டிசம்பர் 18 – என் பிறந்த நாளை நண்பர்கள் வருண், கருப்பசாமி, செல்வகுமார் கணேஷ், பிரகாஷ், ரமேஷ், ஸ்ரீதர், சாம்நாதன், முருகன் கடற்கரை, கணேஷ் அன்பு, கௌரி ஷங்கர் (அதிமுக), சந்த்ரு, பாய், வெங்கடேஷ், தணிகை, டிமிட்ரி இவ்னோவ்ஸ்கி, டேய் மனோ, மனாசே ராஜா மற்றும் பல நண்பர்களோடு முதலில் வத்தலக் குண்டுவிலும் பிறகு கொடைக்கானலிலும் கொண்டாடினேன். இது பற்றி பின்னர் விரிவாக எழுத இருக்கிறேன். டிசம்பர் 18 அன்று எனக்கு வாழ்த்து அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. சிரமம் பார்க்காமல் நேரில் வந்து கலந்து கொண்ட நண்பர்களுக்கு இரட்டிப்பு நன்றி. மேலே உள்ள பட்டியலை ஒன்றுக்கு இரண்டு முறை படித்துப் பார்த்தேன். இப்போதுதான் தெரிந்தது அராத்து பெயர் விட்டு விட்டது. ஸாரி. வரும் போது கொடைக்கானலிலிருந்து சென்னை வரை தனியாளாக கார் ஓட்டி வந்தார். பதினோரு மணி நேரம். போகும் போது செல்வகுமார் கொஞ்ச நேரம் கார் ஓட்டி அராத்துவுக்கு உதவி செய்தார். எல்லோருக்கும் நன்றி.
டிசம்பர் 19 – எனது ஆசான்களில் ஒருவரான ஜான் ஜெனே – Jean Genet – பிறந்த நாள். அவர் குறித்து நான் எழுதிய கட்டுரை இன்றைய – 20.12.2013 – தி இந்து நாளிதழில் வெளியாகி உள்ளது. பார்க்கவும்.
நியூஸ் சைரன் வார இதழில் வழக்கமான என் பத்தி வெளியாகி உள்ளது. இந்த வாரம் ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றி எழுதியிருக்கிறேன்.
Comments are closed.