முள்ளம்பன்றிகளின் விடுதி : அய்யனார் விஸ்வநாத்

அய்யனார் விஸ்வநாத்தின் முள்ளம்பன்றிகளின் விடுதி என்ற சிறுகதைத் தொகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் காட்சிப் பிழை என்று ஒரு சிறுகதை உள்ளது. சில வெப்சீரீஸைப் பார்க்கும் போது அதன் த்ரில் தாங்க முடியாமல் எனக்கு நெஞ்சு வலி வந்து விடும். கொஞ்ச நேரம் பார்ப்பதை நிறுத்தி விட்டுத் தொடர்வேன். சிலதைப் பார்க்கவே முடியாது. கடைசியில் பார்த்து விட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்வேன். நெஞ்சு வலி வராது. வாசிக்கும் போது அநேகமாக இப்படி நடப்பதில்லை. காட்சி ரூபக் கலைக்கும் வாசிப்புக்குமான வித்தியாசம் அது என்று நினைக்கிறேன். காட்சிகளில் சாத்தியமாகும் த்ரில்லை எழுத்தில் கொண்டு வருவது கடினம் போல் இருக்கிறது. விதிவிலக்காக மரியோ பர்கஸ் யோசாவின் Neighbourhood என்ற நாவலைப் படிக்கும் போது அப்படி ஆனது. தொடர்ந்து வாசிக்க முடியாமல் நெஞ்சு வலித்தது. அது தந்த த்ரில்லை என்னால் தாங்க முடியவில்லை. ஒரு கோடீஸ்வரனைக் கொண்டு போய் கொலைக் குற்றத்தில் சிறையில் தள்ளி விடுவார்கள். பெரூ போன்ற தென்னமெரிக்க நாடுகளின் சிறையில் பணக்காரர்களுக்குத் தனி மரியாதை கிடையாது. ஒருத்தன் என்னை ஊம்பி விடு என்பான். இவனோ அம்பானி மாதிரி. ஆமாம். அம்பானி மாதிரிதான். மிரண்டு விடுவான். உடனே அந்தக் கைதி டேய் சுன்னி, உன் அதிர்ஷ்டம் என்னிடம் மாட்டினாய், நான் தான் இந்தச் சிறையின் தாதா. எல்லாரும் என் அடிமைகள் இங்கே. வேறு எவனிடமாவது நீ மாட்டியிருந்தால் உன்னை வரிசையில் நின்று சூத்தடித்திருப்பான்கள். உன் சூத்து கிழிவது மட்டுமல்ல; இங்கே உள்ள பல தேவடியாப் பயல்களுக்கு எயிட்ஸ் வேறு இருக்கிறது. எயிட்ஸோடுதான் வெளியே போவாய். ஊம்புடா என்னை, என் மனம் மாறுவதற்குள் என்பான். இவனும் அதைச் செய்வான்.

இது இரண்டாவது அத்தியாயத்திலேயே வருமா, ஐயோ இந்தக் கோடீஸ்வரனின் கதி என்ன ஆகும் என்று நினைத்து என் மனம் நடுங்கி, நெஞ்சு அதிர்ந்து நெஞ்சு வலி. உடனே கடைசி அத்தியாயத்தைப் படித்து விட்டு மீண்டும் ஆரம்பித்தேன்.

அப்படித்தான் காட்சிப் பிழையிலும் மனமும் நெஞ்சும் நடுங்கியது. நல்லவேளை, சிறுகதை என்பதால் ரொம்ப சீக்கிரத்தில் முடிவு தெரிந்து விட்டது.

தொகுப்பு வரும் போது இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள்.