன் , ப்ச் , சூம்பி , தல , ப்ளீஸ் தல , இப்டில்லாம் பண்ணாதீங்க , டீஸண்ட் , பெர்ய ஆள் , எதுவும் வேணாம் , விடுங்க , அல்பம் , கெஸ்ட் “

இருவரும் ஏதோ ஒரு சத்தியத்துக்கு கட்டுப்பட்டு மீண்டும் வந்து அமர்ந்தார்கள்.

ஒடப்பு புது பியரை உடைத்து குடிக்க ஆரம்பித்தான். சூம்பி மட்டும் என்ன கொக்கா ? லார்ஜை விட அதிகமாக ஊத்தி குடிக்க ஆரம்பித்தான்.

“நான் கெளம்பறது கெளம்பறதுதான் “ என்று மீண்டும் ஒடப்பு ஆரம்பிக்க ….

“நீங்கள்ளாம் பெரிய மொதலாளி , அதான் காலை நக்கறேன்னு சொல்லிட்டேனே , இன்னும் என்னா ? தலையை அறுத்துக்கணுமா ? இருந்துட்டு காலைல பஸ்ல கெளம்புங்க “

“நீங்க யாரு என்ன கெளம்ப சொல்றதுக்கு ? எனக்குத் தெரியும் போறதுக்கு”

“அதான் தல , நாங்க எல்லாம் மட்ட மண்டைங்க , நீங்க எல்லாம் பெரிய லாடு லபக்கு புழுத்தி “

“இதுக்குத்தான் அப்பவே போறேன்னு சொன்னேன் “என்று சொல்லியபடி , பியர் பாட்டிலையும் பையையும் கையில் எடுத்துக்கொண்டு , ஒடப்பு நடக்க ஆரம்பித்தான்.

தோட்டத்தின் வேலியை நெருங்கி , பெடலைத் திறந்து வெளியேறுவதைப் பார்த்த சூம்பி , கொஞ்சம் மிரண்டான்.

“தல நிஜமாவே போறாரு தல , பிரச்சனை ஆயிடும் தல , வழியில ஏதாச்சும் அடிச்சிடும் தல , போய் தடுங்க தல” என மாயை மனிதனிடம் புலம்ப ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் சூம்பியே தடுமாறி எழுந்து , நானே போய் கூட்டி வரேன் என தன் பைக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

பைக் ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டது. பிறகு அந்த சத்தம் அடங்கி விட்டது. இப்போது அவர்கள் உட்கார்ந்திருந்த கட்டிலிக்கு அருகில் இருந்து பார்த்தால் ,

வானத்தை நோக்கி ஒளி அடித்துக்கொண்டு இருந்தது. ஏன் தரையில் இருந்து சர்க்கஸ் விளம்பரம் போல வானத்தை நோக்கி ஒளி பாய்ந்து கொண்டிருக்கிறது என உற்றுப் பார்த்தால் ,

பைக் சாய்ந்து கீழே கிடந்தது. பைக்கின் முகம் கோபத்தில் ஒருக்களித்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது. சூம்பி பைக்கை கட்டிப் பிடித்தபடி தரையில் கிடந்தான்.

ஒடப்பு வேக வேகமாக காட்டுக்கு நடுவே நடந்து கொண்டிருந்தான்.

நிலா இருந்தாலும் இருபுறமும் இருள் போலவே இருந்தது ஒடப்புக்கு. பின்னால் மாட்டிய பையுடனும் , ஒரு கையில் பியருடனும் காட்டாற்றைத் தாண்டி , மடித்து விடப்பட்டு இருந்த பேண்டை இறக்கி விட்டான் ஒடப்பு.

கல்லோ மண்ணோ கருப்பாக இருந்ததன் மேல் அமர்ந்து மிச்சம் பியரைக் குடித்து , பாட்டிலைத் தூக்கிப்போட்டு உடைத்தான்.

வீராவேசமாக எழுந்த ஒடப்பு கண்களை குறுக்கிக் கூர்மையாக்கிக்கொண்டு , காட்டுப்பாதையில் விருக் விருக் என நடக்க ஆரம்பித்தான்.அவனுக்கு இருந்த கோபத்தில் வழியிலொரு காட்டுப்பன்னி எதிர்பட்டு இருந்தாலும் ஒரு அப்பு அப்பி சாவடித்து இருப்பான். மனிதர்களிடம் தானே நாகரீகமாக நடந்துத் தொலைய வேண்டியிருக்கிறது.

அந்த இரவிலும் குளிரிலும் ஒடப்புக்கு வியர்க்க ஆரம்பித்தது. இதையெல்லாம் தெரிந்து கதையில் சொல்ல வேண்டுமென்பதற்காக மாயை மனிதன் பின்னாலேயே இருளோடு இருளாக , இருளில் கலந்த உருவமாக இருளில் ஊடுறுவி வந்து கொண்டிருந்தான்.

ஒடப்பு கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர்கள் தோள்களை தூக்கி வைத்துக்கொண்டு நடந்து இருப்பான். அவனுக்கு பயம் இருந்து கொண்டேயிருந்தது அவன் நடையில் தெரிந்தது. விநோதமான சத்தம் கேட்டால் , அப்படியே ஒடுங்கி உட்கார்ந்து கொள்வான். வழியில் ஒரு சமாதி எதிர்ப்பட்ட போது , கண்களை மூடிக்கொண்டு அதைக் கடந்தான். அவனுக்கு பின்னால் சத்தம் கேட்டால் நடையை ஓட்டமாக மாற்றினான். அதே நேரத்தில் பாதி பின்னால் திரும்பி பார்த்துக்கொண்டே முன்னால் ஓடினான்.

காட்டு வழி முடிந்து ஒரு மண் சாலை தென்பட்டதும் ஆசுவாசம் அடைந்தான் ஒடப்பு. இன்னும் சற்று தூரம் நடந்ததும் ஒரு கோயில் வந்தது. சுமாரான சிறிய கோவில்தான். ஆனால் பூட்டை ஒரு அன்பர் அன்பளிப்பு வழங்கி அந்த பூட்டில் நீலகக்லரில் இரண்டு ஆங்கில எழுத்துக்களையும் போட்டு கொடுத்து விட்டதால் அந்தக் கோயிலை பூட்டி இருந்தார்கள். திடீரென்று சாமி காட்சியளித்து விட்டால் , பக்தகோடிகள் மிரண்டு சுவரேறி குதித்து ஒடுவதற்கு ஏற்றவாரு அந்தக் கோயிலைச் சுற்றி சுவர் கட்டியிருந்தார்கள். ஒடப்பு அதில் ஏறி குதித்து சாமியின் மேல் பாரத்தைப் போட்டான். மனதில் கொஞ்சம் தெம்பு வந்தது.

பையை தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தான். இது கொசுக்கள் சாமி தரிசனம் செய்து பஜனை பாடும் நேரம் போல. எக்கச்செக்க கொசுக்கள் செய்த சாமி பிரார்த்தனை ஒடப்புவை மிகவும் இம்சித்தது. கொஞ்சம் போதை , பயம் , நடந்து வந்த களைப்பு மூன்றும் சேர்ந்து ஒடப்புக்கு ஒரு அரை மயக்கத்தைக் கொடுத்தது. சாப்பிடாததால் வயிறு பசித்தது. வயிற்றை குறுக்கி படுத்துக்கொண்டான்.

இப்படி ஏதேதோ செய்து கொண்டிருல்க்கையில் இன்னொரு உருவம் சுவரேறிக் குதித்து நடந்து வந்தது. சத்தம் கேட்டு விழித்த ஒடப்பு , அது மனிதன் தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஆசுவாசமானான். அந்த உருவம் ஒடப்புக்கு ஒரு ஹாய் கூட சொல்லாமல் அது பாட்டுக்கும் படுத்து சுருண்டுக்கொண்டது.

ஒடப்பு மீண்டும் சுவரேறிக் குதித்து டவுனை நோக்கி நடக்கலானான். மொத்தமாக 13 கிலோ மீட்டர்கள் நடந்து டவுனை அடைந்தான். விடிவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. ஒரு ஆட்டோ சத்தம் கேட்க கை காட்டி நிறுத்தி , எதாச்சும் ஒரு லாட்ஜுக்கு விடு என்றான் ஒடப்பு.

முன்னூறு மீட்டரை ஒரு நிமிடத்தில் கடந்து லாட்ஜ் வாசலில் நிறுத்திய ஆட்டோ டிரைவர் 80 ரூபாய் கேட்டார். ரூமுக்குள் படுத்த ஒடப்பு எரிச்சலில் தூக்கம் வராமல் தவித்தான். தன் காலை தானே அமுக்கிக்கொண்டு தூங்கிப்போனான்.

ஒரு வீடு ,இடம் என்பது ஒரு அதிகாரம். ஒருவருடைய இடத்தில் இருக்கும்போது , சண்டை வந்தால் என்ன வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளலாம். அதிலும் ஒரு நேக்கு இருக்க வேண்டும். எதிராளி மனம் , அவனுடைய இடம் என்பதால்தானே இப்படி திட்டுகிறான் என்று யோசிக்க விடாத அளவுக்கு சண்டையும் வார்த்தை பிரயோகமும் இருக்க வேண்டும். இன்று நடந்த விவாத சண்டையில் , போதையும் சேர்ந்து கொள்ள , ஒடப்புக்கு சூம்பி தன்னை “கெட் அவுட் “ சொன்னதாக எடுத்துக் கொண்டான். “சூம்பியினுடைய இடம்” என்ற அதிகாரத்தை ஒடப்புவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்த “இடம்” என்னும் அதிகாரத்தை காட்டாமல் இருக்கும் சில அப்பாவிகளும் உண்டு. அதை அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்டு நாறடித்து விட்டு செல்பவர்களும் உண்டு. இந்த விஷயத்தை மிகவும் நாசூக்காகவும் நுணுக்கமாகவும் தான் அணுக வேண்டும்.

ஒடப்பு தூங்கிய அதே நேரத்தில் சூம்பி கண் விழித்தான்.எந்த அதிர்ச்சியும் அடையாமல் பைக்கின் விளக்கை முதலில் அணைத்து விட்டு , சாவியை எடுத்துக்கொண்டு அறையில் வந்து படுத்தான்.

காலையில் பக பகாவும் சூம்பியும் ஆரவாரமாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள். மாயை மனிதன் கொஞ்சம் அசந்து தூங்கி விட்டதால் ,இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

மதிய உணவை ஒரு மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு, தெரிந்தவர் ஒருவரின் தோப்பில் இருக்கும் போர் செட்டில் குளிப்பதாக திட்டம் என்பது மட்டும் தெரிந்தது.

மெஸ் இன்னும் திறக்கவில்லை. கீத்துக்கொட்டாய் போட்ட மெஸ். கதவைத்தட்டி திறந்தார்கள். கறி கொதித்துக்கொண்டு இருந்தது.

“வாசனை எப்டி மாப்ள?” சூம்பி பக பகாவைக் கேட்டான்.

பக பகா அதைக் கண்டு கொள்ளாமல் அக்குளை சொறிந்து கொண்டு இருக்கையில் ,

“ங்காத்தா முண்ணி ,வாசனை எப்டிடா மாப்ள ?” என்று குரலை உயர்த்தினான் சூம்பி .

“ம்ம் ம்ம் “ என்றபடி பக பகா அங்கு வந்த ஒரு நாயைக் கொஞ்ச ஆரம்பித்தான்.

“இதான் மாப்ள ராஜபாளையம் , எப்டி இருக்கான் பாரு . கவ்விடுவான் கவ்வி . வேட்டைக்குப் போனா , ஒரு மானையே கவ்வீழுத்துட்டு வந்துகுடுத்துடுவான் “ என்று சூம்பி ராஜ பாளையத்தின் பெருமையைப் பேசிக்கொண்டு இருக்கையில், மெஸ் அண்ணன் வந்து , இது சிப்பிப் பாறைடா சூம்பி என இரண்டு வார்த்தைகளை உதிர்த்து விட்டு , வெங்காயத்தை அள்ளிச் சென்றார்.

அதற்குள் ஒரு வேலையாள் சரக்கு வாங்கி வந்து கொடுத்தான். சூம்பியும் பக பகாவும் குடிக்க ஆரம்பித்தனர்.

அடுத்த ரவுண்டுக்கு பாட்டில் தண்ணீர் வேண்டாம் எனச் சொல்லி விட்டு , ஒரு குவளையில் தண்ணீர் கேட்டான் சூம்பி.குவளைத் தண்ணீர் வந்தது.ஒரு மடக் தண்ணீரைக் குடித்து விட்டு , பக பகாவை குடிக்கச் சொன்னான்.

பக பகா ஒரு மடக் தண்ணீர் குடித்ததும்,

“எப்டி “

பக பகா தலை மட்டும் ஆட்டியதும் …

“தண்ணி எப்டிடா முண்ணி ?”

“நல்லாருக்கு மச்சான்”

“டேய் எங்கூரு தண்ணிடா , தேன் மாதிரி இருக்கும்டா , தண்ணி எப்டி ?”

“ஓக்கே மச்சான் “

“அடிங் மண்டாரவாளி , தண்ணிடா , அமிர்தம்டா , தண்ணி எப்டிடா ?”

“போடாங் மொட்ட முண்ணி , தண்ணி தண்ணி மாதிரிதாண்டா இருக்கும் , ஒப்பன் முண்ணி மாதிரியாடா இருக்கும் ?”

“டேய் தண்ணிடா , குடிச்சிப் பாருடா , தம்பி இன்னொரு கொவள தண்ணி கொண்டா , தண்ணிடா , எங்கூரு தண்ணிடா , இதை மாதிரி தண்ணிய உலகத்துல எங்கயும் குடிச்சி இருக்க மாட்ட , தண்ணி மாப்ள “

இப்படியே தண்ணிடா முண்ணிடா என நான்கு ரவுண்டுகள் ஓடியும் சாப்பாடு தயாராக வில்லை.

சோறு மட்டும் இன்னும் தயாராக வில்லை என மெஸ் அண்ணன் தகவல் சொன்னார். சமையல் அங்கேயே நடந்து கொண்டு இருப்பதால், மெஸ்ஸுக்குள் புகையும் வலம் வந்து கொண்டு இருந்தது. கறிக்குழம்பு வாசனையும் , அடுப்பு புகையும் , மதுவின் வாசனையும் கலந்து ஒரு விசித்திரமான சூழ்நிலையை அந்த இடத்தில் உருவாக்கி இருந்தது. இதற்கு இடையில் சூம்பி சிகரட் புகையையும் விட்டு அந்த இடத்துக்கு அழகூட்டினான்.

காலைத் தொங்க விட்டுக்கொண்டு அமர்ந்திருந்த கல் பெஞ்சிலேயே சப்ளாங்கோல் போட்டு உட்கார்ந்த சூம்பி , கறியை மட்டும் எடுத்துட்டு வாங்கண்ணே என்றான்.

ஒரு தட்டில் கறி வந்தது.

“மாப்ள கறி “

கறி ஆவி விட்டுக்கொண்டு இருந்தது.

பக பகா கறியைப் பார்த்தான்.

“மாப்ள கறிடா “

“சரிடா “

“கறி எப்டி ?“

“தோ சாப்டு பாக்கறேன் மச்சான் , சூடா இருக்கு “

“டேய் கறிடா ,அண்ணன் சமைச்சி குடுத்து இருக்கார்டா , அப்படியே கறி மாப்ள , கறி “

பக பகா , சூடான கறியைத் தொட்டு , ஒரு சின்ன கறியை தனியாக விலக்கி, தூக்கி தூக்கி தட்டிலேயே போட்டு ஆற வைத்துக்கொண்டு இருக்கையில் ,

“மாப்ள கறி எப்டி ?’

இப்போது சூம்பியின் முகம் பக பகாவின் முகத்துக்கு நேரே ஐந்து செண்டி மீட்டர் இடைவெளியில் இருந்தது. சூம்பியின் முகம் பரவசத்தில் விரிந்து இருந்தது . கண்கள் தெறித்து வெளியே விழுந்து விடுவது போன்று விரிந்து குதித்து விடத் தயாராக இருந்தது.

எம்பெருமானைக் திடீரெனக் கண்ட ஆழ்வாரின் பரவசம் அல்லது வாழ்க்கையில் முதன் முதலாய் முழு யோனியை முகத்துக்கு நேரே கண்ட விடலைப் பையனின் பரவச நிலையை ஒத்து இருந்தது சூம்பியின் முகம்.

“இர்ரா முண்ணி , சூடா இருக்குடா …தள்ளிப்போடா” என சூம்பியின் முகத்தை இடதுகையால் தள்ளி விட்டான் பக பகா .

ஒரு வழியாக, ஒரு சின்ன கறியை எடுத்து வாய்க்கு எடுத்துப் போகும் பாதி வழியில் , மீண்டும் தன் முகத்தை அருகில் கொண்டு வந்த சூம்பி , “கறி எப்டி” என்றான் .

“மச்சான் வாய்ல வச்சிக்கிறேண்டா , வச்சிக்க வுடுடா “

கொஞ்சமாக முகத்தை விலக்கிக்கொண்ட சூம்பி , பக பகா வின் வாய்க்கு கறி போவதை உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தான்.

பக பகா வின் வாய்க்குள் கறி புகுந்தது . மேல் பல்லும் கீழ் பல்லும் சந்தித்துக்கொள்வதற்குள் , “கறி , கறி மச்சான் , கறி எப்டி ?“ என்றான் சூம்பி.

பக பகா அதைக் கண்டு கொள்ளாமல் , மெல்லமாக மெல்ல ஆரம்பித்தான்.

“மண்டைக்காதி , உன்னைத்தாண்டா முண்ணி , கறிடா , கறி எப்டி ?”

“ம்ம்..நல்லாருக்கு மச்சான் “

“அடிங் நேராக் கொண்டை , எங்கூரு கறிடா , நல்லாருக்குன்னு அசால்டா சொல்ற ? கறிடா , கறி எப்டி ?”

“போடாங் , மட்டி வெண்டை , அதான் நல்லாருக்குன்னு சொல்றேன் இல்ல ?’

“அண்ணே , என்னாண்ணே இவன் ,கறி நல்லாருக்குன்னு சொல்றான் ? கறிடா ,பூ மாதிரி இருக்கும்டா , கையால் அரைச்ச மசாலாடா , எங்கூரு தண்ணிடா , எங்கூரு செடி கொடியை தின்னு வளந்த ஆடுடா ….எங்கூரு வெறகுடா , எப்டி இருக்கு கறி ?”

“நல்லா டேஸ்டா இருக்கு மச்சான் “

“டேய் , என்னாடா ? என்னா ? டேஸ்டா இருக்குன்ற ? ங்கொய்யால பாழ்க்க , சாப்புடுறா , கறியை எடுத்து சாப்புடுடா , நல்லா சாப்புடுடா , எப்டி இருக்கு கறி ?”

சோறும் வந்து விட , கறிக்கொழம்பு , சிக்கன் சுக்கா , மீன் குழம்பு , ஆம்லெட் என ஒவ்வொன்றாக சாப்பிட்டார்கள்.

ஒவ்வொன்றுக்கும் இதே போல , சிக்கன் எப்டி ? மீன் எப்டி ? ஆம்லெட் எப்டி ? என சூம்பி சலம்பல் பண்ணிக்கொண்டே , அவனும் சாப்பிட்டு முடித்தான்.

எல்லோரும் கிளம்பி தோப்புக்குச் சென்றார்கள். பம்ப் செட்டில் குளித்து முடித்து அந்த மிகப்பெரிய கிணற்றில் குதிக்கலாம் என விபரீதமான முடிவெடுத்தான் சூம்பி.

யார் தடுத்தும் கேட்காமல் ஆழமான அந்த கிணற்றில் குதித்தான். குதிக்கும் போது ஸ்டைலாக கால்களை மடக்கிக்கொண்டான். மடக்கிய கால்களை கைகளால் பிடித்துக்கொண்டு “தொம்க் “ என குதித்து உள்ளே போனான். வெளியே வந்து தலையைத் தூக்கி ,

“குதிடா முண்ணிப்பயலே “ என்றான் .

பக பகா குதிக்க வில்லை. கிணற்றில் ஆட்டம் போட்டு விட்டு மாலை இந்த கதை ஆரம்பித்த காட்டுக்குள் இருக்கும் தோப்புக்குச் சென்றார்கள். போவதற்கு முன்னால் மது , சாப்பாடு என அனைத்தையும் சிறப்பாக வாங்கிக்கொண்டார்கள்.

அதே மாமரத்தின் அடியில் கச்சேரி ஆரம்பித்தது. இப்போது அந்த தோப்பின் முதலாளியும் சேர்ந்து கொண்டார். முதலாளிக்கு ஆரம்பத்தில் இருந்தே பக பகாவின் மீது ஒரு ஆர்வம் இருந்தது. பக பகாவின் ஃபேஸ்புக் ப்ரொஃபைலை நோண்டிப் பார்த்து வைத்திருந்தார். பக பகா ஓஷோவின் உன்னத கருத்துக்களை பெண்களை படுக்க வைப்பதற்கு செவ்வனே பயன்படுத்தி வருபவன். ஓஷோவின் கருத்துக்களை ஓஷோவே சொல்வதை விட பக பகா சொன்னால் பெண்கள் புளகாங்கிதம் அடைந்து பொத் பொத்தென படுக்கையில் வீழ்ந்து கொண்டிருந்தர்கள். முதலாளிக்கு ஓஷோவைத் தெரியாது. பக பகாவே ஓஷோவாகத் தெரிந்தான். பக ப்காவை கவரும் பொருட்டு என்னென்னவோ செய்து கொண்டிருந்தார் முதலாளி.

கடைசியாக ரொம்ப நேரம் யோசித்து “ஐ லைக் யூ “ என்றார்.

மூன்று ரவுண்ட் முடிந்தது. இதுவரை சூம்பி ஏனோஅமைதியாகக் குடித்துக்கொண்டு இருந்தான்.

பக பகா , இங்க ஏதாச்சும் அனிமல்ஸ் வருமா என்று கேட்டான்.

இதுதான் தனக்கான சந்தர்ப்பம் என முடிவெடுத்த முதலாளி , வாங்க காட்றேன் என எழுந்து விட்டார். அவருடைய காரில் அனைவரும் ஏறினார்கள். காட்டு வழியில் கார் ஓட ஆரம்பித்தது.

பின் சீட்டில் சூம்பியும் பக பகாவும் முதலாளியும் இருந்தார்கள்.

பின்வருவன சூம்பியும் பக பகாவும் பேசிக்கொண்டவைகள். மாயை மனிதனுக்கும் ஒன்றும் புரியவில்லை. அவர்கள் பேசிக்கொண்டதை அப்படியே கொடுக்கிறான்.

சூம்பிதான் ஆரம்பித்தான் ….

“யேய் என்னா பெரிய முடுக்கு முண்ணியா நீ “

“ஆமாண்டா குண்ணி …போவியா “

“டேய் டேய் …ங்காத்தா …என் முண்ணி “

“போடாங் குண்ணி “

“அடிங் லபக்கு சூதி , நூம்புடா என் முண்ணி “

“ஹேஹ்ஹே ஹே ….மட்டி சுண்டை , மூடுடா “

“டேய் முண்ணி , என் சூதி ….நாற நாதி , வாய்ல உட்டு ஆட்டவா “

“ஹாஹ்ஹா ஹேஹ்ஹே போடங் கேனக் காதி , பொத்திட்டு வாடா ஆமைக் காதி “

“நீல்லாம் என்ன பெரிய சூத்தாங்கொட்டையா ? ங்காத்தா உன்னை மாதிரி எத்தனை பேரை பாத்திருக்கேன் , இந்த ஓலா வேலையெல்லாம் காட்டாதே , உன் பண்டை வேலையெல்லாம் உன் சூதியிலயே பொத்தி வச்சிக்கோ “

“ஹேஹ்ஹே ஹே , வந்துட்டான் , லவடா …..பொத்துடீ , வல்லார வாழி “

“அடிங் ஒச்சாள ஆலி , மூடுடா …பெரிய சூதி , ஆட்டிட்டு வந்துட்டான்”

“பொத்துடா நச்சக் காதி “

“முண்ணி , என் முண்ணி , நீ என்ன பெரிய முண்ணியா ?”

“ஆமாடா என் முண்ணி , லூசுப் பிண்டை “

“எல்லாந் தெரியும்டா , உன் பண்டை படையல் எல்லாம் இங்க வேவாதுடா என் முண்ணி “

“ஹேஹ்ஹே அடங்குடா நொச்சிக் காதி “

இப்படியே தொடர்ந்து 30 நிமிடங்கள் இருவரும் இடைவிடாமல் பேசிக்கொண்டு வர , கார் முதலாளியின் வழி காட்டுதலில் வெவ்வேறு காட்டு வழித்தடங்களில் பயணித்துக்கொண்டு இருந்தது.

அன்றைக்கு என்று பார்த்து ஒரு தெருநாய் கூட கண்ணில் படவில்லை.

முதலாளி ஒரு இடத்தில் நிறுத்து நிறுத்து என் அலறினார். காரை நிறுத்தியதும் , காரைத் திருப்பி லைட்டை ஒரு திசையில் அடிக்கச் சொன்னார். எல்லோரும் ஆர்வமாக விளக்கு ஒளியை உமிழும் திசையில் நோக்கினார்கள். ஒன்றும் தெரியவில்லை. முதலாளி காரை விட்டு இறங்கி மெதுவாக , ஜாக்கிரதையாக நடந்து சென்றார். ஒரு இடத்தில் நின்று கொண்டு , சைகையால் பக பகாவை அழைத்தார்.

பக பகா அருகில் சென்றதும் , தரையைக் காட்டினார்.

இதுதான் காட்டுப்பன்னி சாணி என்றார்.

நாய்ப்பீ மாதிரி இருக்கேண்ணே என்றான் பக பகா .

நாய்ப்பீ வாசம் நாறும் தம்பீ , காட்டுப்பன்னி சாணி மணக்கும். வண்ணம் வித்தியாசப்படும். நாய்ப்பீ வெட்டை மெல்லீசா இருக்கும். காட்டுப் பன்னி சாணி கொஞ்சம் தாட்டமா விழும் என்று தேர்ந்த பேராசியர் போல காட்டுப்பன்னி சாணத்தைப் பற்றி வகுப்பெடுத்தார் முதலாளி.

நீங்க ஏன் சாணின்னு சொல்றீங்க ? பன்னி வெட்டைன்னுதானே சொல்லுவாங்க என்று நுட்பமான சந்தேகத்தை எழுப்பினான் பக பகா.

தம்பி நாட்டுப்பன்னி போடறது வெட்டை. காட்டுப்பன்னி போடறது சாணி என பதிலடி கொடுத்த முதலாளி ,

கடைசியாக கொஞ்சம் கையில் எடுத்துக்கொண்டு காருக்கு நடந்தார்.

காரில் ஏறி காரில் இருந்தவர்களிடமும் அதைக் காட்டினார்.

இது காட்டுப்பன்னி சாணிதான் என சூம்பியும் உறுதிப்படுத்தினான். மோந்துப் பார்ர்ரா , அட மோந்துப்பார்ரா சூம்பி என சொல்லிக்கொண்டே சூம்பியின் மூக்கில் அப்பி விட்டார் மொதலாளி.

அதான் ஒத்துக்கிடேனேண்ணே என்று பாவமாகச் சொல்லிய சூம்பி , தன் மூக்கை முதலாளியின் தோளிலேயே துடைத்து எடுத்தான்.

கார் மீண்டும் மாமரத்துக்கு வந்தது. நான்காவது ரவுண்ட் ஆரம்பமானது. முதலாளி பாலிடிக்ஸ் பேச ஆரம்பித்தார். அது மாமரத்தடி பாலிடிக்ஸ் என்பது சூம்பிக்குத் தெரியும். தன் நண்பர்கள் எதிரில் முதலாளி அசிங்கப் படக்கூடாது என சூம்பி விரும்பினான்.

அண்ணே , பாலிடிக்ஸ் வேண்டாம்ணே என கெஞ்ச ஆரம்பித்தான்.

ஏண்டா முண்ணி , அவரு பேசட்டும்டா என பக பகா ஏற்றி விட்டான்.

முதலாளி நிறை போதையில் , “ஐ லைக் பக பகா , ஐ லைக் திஸ் ஆர்க்யூ” என்றார்.

“உன் கால்ல வுழறேண்டா பக பகா , வேணாம்டா “ என சூம்பி பாவமாக பக பகாவிடம் சரணடைந்தான்.

“போடா முண்ணி “ என பக பகா தீவிர அரசியல் விவாதத்தில் இறங்கினான். பக பகாவுக்கும் முதலாளிக்கும் சூடு பறந்தது.

“அண்ணே உன் கால நக்கறேண்ணே , பக பகா உன் காலை நாக்காலயே கழுவறேண்டா , வேணாம்டா “ என கெஞ்ச ஆரம்பித்தான் சூம்பி.

இன்னும் இரண்டு ரவுண்டு ஏறியது. எல்லோரும் போதையில் தளும்பினார்கள். விளைந்த நெற்கதிர்கள் காற்றில் ஆடுவது போல ஏகாந்தமாக ஆடிக்கொண்டு இருந்தார்கள்.

“என்னாண்ணே , அனிமல்ஸ் காட்டறேன்னு சாணியைக் காட்டி கூட்டியாந்துட்டீங்க ?”என திடீரென்று பக பகா கேட்டதும் ,

துள்ளி எழுந்தார் முதலாளி.

“தம்பி , என் கூட வா , இப்ப வா , காட்டுக்கள்ள நடந்து போலாம். எனக்கு இன்னொரு எடம் தெரியும். கொஞ்சம் மலையேறணும் , சிறுத்தையே பாக்கலாம். யானை பாக்கலாம் ஓக்கேவா “ என்றார் முதலாளி.

சரேலென எழுந்தான் பக பகா .

“சரக்கும் கிளாசும் எடுத்துக்கலாம் , வழியில குடிச்சிட்டே போகலாம் “என்று சொல்லிய பக பகா சரக்கையும் கிளாசையும் தண்ணீர் பாட்டிலும் எடுத்துக்கொண்டான்.

இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.

சூம்பி பதறி எழுந்தான்.

“அண்ணே நீங்களே இப்படி பண்ணலாமாண்ணே ? ரிஸ்குண்ணே “ என கதறினான்.

“போடா சுண்ணாம்பு சூம்பி “ என்றார் முதலாளி.

“டேய் பக பகா , நீயாச்சும் சொல்றா . உன் கால்ல வுழுவறேண்டா “ என கதறினான் சூம்பி.

இருவரும் மீண்டும் நடக்க ஆரம்பித்தார்கள்.

சூம்பி காலிலேயே விழுந்தான். பக பகா காலைப் பற்றிக்கொண்டான்.

“டேய் உன் காலை நக்கறேண்டா “ எனச் சொல்லி நக்க ஆரம்பித்தான்.

“யேய் சும்மா இர்ரா முண்ணி” எனச் சொல்லியபடி காலை விடுவித்துக்கொண்டு நடக்கலானான் பக பகா.

மொதலாளி ஸ்டைலாக சிகரட் பற்ற வைத்துக்கொண்டு , வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு காட்டை நோக்கி நடக்கலானார்.

சூம்பி , இருவர் காலையும் மாறி மாறி பற்றிக்கொண்டு பின்னாலேயே அரற்றிக்கொண்டு தொடர்ந்து கொண்டிருந்தான். இன்று கிணற்றில் காலை மடக்கிக்கொண்டு குதித்ததால் சூம்பிக்கு கால் முறிவு ஏற்பட்டது இப்போது போதையில் தெரியவில்லை. இந்தக் கதை முடிந்த மறுநாள் காலை நால்வர் சூம்பியை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடப்போகிறார்கள்.

மாயை மனிதனும் கதையை சொல்வதற்காக அவர்கள் பின்னால் சென்று கொண்டிருந்தான்.

இப்போது மரத்தடியில் , ஒருவன் மட்டும் அமர்ந்திருந்தான். அவன் தான் ஒடப்பு.

இவர்கள் இன்று காலை மெஸ்ஸுக்கு செல்வதற்கு முன் ஒடப்பு தங்கியிருந்த லாட்ஜுக்கு சென்றார்கள்.சூம்பியையும் பக பகாவையும் பார்த்ததும் ஒடப்பு எதுவும் பேசாமல் அறையைக் காலி செய்து கொண்டு வந்து அமைதியாக காரில் ஏறினான். மெஸ் , பம்பு செட் , காரில் காட்டு உலா , மரத்தடி பஞ்சாயத்து என அனைத்திலும் கலந்து கொண்டான். ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாக குடித்துக்கொண்டு இருந்ததால் அவன் கதைக்குள் வரவில்லை.

நாளை சூம்பியை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடப்போகும் நால்வரில் ஒருவன் ஒடப்பு.

நன்றி : ஆதன் நியூஸ் , டிமிட்ரி இவ்நோஸ்கி