பிழையில்லாமல் தமிழ் எழுதுவது எப்படி?

என் நண்பர் ராமசேஷனும் நானும் இணைந்து “பிழையில்லாத தமிழ் எழுதுவது எப்படி?” என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறோம். வேறு ஏதாவது வசீகரமான தலைப்பு இருந்தால் நண்பர்கள் சொல்லலாம். (இதுவே இப்போதைய இளவட்டங்கள் என்றால் வேறு ஏதாவது அட்ராக்டிவ் தலைப்பு இருந்தால் சொல்லலாம் என்று எழுதுவார்கள். அட்ராக்டிவ் என்பதற்கு உடனடியாக அவர்களுக்குத் தமிழில் என்ன வார்த்தை என்று ஞாபகம் வராது. யோசிக்கவும் நேரம் இருக்காது. அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு தமிழ்ப் பணி செய்தால் இதுவே அதிக பட்சம்).

இப்போது என் விண்ணப்பம் உங்களுக்கு. தமிழ் இலக்கணத்தில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக எனக்கு எழுதலாம். வாஸ்தவத்தில் இந்த நூலை எழுதுபவர் ராமசேஷன் தான். ஆனால் அவர் தமிழ் கடுந்தமிழாக இருக்கும் என்பதால் நான் அதை எளிமைப்படுத்துகிறேன். அவ்வளவுதான் என் பணி.

கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுதுங்கள்.

charu.nivedita.india@gmail.com