இன்று காலை பத்தரை மணிக்கு மதிமுகம் நேர்காணல்

இந்தப் புத்தக விழாவின் காரணமாக எதற்குமே நேரமில்லாமல் இருக்கிறது. முதல் விஷயம் முதலில். இப்போது காலை பத்தரை மணிக்கு மதிமுகம் தொலைக்காட்சியில் என்னுடைய நேர்காணல் ஒளிபரப்பாகிறது. அபிநயா ஸ்ரீகாந்த் எடுத்த நேர்காணல். அபிநயா அனுப்பிய செய்தியில் நேர்காணலைப் பார்க்கச் சொல்லியிருந்தார். எனக்கு என் உடல்மொழியோ குரலோ பேசும் முறையோ எதுவுமே பிடிக்காது. இதுவரை என் நேர்காணல் எதையுமே நான் பார்த்ததில்லை. என் அழகான முகத்தையும் வேறு சில அவயவங்களையும் என் எழுத்தையும் தவிர என் சம்பந்தப்பட்ட எதுவுமே எனக்குப் பிடிக்காது. ஆனால் நீங்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இன்று காலை பத்தரை. மதிமுகம் தொலைக்காட்சி.