அராத்துவின் சூம்பி : சிறுகதை திருத்தப்பட்ட வடிவமும் அடியேனின் மதிப்புரையும்

சூம்பி என்ற இந்தக் கதையைப் போன்று – இந்த நூற்றாண்டின் இரண்டு மிகப் பெரிய நெருக்கடிகளை இவ்வளவு intenseஆகத் தரும் கதையை என் வாசிப்பு அனுபவத்தில் படித்ததில்லை.  அபத்தமும் மனப்பிறழ்வும்தான் அந்த நெருக்கடிகள்.  இந்த இரண்டையும் நாம் அன்றாடம் சந்தித்து வருகிறோம்.  நமக்குத் தெரிந்த வழிகளில் அதை நாம் எதிர்கொள்ளவோ கடந்து செல்லவோ முற்படுகிறோம்.       

இந்தச் சிறுகதை முதல் வாசிப்பில் சிலருக்கு சரியாகப் புரியாமல் போகலாம்.  என்னய்யா இது, நாலஞ்சு தடிமாடுங்க தண்ணியப் போட்டுட்டு உளறியதை எழுதியிருக்கான்.  இது ஒரு கதையா?  இப்படித்தான் தோன்றும்.  அதிலும் கெட்ட வார்த்தைகளை இதுவரை பேசியே இராத, ஏன், காதாலேயே கேட்டிராத ஆடவருக்கும் பெண்டிருக்கும் இது என்ன ஆபாசம் என்று கூடத் தோன்றும்.  கதை பூராவும் கெட்ட வார்த்தைகள்.  எதற்கெடுத்தாலும் பு… சு… ஆங்கிலத்தில் இதெல்லாம் சகஜம்.  ஆனால் ஆங்கிலம் நமக்கு அந்நிய மொழி.  தாய்மொழியில் கெட்ட வார்த்தைகளைக் செவி கொண்டு கேட்க முடியவில்லை. 

ஆனால் என்ன செய்வது சொல்லுங்கள், இந்தக் கேடு கெட்ட வாழ்க்கையில் இவ்வகையான கெட்ட வார்த்தைகளைக் கொண்டுதான் என்னை ஆக்ரமித்து என்னைச் சுழற்றியடித்துக் கொண்டிருக்கும் மனப்பிறழ்வு என்ற இடாக்கினிப் பேயிடமிருந்து தப்ப வேண்டியிருக்கிறது.  அல்லது, நேரடியாகச் சொன்னால், கெட்ட வார்த்தைகளைப் பேசுவதன் மூலம்தான் என்னைப் பீடித்துள்ள மனநோயை நான் transcend பண்ணுகிறேன்.  வேறொரு உதாரணம் தருகிறேன்.  அறுபது வயதைக் கடந்த பலரைப் பார்க்கிறேன்.  சிலர் ஸ்ரீராமஜெயம் என்ற வார்த்தையை கோடிக்கணக்கான தடவைகள் நோட்புக்கில் எழுதுவதன் மூலம் வாழ்வின் அர்த்தத்தைக் காண்கிறார்கள்; அல்லது, முதுமை தரும் தனிமையிலிருந்து தப்பிக்கிறார்கள்.  சிலர் பத்துப் பனிரண்டு மணி நேரம் தொலைக்காட்சி சீரியல் பார்க்கிறார்கள்.  சிலர் எட்டு மணி நேரம் பூஜை செய்கிறார்கள்.  இதெல்லாம் இல்லாத ஒரு சிலர் பைத்தியம் முற்றி வதைபடுவதை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.

மேலே சொன்னது முதுமை நோய்.  ஆனால் நவீனத்துவ வாழ்க்கை அது கொண்டு வந்து கொடுத்த ஆயிரக்கணக்கான சொகுசுகளின் கூடவே அதன் பக்க விளைவாகக் கொடுத்தது மனப்பிறழ்வு.  இது சென்ற நூற்றாண்டு மனிதனுக்கு இல்லை.  அங்கே காலத்தை என்ன செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.  உழைத்து முடித்தால் உறக்கம்.  இருக்கவே இருக்கிறது செக்ஸ்.  பத்துப் பனிரண்டு குழந்தைகளைப் பெற்றுப் போடலாம்.  இப்போது எல்லாமே வேறு வேறாகி விட்டது.  செக்ஸ் என்ற ஏரியாவுக்குள் சென்றால் மீண்டு வருவதே கஷ்டம்.  ஆயிரம் பக்கம் எழுதினாலும் மீளாது.  ஆணின் மிகப் பெரிய மீட்சியான செக்ஸை வழங்கும் பெண்ணின் இடமும் இப்போது சிறுகச் சிறுக காலியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கதையில் வரும் நான்கு ஆண்களும் வேறு என்னதான் செய்வார்கள்?  

சென்ற நூற்றாண்டு மனிதனுக்கு ஸ்ரீராமஜெயம் மாதிரி இந்த நவீன மனிதனுக்குக் கிடைத்தது குடியும் கெட்ட வார்த்தைகளும்.  இதை எழுதிக் கொண்டிருக்கும் எனக்குக் கிடைத்தது எழுத்து.  சூம்பிக்குக் கிடைத்தது கெட்ட வார்த்தை.  கெட்ட வார்த்தை மட்டுமா?  கால்களை மடித்துப் பிடித்தபடி மிக ஆழமான கிணற்றுக்குள் குதித்து கால்களை உடைத்துக் கொள்ளும் அளவுக்கு அவனை ஏதோ ஒன்று ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது.  கெட்ட வார்த்தைகளின் மூலம் குடியின் மூலமும் அவன் அதைத் தன்னிலிருந்து விரட்டுகிறான். 

நம்பியவனுக்கு ஸ்ரீராமஜெயம் கடவுளின் நாமம்.  நம்பாதவனுக்கு அது வெறும் வார்த்தை.  சரி, கெட்ட வார்த்தை?  சூம்பியைப் பாருங்கள்.  அந்தக் கெட்ட வார்த்தைகளை அவன் பொழியாவிட்டால் அவனை நீங்கள் மனநலக் காப்பகத்தில்தான் பார்க்கலாம்.  இந்த ’ஒழிவு திவசத்துக் களி’யெல்லாம் முடிந்த பின்னால் அவனை நீங்கள் திங்கள்கிழமை காலை டை கட்டிய கனவானாய் அலுவலக லிஃப்ட்டில் நிற்கக் காண்பீர்கள்.

La Strada என்ற ஃபெலினியின் படத்தைப் பார்த்திருப்பீர்கள்.  கழைக் கூத்தாடியான ஸம்ப்பானோ தன்னுடைய உதவியாளான ஜெல்சோமினாவை அடித்து உதைத்துத் துன்புறுத்திக் கொண்டே இருக்கிறான்.  இதைத் தாங்க முடியாத அவள் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் போது கதையில் கோமாளியாகக் குறுக்கிடும் ஒருவன் அவளைக் காப்பாற்றுகிறான்.  இந்த உலகில் தனக்கு யாருமே இல்லை என்கிறாள் அவள்.  “இல்லை, ஸம்ப்பானோ உன்னைக் காதலிக்கிறான்” என்கிறான் கோமாளி.  அவளால் அதை நம்ப முடிவதில்லை.  அப்போது கோமாளி சொல்வான், ”நாய்கள் ஒன்றை ஒன்று கடித்துக் கொண்டுதான் காதலிக்கும்.  ஸம்ப்பானோ ஒரு நாய்.  அவன் உன்னை அடிப்பதே உன்னைக் காதலிப்பதால்தான்”  என்கிறான்.  இந்தக் கதையில் வரும் நால்வரும் இந்த வாழ்க்கையை நேசிக்கிறார்கள்.  நாம் அறியாத வேறொரு ரூபத்தில்.  நாம் அதை அறிந்திருக்கவில்லை.  அவ்வளவுதான்.   

கதையில் வரும் கெட்ட வார்த்தைகளைக் கண்டு யாரும் மிரள மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.  ஏனென்றால், இரண்டு ஜனனேந்திரியங்களை வைத்து வணங்கும் மரபு நம் இந்திய மரபு.  எனவே அது ஒரு பொருட்டே அல்ல. 

***

சூம்பி (திருத்தப்பட்டது)

சிறுகதை

அராத்து

ஒரு பெரிய மாமரத்தின் அடியில் சின்னதாக சூரிய விளக்குகளை வெளிச்சத்துக்காக வைத்துக்கொண்டு, இருவர் அமர்ந்திருக்கிறார்கள் தெரிகிறதா? இதை நாம் பத்து அடி தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.  நடுவே ஒரு கட்டில் இருக்கிறது. அதன் ஒரு மூலைக்கு அருகில் இரண்டு பக்கங்களில் சூம்பியும் ஒடப்புவும் நாற்காலிகளில் அமர்ந்து இருப்பது தெரிகிறதுதானே?

சூம்பி, பிராந்தியை உடைத்து, கொஞ்சமாக தண்ணீர் விட்டுக் கலந்து கொண்டிருக்கிறான். ஒடப்பு தன் பற்களால் பியரை உடைத்துக்கொண்டிருக்கிறான். மேலே நிலா, சூரியனிடம் இருந்து கடன் வாங்கிய வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டே, சூரிய விளக்குகளை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

அந்த இருவருக்கு இடையில் ஒருவன் அமர்ந்திருக்கிறானா? என்ன, தெரியவில்லையா? ஆம், தெரியமாட்டான். அவன் மாயை. இந்தக் கதையைச் சொல்ல ஒருவன் வேண்டுமல்லவா ? அவன்தான் அவன். கதையைச் சொல்ல வேண்டுமென்பதால் அங்கே இருக்கிறானே ஒழிய, நடக்க இருக்கும் கதையின் போக்கு அவனால் மாறவே மாறாது.

அவர்கள் இருவரும் குடிக்க ஆரம்பிப்பதற்கு முன் இந்த இடத்தைப் பற்றித் தெரிந்து கொண்டு விடலாம். கிட்டத்தட்ட வனம் போலத்தான். மின்சாரம் கிடையாது , தோப்பு. நான்கு கிலோ மீட்டர் நடந்து சென்றால்தான் மண் சாலையையே அடைய முடியும். நடுவே ஒரு காட்டாறு ஓடுகிறது.  இரவுகளில் காட்டெருமை , காட்டுப்பன்றிகள் உலாவும் இடம். இந்தத் தோப்புக்கு மின்சார வேலி அமைத்திருக்கிறார்கள்.

சூம்பி, அரை கிளாஸை ஒரு கமத்து கமத்தி விட்டு கீழே வைத்தான். ஒடப்பு பொங்கிய நுரையை ஒரு உறிஞ்சு உறிஞ்சி விட்டு, மீசையில் ஒட்டிய நுரையை நாவால் நக்கிக்கொண்டான்.

“சூம்பி, எனக்கு ஒரு டவுட்.“

“சொல்லுங்க தல.“

“நீங்க ஃபேஸ்புக்ல ஃபேமஸா இருக்கறதுக்கு குத்து மதிப்பா மாசம் எவ்ளோ செலவழிப்பீங்க?”

சூம்பி மடக்கென்று மீதமுள்ள கிளாஸை எடுத்துக் கவுத்திக்கொண்டான்.

“அதான் சூம்பி, இந்த ஃபேமுக்கு, எல்லாருக்கும் சரக்கு வாங்கிக் குடுக்கறது, காசா குடுக்கறதுன்னு எவ்ளோ செலவு பண்ணுவீங்க?”

“இதுக்கு நீங்க என்னை சூத்தடிச்சி  இருக்கலாம் தல.”

சூம்பி உறும ஆரம்பித்து இருப்பது ஒடப்புக்குத் தெரியவில்லை.

“சும்மா ஃபிரண்ட்லியாதான் கேட்டேன், தெரிஞ்சிக்கலாம்னுதான் சூம்பி.“

“தல, இதுக்கு நீங்க என்னை முண்ட கட்டயா சேத்துல போட்டு ஓத்து உட்ருக்கலாம்  தல.“

“தேவையில்லாம பேசாதீங்க சூம்பி, நான் சும்மா ஜெண்டிலாதான் கேட்டேன்.“

“இந்த ஜெண்டில் புண்டை எல்லாம் எனக்குத் தெரியாது, பெரிய புழுத்தி மாதிரி கேட்டுட்டு ஜெண்டில் புண்டையாம் புழுத்திப் புண்டையாம்.“

“ஸீ, நான் ஜஸ்ட் கேட்டேன், மரியாதை இல்லாம பேசறது எல்லாம் டூ மச் சூம்பி.“

சூம்பி சிகரட் பற்ற வைத்துக்கொண்டான். கதையை எழுதுவதற்காக, கண்ணுக்குத் தெரியாமல் அமர்ந்திருக்கும் மாய உருவத்தைப் பார்த்து சூம்பி பேசினான்.

“தல, என்னா தல இது, என்னை ரேப் பண்ணிட்டாரு தல. என் இடம், கெஸ்டுன்னு பாக்கறேன்  சுன்னிய்.“

“இதுக்குத்தான் நான் மரியாதை தெரியாதவங்க இடத்துக்கு வர்ரது இல்லை. ஐ ஆம் டூ மச் அப்ஸட்.“

“ஆமாங்க, நாங்க எல்லாம் மரியாதை தெரியாதவங்க, நாங்க தொழிலாளி. நீங்க மொதலாளி. நல்லா வாய்லயே ஒழுத்துட்டு போங்க.“

“திஸ் ஈஸ் நாட் மேனர்ஸ், கூப்ட்டு வச்சி அவமானப்படுத்துறீங்க சூம்பி.“

“சுன்னில அவமானப் படுத்தறேன், என் சுன்னில,  அப்ப கெளம்புங்க.“

மணி இரவு 11. இங்கே இருந்து போக ஒடப்புக்கு வண்டி ஏதும் இல்லை. இருப்பது சூம்பியின் பைக் மட்டும் தான்.

ஒடப்பு வீராவேசமாக எழுந்து விட்டான். சின்ன குடிலை நோக்கி நடக்கிறான். சூம்பி இரண்டாவது ரவுண்டை முடிக்கிறான். ஒடப்புக்கு பியரில் கடைசி களுக் பாக்கி இருக்கிறது. ஒடப்பு குடிலில் இருக்கும் தன் உடைகளை பையில் போட்டு எடுத்துக்கொண்டு மீண்டும் கட்டிலுக்கு வருகிறான். மீதமிருக்கும் பியரை குடித்து முடிக்கிறான்.

“இப்ப எல்லாம் போகாதீங்க தல, ரிஸ்க். ஏதாச்சும் வழில அடிச்சிடும்.“

“நோ நோ, ஐ ஹேவ் டூ கோ. என்னால இங்க இருக்க முடியாது.”

“தல, போனா பிரச்சனை ஆயிடும். உங்க கால்ல வேணா வுழுவறேன். போவாதீங்க ப்ளீஸ்.“

ஒடப்பு காலில் சூம்பி விழ முயற்சிக்க…

“நோ நோ, ப்ளீஸ் சூம்பி, இப்டில்லாம் பண்ணாதீங்க. உங்க மேல நான் எவ்ளோ ரெஸ்பெக்ட் வச்சிருக்கேன். கெடுத்துக்காதீங்க ப்ளீஸ்.”

“ஒக்காருங்க தல, பீர் குடிங்க ப்ளீஸ்.“

“பீர் வேணா குடிக்கிறேன். பட், நான் போயிடுவேன்.“

ஒடப்பு இரண்டாவது பியரை குடிக்க ஆரம்பிக்கிறான். சூம்பி மூன்றாவது ரவுண்டை முடிக்கிறான்.

சூம்பி சிகரட் பற்ற வைத்துக்கொண்டே, நடந்து கொண்டிருக்கும் கதையை சொல்வதற்காக இருவருக்கும் இடையில் அமர்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படும் மாயை மனிதனிடம், “தல, நாளைக்குக் காலைல பகபகா வரான்” என்றான்.  

மாயை மனிதன் உண்மையில் ஏதும் பேச முடியாது . அப்படிப் பேசுவதாக சூம்பியும் ஒடப்புவும் நினைத்துக்கொண்டாலும், கதையைப் படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்குக் கேட்காது என்பதால் மாயை மனிதனின் பேச்சு கதைக்குள் வராது.

“நான் காலைல போய் பகபகாவை பிக்கப் பண்ணி கூட்டியாந்துர்ரேன் தல. செம்மயா எஞ்சாய் பண்ணலாம்“ என்றான் சூம்பி.

அதோடு விட்டிருக்கலாம். “ஒடப்புக்கு காலைல பஸ் டிக்கட் போட்டு அனுப்பிடலாம் தல” என்றான் சூம்பி.

குடித்துக்கொண்டிருந்த பியர் பாட்டிலை தன் வாயிலிருந்து தானே பிடுங்கினான் ஒடப்பு. கொஞ்சம் பியர் அவனது டி ஷர்ட்டில் ஊற்றியது.

“ஐ ஆம் டிராவலிங்க் த்ரோ அவுட் இந்தியா… ஐ நோ எவ்ரிதிங்க். நீங்க என்னா எனக்கு டிக்கட் போடறது? அவமானப்படுத்துறீங்களா? இதெல்லாம் கூப்ட்டு வச்சி சூத்தடிக்கிறது. ஐ கேன்னாட் ஸ்டே ஹியர்.“

இப்படி கத்திய ஒடப்பு, பையை எடுத்துக்கொண்டு கிளம்ப முயற்சிக்கையில்…

“தல, ரூம்ல உங்க துண்டு ஜட்டீலாம் காயிது. அதையும் சேத்து எடுத்துட்டுப் போங்க“ என்றான் சூம்பி .

ஒடப்பு வீரமாக துண்டையும் ஜட்டியையும் எடுக்கப் போவதற்கு முன் மிச்சம் இருந்த பியரை களக் களக் என கவுத்திக்கொண்டான். அறையை நோக்கி நடந்தான்.

“என்னா தல இப்டி பண்றாரு? போயிடுவாரா ? போனா ரிஸ்க் தல“ என மாயை மனிதனிடம் பேச ஆரம்பித்தான் சூம்பி.

மீசை துடிக்கத் துடிக்க ஜட்டியையும் துண்டையும் சுருட்டி பைக்குள் வைத்துக்கொண்டிருக்கும் ஒடப்புவைப் பார்த்தான் சூம்பி. மீசை போலவே தாடியும் துடித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. மனதை ஒருமுகப்படுத்திப் பார்த்தான் சூம்பி. கை, கால், தலைமுடி, பேண்ட், டி ஷர்ட் என அனைத்தும் துடித்துக்கொண்டிருந்தது தெரிந்தது.

திடீரென முடிவெடுத்த சூம்பி ஒரு ஸ்மால் ஊற்றி “ரா”வாக அடித்தான். எழுந்து நின்றான். தீர்மானமாக நடந்து சென்றான் ஒடப்புவை நோக்கி.

இவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து, அந்த சின்ன அறை 200 அடி தூரத்தில் இருக்கலாம். மாயை மனிதனால் அங்கே நடந்த சம்பாஷணைகளைத் தெளிவாகக் கேட்க முடியவில்லை. நிலா வெளிச்சத்திலும், சூரிய விளக்கின் உதவியாலும், தூரத்தில் நடக்கும் நாடகக் காட்சிகளைப் பார்ப்பது போல இருந்தது.

பையை வைத்திருக்கும் ஒடப்புவின் காலை சூம்பி பிடிக்க முயற்சிக்க, ஒடப்பு காலை உறுவிக்கொண்டு பின்னால் ஒரு அடி போக, சூம்பி இன்னொரு காலைப் பிடிக்க முயற்சிக்க, ஒடப்பு அதையும் இழுத்துக்கொண்டு பின் வாங்க சூம்பி விடாமல் முயற்சிக்க, ஒடப்பு பின்னகர்ந்து பின்னகர்ந்து சுவற்றில் ஒட்டிக்கொள்ள சூம்பி இப்போது முட்டிக்கால் போட்டு அமர்ந்து கொண்டான்.

காளியாங்குட்டி பாம்பு, லேடீஸ் ஹாஸ்டலில் நுழைந்தால், அறையில் தனியாக பேண்டி மட்டும் அணிந்தபடி மொபைலை நோண்டிக்கொண்டு நடந்து கொண்டிருக்கும் பெண் எப்படி குதிப்பாளோ, அப்படி குதித்துக்கொண்டிருந்தான் ஒடப்பு.

காற்று வேறு பலமாக அடித்துக்கொண்டு இருந்ததால், அவர்கள் பேசிக்கொண்டது தெளிவாகக் கேட்கவில்லை. விட்டு விட்டு கேட்ட சொற்கள் கீழே:

கால் தல சூம்பி சும்மா இருங்க

நக்கறேன் தல மொதலாளி ரெஸ்பெக்ட் கால எல்லாம்

மன்னிச்சுடுங்க அட ஏங்க கால கழுவறேன் ப்ச் சூம்பி தல ப்ளீஸ் தல இப்டில்லாம் பண்ணாதீங்க  டீஸண்ட் பெர்ய ஆள் எதுவும் வேணாம் விடுங்க  அல்பம்  கெஸ்ட்

இருவரும் ஏதோ ஒரு சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு மீண்டும் வந்து அமர்ந்தார்கள்.

ஒடப்பு புது பியரை உடைத்து குடிக்க ஆரம்பித்தான். சூம்பி மட்டும் என்ன கொக்கா? லார்ஜை விட அதிகமாக ஊற்றி குடிக்க ஆரம்பித்தான்.

“நான் கெளம்பறது கெளம்பறதுதான் “ என்று மீண்டும் ஒடப்பு ஆரம்பிக்க…

“நீங்கள்ளாம் பெரிய மொதலாளி, அதான் காலை நக்கறேன்னு சொல்லிட்டனே, இன்னும் என்னா? தலையை அறுத்துக்கணுமா ? இருந்துட்டு காலைல பஸ்ல கெளம்புங்க.“

“நீங்க யாரு என்ன கெளம்ப சொல்றதுக்கு? எனக்குத் தெரியும் போறதுக்கு.”

“அதான் தல, நாங்க எல்லாம் மட்டப் புண்டைங்க, நீங்க எல்லாம் பெரிய லாடு லபக்கு புழுத்தி.“

“இதுக்குத்தான் அப்பவே போறேன்னு சொன்னேன்“ என்று சொல்லியபடி, பியர் பாட்டிலையும் பையையும் கையில் எடுத்துக்கொண்டு, ஒடப்பு நடக்க ஆரம்பித்தான்.

ஒடப்பு தோட்டத்தின் வேலியை நெருங்கி, பெடலைத் திறந்து வெளியேறுவதைப் பார்த்த சூம்பி , கொஞ்சம் மிரண்டான்.

“தல நிஜமாவே போறாரு தல, பிரச்சனை ஆயிடும் தல, வழியில ஏதாச்சும் அடிச்சிடும் தல, போய் தடுங்க தல” என மாயை மனிதனிடம் புலம்ப ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் சூம்பியே தடுமாறி எழுந்து, நானே போய் கூட்டி வரேன் என தன் பைக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

பைக் ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டது. பிறகு அந்த சத்தம் அடங்கி விட்டது. இப்போது அவர்கள் உட்கார்ந்திருந்த கட்டிலுக்கு அருகில் இருந்து பார்த்தால்,

வானத்தை நோக்கி ஒளி அடித்துக்கொண்டு இருந்தது. ஏன் தரையில் இருந்து சர்க்கஸ் விளம்பரம் போல வானத்தை நோக்கி ஒளி பாய்ந்து கொண்டிருக்கிறது என உற்றுப் பார்த்தால் ,

பைக் சாய்ந்து கீழே கிடந்தது. பைக்கின் முகம் கோபத்தில் ஒருக்களித்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது. சூம்பி பைக்கை கட்டிப் பிடித்தபடி தரையில் கிடந்தான்.

ஒடப்பு வேகவேகமாக காட்டுக்கு நடுவே நடந்து கொண்டிருந்தான்.

நிலா இருந்தாலும் இருபுறமும் இருள் போலவே இருந்தது ஒடப்புவுக்கு. பின்னால் மாட்டிய பையுடனும், ஒரு கையில் பியருடனும் காட்டாற்றைத் தாண்டி, மடித்து விடப்பட்டு இருந்த பேண்ட்டை இறக்கி விட்டான் ஒடப்பு.

கல்லோ மண்ணோ கருப்பாக இருந்ததன் மேல் அமர்ந்து மிச்சம் பியரைக் குடித்து, பாட்டிலைத் தூக்கிப்போட்டு உடைத்தான்.

வீராவேசமாக எழுந்த ஒடப்பு கண்களைக் குறுக்கிக் கூர்மையாக்கிக்கொண்டு, காட்டுப்பாதையில் விருக் விருக் என நடக்க ஆரம்பித்தான். அவனுக்கு இருந்த கோபத்தில் வழியில் ஒரு காட்டுப்பன்னி எதிர்ப்பட்டு இருந்தாலும் ஒரு அப்பு அப்பி சாவடித்து இருப்பான். மனிதர்களிடம்தானே நாகரீகமாக நடந்து தொலைய வேண்டியிருக்கிறது.

அந்த இரவிலும் குளிரிலும் ஒடப்புவுக்கு வியர்க்க ஆரம்பித்தது. இதையெல்லாம் தெரிந்து கதையில் சொல்ல வேண்டுமென்பதற்காக மாயை மனிதன் பின்னாலேயே இருளோடு இருளாக, இருளில் கலந்த உருவமாக இருளில் ஊடுருவி வந்து கொண்டிருந்தான்.

ஒடப்பு கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தோள்களைத் தூக்கி வைத்துக்கொண்டு நடந்து இருப்பான். அவனுக்கு பயம் இருந்து கொண்டேயிருந்தது அவன் நடையில் தெரிந்தது. விநோதமான சத்தம் கேட்டால், அப்படியே ஒடுங்கி உட்கார்ந்து கொள்வான். வழியில் ஒரு சமாதி எதிர்ப்பட்டபோது , கண்களை மூடிக்கொண்டு அதைக் கடந்தான். அவனுக்குப் பின்னால் சத்தம் கேட்டால் நடையை ஓட்டமாக மாற்றினான். அதே நேரத்தில் பாதி பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டே முன்னால் ஓடினான்.

காட்டு வழி முடிந்து ஒரு மண் சாலை தென்பட்டதும் ஆசுவாசம் அடைந்தான். இன்னும் சற்று தூரம் நடந்ததும் ஒரு கோயில் வந்தது. சுமாரான சிறிய கோவில்தான். ஆனால் பூட்டை ஒரு அன்பர் அன்பளிப்பு வழங்கி அந்தப் பூட்டில் நீலகலரில் இரண்டு ஆங்கில எழுத்துக்களையும் போட்டுக் கொடுத்து விட்டதால் அந்தக் கோயிலை பூட்டி இருந்தார்கள். திடீரென்று சாமி காட்சியளித்து விட்டால், பக்தகோடிகள் மிரண்டு சுவரேறி குதித்து ஒடுவதற்கு  ஏற்றவாறு அந்தக் கோயிலைச் சுற்றி சுவர் கட்டியிருந்தார்கள். ஒடப்பு அந்த மதில் சுவர் மேல் ஏறிக்  குதித்து சாமியின் மேல் பாரத்தைப் போட்டான். மனதில் கொஞ்சம் தெம்பு வந்தது.

பையை தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தான். இது கொசுக்கள் சாமி தரிசனம் செய்து பஜனை பாடும் நேரம் போல. எக்கச்சக்க கொசுக்கள்  செய்த சாமி பிரார்த்தனை ஒடப்புவை மிகவும் இம்சித்தது. கொஞ்சம் போதை, பயம், நடந்து வந்த களைப்பு மூன்றும் சேர்ந்து ஒடப்புவுக்கு ஒரு அரை மயக்கத்தைக் கொடுத்தது. சாப்பிடாததால் வயிறு பசித்தது. வயிற்றைக் குறுக்கி படுத்துக்கொண்டான்.

இப்படி ஏதேதோ செய்து கொண்டிருக்கையில் இன்னொரு உருவம் சுவரேறிக் குதித்து நடந்து வந்தது. சத்தம் கேட்டு விழித்த ஒடப்பு, அது மனிதன்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஆசுவாசமானான். அந்த  உருவம் ஒடப்புவுக்கு ஒரு ஹாய் கூட சொல்லாமல் அது பாட்டுக்கும் படுத்து சுருண்டு கொண்டது.

ஒடப்பு மீண்டும் சுவரேறிக் குதித்து டவுனை நோக்கி நடக்கலானான். மொத்தமாக 13 கிலோ மீட்டர் நடந்து டவுனை அடைந்தான். விடிவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. ஒரு ஆட்டோ சத்தம் கேட்க கை காட்டி நிறுத்தி, எதாச்சும் ஒரு லாட்ஜுக்கு விடு என்றான் ஒடப்பு.

முன்னூறு மீட்டரை ஒரு  நிமிடத்தில் கடந்து லாட்ஜ் வாசலில் நிறுத்திய ஆட்டோ டிரைவர் 80 ரூபாய் கேட்டார். ரூமுக்குள் படுத்த ஒடப்பு எரிச்சலில் தூக்கம் வராமல் தவித்தான். தன் காலை தானே அமுக்கிக்கொண்டு தூங்கிப்போனான்.

ஒரு வீடு… ஒரு இடம் என்பது ஒரு அதிகாரம். ஒருவருடைய இடத்தில் இருக்கும்போது , சண்டை வந்தால் என்ன வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளலாம். அதிலும் ஒரு நேக்கு இருக்க வேண்டும். எதிராளி மனம், அவனுடைய இடம் என்பதால்தானே இப்படித் திட்டுகிறான் என்று யோசிக்க விடாத அளவுக்கு சண்டையும் வார்த்தைப் பிரயோகமும் இருக்க வேண்டும். இன்று நடந்த விவாதச் சண்டையில் , போதையும் சேர்ந்து கொள்ள, ஒடப்பு,  சூம்பி தன்னை “கெட் அவுட் “ என்று சொன்னதாக எடுத்துக் கொண்டான். “சூம்பியினுடைய இடம்” என்ற அதிகாரத்தை சூம்பி பயன்படுத்தியதை ஒடப்புவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்த “இடம்” என்னும் அதிகாரத்தைக் காட்டாமல் இருக்கும் சில அப்பாவிகளும் உண்டு. அதை அனுகூலமாக எடுத்துக்கொண்டு நாறடித்து விட்டுச் செல்பவர்களும் உண்டு. இந்த விஷயத்தை மிகவும் நாசுக்காகவும் நுணுக்கமாகவும்தான் அணுக வேண்டும்.

ஒடப்பு தூங்கிய அதே நேரத்தில் சூம்பி கண் விழித்தான். எந்த அதிர்ச்சியும் அடையாமல் பைக்கின் விளக்கை முதலில் அணைத்து விட்டு, சாவியை எடுத்துக்கொண்டு அறையில் வந்து படுத்தான்.

காலையில் பகபகாவும் சூம்பியும் ஆரவாரமாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள். மாயை மனிதன் கொஞ்சம் அசந்து தூங்கி விட்டதால், இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. பகபகாவை சூம்பி ரயில் நிலையத்துக்குச் சென்று அழைத்துக்கொண்டு வந்து விட்டான் என்பது மட்டும் புரிந்தது.

மதிய உணவை ஒரு மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு, தெரிந்தவர் ஒருவரின் தோப்பில் இருக்கும் போர் செட்டில் குளிப்பதாகத் திட்டம் போல் இருக்கிறது.

சூம்பியும் பகபகாவும் வாங்கி வந்த இட்லி, பொங்கல், பூரி, தோசை என கலந்து கட்டி காலை உணவை முடித்து விட்டு, பகபகாவும் சூம்பியும் பேசிக்கொண்டு இருந்தது இந்தக் கதைக்குத் தேவையில்லை. சூம்பியும் பகபகாவும் மெஸ்ஸுக்குக் கிளம்பினார்கள். கூடவே மாய மனிதனும்.

மெஸ் இன்னும் திறக்கவில்லை. கீத்துக்கொட்டாய் போட்ட மெஸ். கதவைத்தட்டி திறந்தார்கள். கறி கொதித்துக்கொண்டு  இருந்தது. 

“வாசனை எப்டி மாப்ள?” சூம்பி பகபகாவைக் கேட்டான்.

பகபகா அதைக் கண்டு கொள்ளாமல் அக்குளைச் சொறிந்து கொண்டு இருக்கையில் ,

“ங்கோத்தா சுன்னி, வாசனை எப்டிடா மாப்ள?” என்று குரலை உயர்த்தினான் சூம்பி .

“ம்ம் ம்ம்“ என்றபடி பகபகா அங்கு வந்த ஒரு நாயைக் கொஞ்ச ஆரம்பித்தான்.

“இதான் மாப்ள ராஜபாளையம், எப்டி இருக்கான் பாரு. கவ்விடுவான் கவ்வி. வேட்டைக்குப் போனா, ஒரு மானையே கவ்வீழுத்துட்டு வந்து குடுத்துடுவான்“ என்று சூம்பி ராஜபாளையத்தின் பெருமையைப் பேசிக்கொண்டு இருக்கையில், மெஸ் அண்ணன் வந்து, இது சிப்பிப்பாறைடா சூம்பி என இரண்டு வார்த்தைகளை உதிர்த்து விட்டு, வெங்காயத்தை அள்ளிச் சென்றார்.

அதற்குள் ஒரு வேலையாள் சரக்கு வாங்கி வந்து கொடுத்தான். சூம்பியும் பகபகாவும் குடிக்க ஆரம்பித்தனர்.

அடுத்த ரவுண்டுக்கு பாட்டில் தண்ணீர் வேண்டாம் எனச் சொல்லி விட்டு, ஒரு குவளையில் தண்ணீர் கேட்டான் சூம்பி. குவளைத் தண்ணீர் வந்தது. ஒரு மடக்கு தண்ணீரைக் குடித்து விட்டு, பகபகாவைக் குடிக்கச் சொன்னான்.

பகபகா ஒரு மடக்கு தண்ணீர் குடித்ததும்,

“எப்டி?“ என்று கேட்டான் சூம்பி.

பகபகா தலை மட்டும் ஆட்டியதும் “தண்ணி எப்டிடா சுன்னி?” என்றான் சூம்பி மறுபடியும்.

“நல்லாருக்கு மச்சான்.”

“டேய் எங்கூரு தண்ணிடா, தேன் மாதிரி இருக்கும்டா, தண்ணி எப்ட்ர்ரா கூதி?”

“ஓக்கே மச்சான்.“

“அடிக் கண்டார ஓழி, தண்ணிடா, அமிர்தம்டா புண்டய், தண்ணி எப்ட்ர்ரா?”

“போடாங் மொட்ட சுன்னி, தண்ணி தண்ணி மாதிரிதான்டா இருக்கும், ங்கொப்பன் சுன்னி மாதிரியாடா இருக்கும்?”

“டேய் தண்ணிடா, குடிச்சிப் பார்ரா, தம்பி இன்னொரு கொவள தண்ணி கொண்டா, தண்ணிடா, எங்கூரு தண்ணிடா, இந்த மாதிரி தண்ணிய ஒலகத்துல எங்கயும் குடிச்சி இருக்க மாட்ட, தண்ணி மாப்ள….சுன்னிக்கூதி தண்ணிடா…“

இப்படியே தண்ணிடா சுன்னிடா என நான்கு ரவுண்டுகள் ஓடியும் சாப்பாடு தயாராகவில்லை.

சோறு மட்டும் இன்னும் தயாராக வில்லை என மெஸ் அண்ணன் தகவல் சொன்னார். சமையல் அங்கேயே  நடந்து கொண்டு இருப்பதால், மெஸ்ஸுக்குள் புகையும் வலம் வந்து கொண்டு இருந்தது. கறிக்குழம்பு வாசனையும், அடுப்புப் புகையும், மதுவின் வாசனையும் கலந்து ஒரு விசித்திரமான சூழலை அந்த இடத்தில் உருவாக்கி இருந்தது. இதற்கு இடையில் சூம்பி சிகரட் புகையையும் விட்டு அந்த இடத்துக்கு மேலும் மெருகூட்டினான்.

காலைத் தொங்க விட்டுக்கொண்டு அமர்ந்திருந்த கல் பெஞ்சிலேயே சப்ளாங்கோல் போட்டு உட்கார்ந்த சூம்பி, கறியை மட்டும் எடுத்துட்டு வாங்கண்ணே என்றான்.

ஒரு தட்டில் கறி வந்தது.

“மாப்ள, கறி.“

கறி ஆவி விட்டுக்கொண்டு இருந்தது.

பகபகா கறியைப் பார்த்தான்.

“மாப்ள, கறிடா.“

“சரிடா.“

“கறி எப்டி?“

“தோ சாப்டு பாக்கறேன் மச்சான், சூடா இருக்கு.“

“டேய் கறிடா, அண்ணன் சமைச்சி குடுத்து இருக்கார்ரா, அப்படியே கறி மாப்ள, கறி.“

பகபகா, சூடான கறியைத் தொட்டு, ஒரு சின்ன கறியை தனியாக விலக்கி, தூக்கித் தூக்கி தட்டிலேயே போட்டு ஆற வைத்துக்கொண்டு இருக்கையில், “மாப்ள கறி எப்டி?” என்றான் சூம்பி.

இப்போது சூம்பியின் முகம் பகபகாவின் முகத்துக்கு நேரே ஐந்து செண்டி மீட்டர் இடைவெளியில் இருந்தது. சூம்பியின் முகம் பரவசத்தில் விரிந்து இருந்தது. கண்கள் தெறித்து வெளியே விழுந்து விடுவது போன்று விரிந்து குதித்து விடத் தயாராக இருந்தது.

எம்பெருமானை திடீரெனக் கண்ட ஆழ்வாரின் பரவசம் அல்லது வாழ்க்கையில் முதன்முதலாய் முழு யோனியை முகத்துக்கு நேரே கண்ட விடலைப் பையனின் பரவச நிலையை ஒத்து இருந்தது சூம்பியின் முகம்.

“இர்ரா சுன்னி, சூடா இருக்குடா புண்டை… தள்ளிப்போடா” என சூம்பியின் முகத்தை இடதுகையால் தள்ளி விட்டான் பகபகா.

ஒரு வழியாக, ஒரு சின்ன கறியை எடுத்து வாய்க்கு எடுத்துப் போகும் பாதி வழியில், மீண்டும் தன் முகத்தை அருகில் கொண்டு வந்த சூம்பி, “கறி எப்டி” என்றான்.

“மச்சான் வாய்ல வச்சிக்கிறேன்டா, வச்சிக்க வுடுடா.“

கொஞ்சமாக முகத்தை விலக்கிக்கொண்ட சூம்பி, பகபகாவின் வாய்க்குக் கறி போவதை உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தான்.

பகபகா வின் வாய்க்குள் கறி புகுந்தது. மேல் பல்லும் கீழ்ப் பல்லும் சந்தித்துக்கொள்வதற்குள், “கறி, கறி மச்சான், கறி எப்டி?“ என்றான் சூம்பி.

பகபகா அதைக் கண்டு கொள்ளாமல், மெல்லமாக மெல்ல ஆரம்பித்தான்.

“மண்டைக்கூ தி, உன்னைத்தான்டா சுன்னி, கறிடா, கறி எப்டி?”

“ம்ம்… நல்லாருக்கு மச்சான்.“

“அடிங் புழுத்தப் புண்டை, எங்கூரு கறிடா, நல்லாருக்குன்னு அசால்ட்டா சொல்ற? கறிடா, கறி எப்ட்ர்ரா என் சுன்னிய்?”

“போடாங்புக, மட்டிப் புண்டை, சூத்து, அதான் நல்லாருக்குன்னு சொல்றேன் இல்ல?”

“அண்ணே , என்னாண்ணே இவன்,கறி நல்லாருக்குன்னு சொல்றான்? கறிடா, பூ மாதிரி இருக்குன்டா, கையால அரைச்ச மசாலாடா, எங்கூரு தண்ணிடா, எங்கூரு செடிகொடியைத் தின்னு வளந்த ஆடுடா… எங்கூரு வெறகுடா, எப்ட்ர்ரா இருக்கு கறி, என்ன ஓழ்த்தக் கூதி?”

“நல்லா டேஸ்டா இருக்கு மச்சான்.“

“டேய், என்னாடா? என்னா? டேஸ்டா இருக்குன்ற? ங்கொய்யால ஓழ்க்க, சாப்புர்ரா, கறிய எடுத்து சாப்புர்ரா, நல்லா சாப்புர்ரா, எப்டி இருக்கு கறி?”

சோறும் வந்து விட, கறிக்குழம்பு , சிக்கன் சுக்கா, மீன் குழம்பு, ஆம்லெட் என ஒவ்வொன்றாக சாப்பிட்டார்கள்.

ஒவ்வொன்றுக்கும் இதே போல, சிக்கன் எப்டி, மீன் எப்டி, ஆம்லெட் எப்டி என சூம்பி சலம்பல் பண்ணிக்கொண்டே, அவனும் சாப்பிட்டு முடித்தான்.

எல்லோரும் கிளம்பி தோப்புக்குச் சென்றார்கள். பம்ப் செட்டில் குளித்து முடித்து அந்த மிகப் பெரிய கிணற்றில் குதிக்கலாம் என விபரீதமான முடிவெடுத்தான் சூம்பி.

யார் தடுத்தும் கேட்காமல் ஆழமான அந்தக் கிணற்றில் குதித்தான். குதிக்கும் போது ஸ்டைலாக கால்களை மடக்கிக்கொண்டான். மடக்கிய கால்களை கைகளால் பிடித்துக்கொண்டு “தொம்க்“ என குதித்து உள்ளே போனான். வெளியே வந்து தலையைத் தூக்கி, “குதிடா சுன்னிப்பயலே“ என்றான் .

பகபகா குதிக்கவில்லை. கிணற்றில் ஆட்டம் போட்டு விட்டு மாலை இந்தக் கதை ஆரம்பித்த காட்டுக்குள் இருக்கும் தோப்புக்குச் சென்றார்கள். போவதற்கு முன்னால் மது, சாப்பாடு என அனைத்தையும் சிறப்பாக வாங்கிக்கொண்டார்கள்.

அதே மாமரத்தின் அடியில் கச்சேரி ஆரம்பித்தது. இப்போது அந்தத் தோப்பின் முதலாளியும் சேர்ந்து கொண்டார். முதலாளிக்கு ஆரம்பத்தில் இருந்தே பகபகாவின் மீது ஒரு ஆர்வம் இருந்தது. பகபகாவின் ஃபேஸ்புக் ப்ரொஃபைலை நோண்டிப் பார்த்து வைத்திருந்தார். பகபகா ஓஷோவின் உன்னத கருத்துக்களை பெண்களைப் படுக்க வைப்பதற்கு செவ்வனே பயன்படுத்தி வருபவன். ஓஷோவின் கருத்துக்களை ஓஷோவே சொல்வதை விட பகபகா சொன்னால் பெண்கள் புளகாங்கிதம் அடைந்து பொத்பொத்தென படுக்கையில் வீழ்ந்து கொண்டிருந்தர்கள். முதலாளிக்கு ஓஷோவைத் தெரியாது. பகபகாவே பகவான் ஓஷோவாகத் தெரிந்தான். பகபகாவைக் கவரும் பொருட்டு என்னென்னவோ செய்து கொண்டிருந்தார் முதலாளி.

கடைசியாக ரொம்ப நேரம் யோசித்து  “ஐ லைக் யூ“ என்றார்.

மூன்று ரவுண்ட் முடிந்தது. இதுவரை சூம்பி ஏனோ அமைதியாகக் குடித்துக்கொண்டு இருந்தான்.

ஏதேதோ உளறிக்கொண்டு இருக்கையில் பாலிடிக்ஸ் வந்தது. முதலாளி காங்கிரஸ்காரர் என்ற தரவு அந்தத் தோப்பில் தெரிய வந்ததும், பகபகா காங்கிரஸ் மீதான தன் அதிருப்தியை வெளியிட்டான்.

முதலாளி அமெரிக்க ரிபப்ளிக்கன் கட்சி அனுதாபி என்றாலும், அந்தக் கட்சியின் மீதான அதிருப்தியை வெளியிடும் மனநிலையில்தான் பகபகா இருந்தான்.

“ஷொல்லுங்க, என்ன பிரச்சனை காங்கிரஸ்ல” என்று கொக்கி போட்டார் முதலாளி.

“இல்லண்ணே” என்று ஆரம்பித்து பகபகா பேசியதை இங்கே சொன்னால், சீத்தாராம் கேசரியே மிரண்டு விடுவார். இருந்தாலும் முதலாளி மிரளவில்லை. முதலாளி பதில் சொல்ல ஆரம்பித்தார்.

சூம்பி துணுக்குற்றான்.

“அண்ணே உங்க காலை பூலா நினைச்சி நக்கறேன், பாலிடிக்ஸ் வேண்டாம்ணே” என்றான்.

“இவம் தீமூகாக்காரன். இவனைப் பத்தி எங்களுக்குத் தெரியும். சுன்னி… நீங்க சொல்லுங்க பகபகா“ என்றார் முதலாளி.

தொடர்ந்து முதலாளி வெளியிட்ட அரசியல் கருத்துக்களால் நிலைகுலைந்து போன சூம்பி, “அண்ணே இவங்க எல்லாம் ஃபேஸ்புக்காரவுங்க, இத மாறில்லாம் பேசினா, வேற மாதிரி எழுதிப்புடுவாங்க“ என்று மன்றாடினான்.

“நோ நோ, ஐ லைக் ஆர்க்யூ வித் பகபகா “ என்று முதலாளி தீவிரம் காட்டினார்.

பகபகாவைப் பார்த்த சூம்பி, “டேய் பகபகா, ஏன்டா ? உன் சுன்னியை ஊம்பட்டுமா? நிறுத்துறியா? உன் காலை நக்கறேன்டா, நான் உன் சூத்துடா, விட்டுர்ரா” என்று புலம்ப ஆரம்பித்ததும்,

“ஹே புண்ட, என்னா இங்க? கூதியை ஆட்டற? பொத்துடா புண்டை“ என  பகபகா தோப்பு அதிர சிரிக்க ஆரம்பித்தான்.

சூம்பி எழுந்து பகபகா காலுக்குக் கீழே பணிந்து, “நக்கட்டுமாடா என் புண்டைச்சுன்னி“என நக்க முற்படுகையில், மனம் கனிந்த பகபகா, அரசியலை விட்டு

“இங்க ஏதாச்சும் அனிமல்ஸ் வருமா” என்று கேட்டான்.

இதுதான் தனக்கான சந்தர்ப்பம் என முடிவெடுத்த முதலாளி, வாங்க காட்றேன் என எழுந்து விட்டார். அவருடைய காரில் அனைவரும் ஏறினார்கள். காட்டு வழியில் கார் ஓட ஆரம்பித்தது.

பின்சீட்டில் சூம்பியும் பகபகாவும் முதலாளியும் இருந்தார்கள்.

பின்வருவன சூம்பியும் பகபகாவும் பேசிக்கொண்டவை. மாயை மனிதனுக்கும் ஒன்றும் புரியவில்லை. அவர்கள் பேசிக்கொண்டதை அப்படியே கொடுக்கிறான்.

சூம்பிதான் ஆரம்பித்தான்.

“யேய் என்னா பெரிய படுக்கு சன்னியா நீ?“

“ஆமாண்டா சுன்னி… போவியா.“

“டேய் டேய்… ங்கோத்தா… என் சுன்னிய்.“

“போடாங் சன்னி.“

“அடிங் லபக்கு கூதி, ஊம்புடா என் சன்னி.“

“ஹேஹ்ஹே ஹே ….மட்டி பண்டை , மூடுடா “

“டேய் சன்னி, என் கூதி… நாறக் கூதி, வாய்ல உட்டு ஆட்டவா?”

“ஹாஹ்ஹா ஹேஹ்ஹே போடங் கேனக் கூதி, பொத்திட்டு வாடா ஆமைக் கூதி.“

“நீல்லாம் என்ன பெரிய சூத்தாங்கொட்டையா? ங்கோத்தா, உன்னை மாதிரி எத்தனை பேரை பாத்திருக்கேன்?  இந்த ஓழ வேலையெல்லாம் காட்டாதே, உன் புண்டை வேலையெல்லாம் உன் கூதியிலயே பொத்தி வச்சிக்கோ.“

“ஹேஹ்ஹே ஹே, வந்துட்டான், லவடா… பொத்துடீ, வல்லார ஓழி…“

“அடிங் ஒக்காள ஓழி, மூடுரா… பெரிய கூதி, ஆட்டிட்டு வந்துட்டான்.”

“பொத்துடா நச்சக் கூதி.“

“சன்னி, என் சன்னி, நீ என்ன பெரிய சன்னியா?”

“ஆமாடா என் சன்னி, லூசுப் புண்டை.“

“எல்லாந் தெரியும்டா, உன் பண்டை படையல் எல்லாம் இங்க வேவாதுடா என் சுன்னி.“

“ஹேஹ்ஹே அடங்குடா நொச்சிக் கூ தி.“

“ஏய், சுன்னிய், என்ன புண்டை? சிதி, ங்கோத்தா, ஓழ்ழ்த்துட்டுப் போவியா?”

“ஆமாடா, ஓழ்த்துட்டுதான் போவோம்….நீ பூளைப் பொத்திட்டு இரு.“

“என் சுன்னி.“

“ஆமா வச்சிக்க உன் சுன்னி.“

“யேய் என் கூதி.“

“ஹேஹ்ஹேஹ்ஹே… கூதியை கண்டு புடிச்சவரு… கூதில தலையை வுட்டு ஆட்டு போ.”

“யேய் சுன்னி, என் புண்டைல்லாம்.. நீல்லாம் பெரிய புண்டையாடா ங்கொம்மால.“

“போடா புழுத்தி உன்னை மாதிரி நூறு புண்டையைப் பாத்திருக்கேன். பெரிய புண்டை ஆட்டிகிட்டு வந்துட்டான்.”

“ஓய், சுன்னி, என் புண்டை மசுரு… என் புண்டை மசுரு தெரியுமா?”

“உன் புண்டை மசுர உன் சூத்துல உட்டு ஆட்டிக்கோ, போடாங், அரிப்புக் கூதி.“

“ஏய் புண்டய்ய்ய்ய், சித்த்தீ, க்க்கூதிடா நீய்ய்ய், சுன்னிய்.“

“ஹ்ஹஹேய் நீ கூதில மூக்க வைக்கிறவன், நான் நாக்கை வைக்கிறவன்.“

“பூளை வக்கினும்டா புண்டை.“

“அதுக்கு ஒனக்கெல்லாம் கூதி வேணும்டா சுன்னி.“

இப்படியே தொடர்ந்து முப்பது நிமிடங்கள் இருவரும் இடைவிடாமல் உரையாடிக்கொண்டு வர, கார் முதலாளியின் வழிகாட்டுதலில் வெவ்வேறு காட்டு வழித்தடங்களில் பயணித்துக்கொண்டு இருந்தது.

அன்றைக்கு என்று பார்த்து ஒரு தெருநாய் கூட கண்ணில் படவில்லை.

முதலாளி ஒரு இடத்தில் நிறுத்து நிறுத்து என் அலறினார். காரை நிறுத்தியதும், காரைத் திருப்பி லைட்டை ஒரு திசையில் அடிக்கச் சொன்னார். எல்லோரும் ஆர்வமாக விளக்கு ஒளியை உமிழும் திசையில் நோக்கினார்கள். ஒன்றும் தெரியவில்லை. முதலாளி காரை விட்டு இறங்கி மெதுவாக, ஜாக்கிரதையாக நடந்து சென்றார். ஒரு இடத்தில் நின்று கொண்டு, சைகையால் பகபகாவை அழைத்தார்.

பகபகா அருகில் சென்றதும், தரையைக் காட்டினார்.

இதுதான் காட்டுப்பன்னி சாணி என்றார்.

நாய்ப்பீ மாதிரி இருக்கேண்ணே என்றான் பகபகா .

நாய்ப்பீ வாசம் நாறும் தம்பீ, காட்டுப்பன்னி சாணி மணக்கும். வண்ணம் வித்தியாசப்படும். நாய்ப்பீ வெட்டை மெல்லீசா இருக்கும். காட்டுப்பன்னி சாணி கொஞ்சம் தாட்டமா விழும் என்று தேர்ந்த பேராசிரியர் போல காட்டுப்பன்னி சாணத்தைப் பற்றி வகுப்பெடுத்தார் முதலாளி.

“நீங்க ஏன் சாணின்னு சொல்றீங்க? பன்னி வெட்டைன்னுதானே சொல்லுவாங்க?” என்று நுட்பமான சந்தேகத்தை எழுப்பினான் பகபகா.

”தம்பி நாட்டுப்பன்னி போடறது வெட்டை. காட்டுப்பன்னி போடறது சாணி” என பதிலடி கொடுத்த முதலாளி ,

கடைசியாக கொஞ்சம் கையில் எடுத்துக்கொண்டு காருக்கு நடந்தார்.

காரில் ஏறி காரில் இருந்தவர்களிடமும் அதைக் காட்டினார்.

இது காட்டுப்பன்னி சாணிதான் என சூம்பியும் உறுதிப்படுத்தினான். மோந்துப் பார்ர்ரா, அட மோந்துப்பார்ரா சூம்பி என சொல்லிக்கொண்டே சூம்பியின் மூக்கில் அப்பி விட்டார் மொதலாளி.

அதான் ஒத்துக்கிடேனேண்ணே என்று பாவமாகச் சொல்லிய சூம்பி, தன் மூக்கை முதலாளியின் தோளிலேயே துடைத்து எடுத்தான்.

கார் மீண்டும் மாமரத்துக்கு வந்தது. நான்காவது ரவுண்ட் ஆரம்பமானது. முதலாளி மீண்டும் பாலிடிக்ஸ் பேச ஆரம்பித்தார். அது மாமரத்தடி பாலிடிக்ஸ் என்பது சூம்பிக்குத் தெரியும். தன் நண்பர்கள் எதிரில் முதலாளி அசிங்கப்படக்கூடாது என சூம்பி விரும்பினான்.

அண்ணே, பாலிடிக்ஸ் வேண்டாம்ணே என கெஞ்ச ஆரம்பித்தான்.

ஏன்டா சுண்ணி, அவரு பேசட்டும்டா என பகபகா ஏற்றி விட்டான்.

முதலாளி நிறைபோதையில், “ஐ லைக் பக பகா, ஐ லைக் திஸ் ஆர்க்யூ” என்றார் மீண்டும்.

“உன் கால்ல வுழறேண்டா பகபகா, வேணாம்டா“ என சூம்பி பாவமாக பகபகாவிடம் சரணடைந்தான்.

“போடா சுன்னி“ என பகபகா தீவிர அரசியல் விவாதத்தில் இறங்கினான். பகபகாவுக்கும் முதலாளிக்கும் சூடு பறந்தது.

“அண்ணே உன் கால நக்கறேண்ணே, பகபகா உன் காலை நாக்காலயே கழுவறேன்டா, வேணான்டா“ என  கெஞ்ச ஆரம்பித்தான் சூம்பி.

இன்னும் இரண்டு ரவுண்டு ஏறியது. எல்லோரும் போதையில் தளும்பினார்கள். விளைந்த நெற்கதிர்கள் காற்றில் ஆடுவது போல ஏகாந்தமாக ஆடிக்கொண்டு இருந்தார்கள்.

கலைஞர், ஜெயலலிதா, ராஜிவ் காந்தி, சோனியா, ராகுல் எல்லாம் மரத்தடி பாலிடிக்ஸில் பொடனி அடி வாங்கிக்கொண்டு இருந்தார்கள்.

காமராஜர் ரேஞ்சுக்கு பாலிடிக்ஸ் பின்னோக்கி சென்றதும், சூம்பி பயத்தில் நடுநடுங்கினான். முதலாளி இருந்த தோதுக்கு நீதிக்கட்சி , முத்துராமலிங்கத் தேவர் என்ற ரேஞ்சுக்கு போகப்போவது கண்கூடாகத் தெரிந்தது.

பகபகா, பாபர், அக்பர், தைமூர் என்று தொடங்கி, யேசு கிறிஸ்துவுக்கு முன்பு இந்த உலக சமூகப் போக்கு என்ன என்ற அளவுக்கு விவாதிக்கத் தெம்பாக இருந்தது அவன் தன்னுடைய குடுவையை கையில் எடுக்கும் தோரணையிலேயே தெரிந்தது.

சூம்பி மிரண்டு போனான்.

“தல, நீங்களாச்சும் சொல்லுங்க“ என்று மாய மனிதனிடம் கெஞ்சும் போது சூம்பியின் உதடுகளில் தெம்பு வற்றி மெல்லிய உதடுகளாகிப் போனதை மாய மனிதன் பார்த்தான்.

இந்த இடுக்கில் , ஒரு ரவுண்டைக் கவிழ்த்த பகபகாவுக்கு இந்த அரசியலைத் தாண்டிய அட்வென்ச்சர் எண்ணம் தோன்றியது.

“என்னாண்ணே, அனிமல்ஸ் காட்டறேன்னு சாணியைக் காட்டி கூட்டியாந்துட்டீங்க?”என திடீரென்று பகபகா கேட்டதும்,

துள்ளி எழுந்தார் முதலாளி.

“தம்பி, என் கூட வா, இப்ப வா, காட்டுக்குள்ள நடந்து போலாம். எனக்கு இன்னொரு எடம் தெரியும். கொஞ்சம் மலையேறணும், சிறுத்தையே பாக்கலாம். யானை பாக்கலாம் ஓக்கேவா“ என்றார் முதலாளி.

சரேலென எழுந்தான் பகபகா.

“சரக்கும் கிளாசும் எடுத்துக்கலாம். வழியில குடிச்சிட்டே போகலாம்“ என்று சொல்லிய பகபகா சரக்கையும் கிளாசையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்துக்கொண்டான்.

இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.

சூம்பி பதறி எழுந்தான்.

“அண்ணே நீங்களே இப்படி பண்ணலாமாண்ணே? ரிஸ்குண்ணே“ எனக் கதறினான்.

“போடா புண்டச் சூம்பி“ என்றார் முதலாளி.

“டேய் பகபகா, நீயாச்சும் சொல்ரா. உன் கால்ல வுழுவறேன்டா“ எனக் கதறினான் சூம்பி.

இருவரும் மீண்டும் நடக்க ஆரம்பித்தார்கள்.

“பிரச்சனை ஆயிடும்ணே… அண்ணே நீங்களுமா இப்படி ? டேய் பகபகா, ஏன்டா இப்டி? சிக்கல்டா, வேணான்டா.“ இப்படி பலவாறாக புலம்பியபடிக்கு,

சூம்பி பகபகா காலிலேயே விழுந்தான். பகபகா காலைப் பற்றிக்கொண்டான்.

“டேய், உன் காலை நக்கறேன்டா“ எனச் சொல்லி நக்க ஆரம்பித்தான்.

“யேய் சும்மா இர்ரா சுன்னி” என சொல்லியபடி காலை விடுவித்துக்கொண்டு நடக்கலானான் பகபகா.

மொதலாளி ஸ்டைலாக சிகரட் பற்ற வைத்துக்கொண்டு, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு காட்டை நோக்கி நடக்கலானார்.

“அண்ணே, அண்ணே“ என்றபடிக்கு முதலாளி காலையும் முட்டிப்போட்டு பிடித்துக்கொண்டே சூம்பி தடுக்க முயன்றான்.

சூம்பி, இருவர் காலையும் மாறி மாறிப் பற்றிக்கொண்டு பின்னாலேயே அரற்றிக்கொண்டு தொடர்ந்து கொண்டிருந்தான். இருவரும் சூம்பி என்றொரு மனிதனை மாய மனிதனாக நினைத்துக்கொண்டு, அவனைக் கண்டு கொள்ளாமல் காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்து இருந்தார்கள்.

மாயை மனிதனும் கதையைச் சொல்வதற்காக அவர்கள் பின்னால் சென்று கொண்டிருந்தான்.

இன்று மதியம் கிணற்றில் காலை மடக்கிக்கொண்டு குதித்ததால் சூம்பிக்குக் கால் முறிவு ஏற்பட்டு இருந்தது. அது இப்போது போதையில் தெரியவில்லை. இந்தக் கதை முடிந்த மறுநாள் காலை நால்வர் சூம்பியைத் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடப்போகிறார்கள்.

இப்போது மரத்தடியில், ஒருவன் மட்டும் அமர்ந்திருந்தான். அவன் தான் ஒடப்பு.

இவர்கள் இன்று மதியம்  மெஸ்ஸுக்கு செல்வதற்கு முன் ஒடப்பு தங்கியிருந்த லாட்ஜுக்கு சென்றார்கள். சூம்பியையும் பகபகாவையும் பார்த்ததும் ஒடப்பு அறையைக் காலி செய்து கொண்டு எதுவும் பேசாமல் வந்து அமைதியாக காரில் ஏறினான். மெஸ், பம்பு செட், காரில் காட்டு உலா, மரத்தடி பஞ்சாயத்து என அனைத்திலும் கலந்து கொண்டான். ஆனால் அவன் எதுவும் பேசாமல் அமைதியாக குடித்துக்கொண்டு இருந்ததால் கதைக்குள் வரவில்லை.

நாளை சூம்பியைத் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடப்போகும் நால்வரில் ஒருவன் ஒடப்பு. 

——————————————