ஒரு மன்னிப்பு (1)

நாவலைப் பற்றிப் பேச ஒப்புக் கொண்ட போது நாவலைப் படித்திருக்கவில்லை. படித்த பிறகு பேச ஒப்பவில்லை மனம். ஏனென்றால் நண்பர் என்பதற்காக என் மனசாட்சிக்குத் துரோகம் செய்து பாராட்ட  முடியாது.  மேலும், ஒரு புத்தக வெளியீட்டு விழாவின் போது வந்து அந்த நாவலைப் பற்றித் திட்டிப் பேசுவதை விட, ஒப்புக் கொண்ட பிறகு மறுத்தேன் என்ற கெட்ட பெயர் வந்தால் பரவாயில்லை என்று தோன்றியது. இது அந்த இளம் எழுத்தாளர் மீது நான் காட்டும் அன்பு. வேறு ஆளாக இருந்தால் மேடை கிடைத்து விட்டது என்ற ஹோதாவில் வெளியீட்டு விழாவில் வந்து திட்டுவார்கள். அந்தக் காரியத்தை என் வாழ்வில் இனி ஒருபோதும் செய்ய மாட்டேன். பிடிக்காவிட்டால் ஒதுங்கிக் கொள்வேன். நண்பர்களுக்கு இதனால் ஏதேனும் சங்கடம் நேர்ந்திருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் புத்தக வெளியீட்டு விழாவில் பேச ஒப்புக் கொள்வதற்கு முன் அந்தப் புத்தகத்தைப் படித்து விட்டே முடிவு செய்ய வேண்டும், முடிவு சொல்ல வேண்டும் என்ற பாடத்தை இன்று கற்றுக் கொண்டேன்…

Comments are closed.