தேவையான நூல் பட்டியல்

சுமாராக ஒரு பத்து நண்பர்கள் எனக்கு அமெரிக்காவிலிருந்து புத்தகங்கள் வாங்கி அனுப்பி வருகிறார்கள். அவர்களின் புத்தக பட்ஜெட் தீர்ந்து விட்டதா இன்னும் இருக்கிறதா என்று தெரியாத நிலையில் இதை ப்ளாகிலேயே எழுதி விடுகிறேன். கீழ்க்கண்ட புத்தகங்கள் எனக்குத் தேவைப்படுகின்றன. உடனடியாக இவற்றை ஆர்டர் செய்து விடாமல் எனக்கு எழுதிக் கேட்டு விட்டு பிறகு ஆர்டர் செய்தல் நலம். ஏனென்றால், எழுதாமல் ஆர்டர் செய்தால் ஒரே புத்தகத்தை பலரும் ஆர்டர் செய்யக் கூடிய சாத்தியம் இருக்கிறது.

அந்தோனியோ ஸ்கார்மேத்தா (Antonio Skarmeta) என்ற ஒரு சீலே எழுத்தாளர். இவரது I Dreamt the Snow Was Burning என்ற நாவல் 1985-இல் வெளிவந்தது. பதிப்பித்தது Readers International. இந்த நாவலின் கதையோட்டத்தினூடேயே கால்பந்தாட்ட வர்ணனையும் வருகிறது. இந்த நாவலைப் படித்து 35 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் இதன் பக்கங்களையும் கதையையும் என்னால் மறக்க முடியவில்லை. இன்னும் முப்பது ஆண்டுகள் கழித்தாலும் என்னால் மறக்க முடியாத பக்கங்களைக் கொண்டது I Dreamt the Snow Was Burning. சந்த்தியாகோவில் ஸ்கார்மேத்தா பற்றி விசாரித்தேன். முந்தின தினம்தான் ஸ்கார்மேத்தாவும் சீலே அதிபரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் செய்தித்தாளில் வந்திருந்ததை என் வழிகாட்டி ரொபர்த்தோ காட்டினார். அங்கே எழுத்தாளனுக்கான இடம் அது.

ரீடர்ஸ் இண்டர்நேஷனல் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இந்தப் பதிப்பகம் எந்தெந்த நூல்களைப் பதிப்பிக்க எடுக்கும் என்றால், (1) அந்த நூல் அது எழுதப்பட்ட தேசத்தில் ஒரு கட்டத்திலாவது தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது, அந்த எழுத்தாளருக்கு அரசின் அல்லது சமூகத்தின் அச்சுறுத்தல் இருக்க வேண்டும். (2) பொதுவாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்களை வெளியிடுவதில்லை. (3) பிற மொழிகளிலிருந்தே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும். (4) அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் நூல்கள் ஏற்கனவே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கக் கூடாது. (5) இந்த நான்கு ஷரத்துக்களுக்கும் பொருந்தி வரக் கூடிய தமிழ் எழுத்தாளர் நம்முடைய விபரீத ராஜ யோக பெருமாள் முருகன். ஆனால் முருகனை ரீடர்ஸ் இண்டர்நேஷனல் வெளியிடாது. ஏனென்றால், ஐந்தாவது ஷரத்தில் முருகன் அடிபட்டு விடுவார். அந்த ஷரத்தின்படி, புத்தகம் இலக்கியத் தரம் கொண்டதாக இருக்க வேண்டும்.

ரீடர்ஸ் இண்டர்நேஷனல் பதிப்பகம் 1984-இல் தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் நான் இதன் சந்தாதாரராக இருந்தேன். ஆண்டுக்கு நான்கு நூல்கள் வெளிவரும். 1984-இல் வெளிவந்த முதல் நூல், To Bury Our Fathers என்ற நாவல். இதை எழுதியவர் நிகாராகுவாவைச் சேர்ந்த பாதிரியார் செர்ஜியோ ராமிரெஸ் (Sergio Ramirez). இந்த நூலின் தகுதிகள்: உயர்தர இலக்கியத் தரம். செர்ஜியோ ராமிரெஸ் நிகாராகுவாவின் சாந்தினிஸ்தா புரட்சியாளர்களில் ஒருவர். அதனால் நிகாராகுவா சர்வாதிகாரியால் கொல்லப்படும் ஆபத்து இருந்ததால் தலைமறைவாக இருந்தார்.

ரீடர்ஸ் இண்டர்நேஷனல் இதுவரை ஐம்பது புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டிருக்கிறது. இதில் சில நூல்கள் எனக்குத் தேவை. இப்போது ஏதோ சலுகை விலை அறிவித்திருக்கிறார்கள். வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்தப் பதிப்பகத்தைப் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இப்போதைக்கு எனக்காக நீங்கள் வாங்கக் கூடிய நூல்களின் பட்டியலை கீழே தருகிறேன். ஆனால் ஆர்டர் செய்வதற்கு முன் எனக்கு ஒரு வார்த்தை எழுதுங்கள். எனக்கே நேரடியாகக் கிடைக்கும்படி அனுப்ப வேண்டாம். சுரைக்காய் கால் பணம் சுமைகூலி முக்கால் பணம் ஆகி விடும். அங்கிருந்து அடிக்கடி நண்பர்கள் இங்கே வருகிறார்கள். கொடுத்து அனுப்பலாம். அமெரிக்கா தவிர யு.கே.வில் வசிக்கும் நண்பர்கள் ஆர்டர் செய்தால் மட்டும் எனக்கு நேரடியாக அனுப்பச் செய்யலாம். பிரிட்டனிலிருந்து இங்கே அடிக்கடி வரக் கூடிய நண்பர்கள் இல்லை. ரீடர்ஸ் இண்டர்நேஷனல் அமெரிக்காவிலிருந்தும் லண்டனிலிருந்தும் இயங்குகிறது.

charu.nivedita.india@gmail.com

Readers International North American Book Service
FAX: 1-318-649-7288
P.O. Box 959,
Columbia LA, 714180-959 USA
Please Send £ Sterling checks drawn on a bank with a UK address to:
Readers International European Book Service
Tel: +44(171)-435-4363
8 Strathray Gardens,
London NW3 4NY Great Britain

புத்தகங்கள் பேப்பர்பேக்காக இருக்கலாம்; ஹார்ட்பவுண்ட் மட்டும்தான் கிடைக்கிறது என்றால் ஹார்ட்பவுண்டுக்குப் போகலாம். பயன்படுத்தப்பட்ட நூலாக இருந்தாலும் பரவாயில்லை.

பட்டியல்:
மேல் விபரங்களை நீங்கள் இந்த இணைப்பில் காணலாம்:
http://www.users.globalnet.co.uk/~readers/orderform.html

1. Castellanos THE NINE GUARDIANS (Mexico) 15 USD
2. Clitandre CATHEDRAL OF THE AUGUST HEAT (Haiti) 13 USD
3. Goma MY CHILDHOOD AT THE GATE OF UNREST (Romania) 11 USD
4. Khorsandi THE AYATOLLAH AND I 5 USD
5. Klima MY MERRY MORNINGS (Czech) 15 USD
6. Lu Wenfu THE GOURMET AND OTHER STORIES(China) 9 USD
7. Makanin BAIZE-COVERED TABLE (Russia) 11 USD
8. THE DEFECTOR (Germany-East) 9 USD
9. Martinez Moreno EL INFIERNO (Uruguay) 9 USD
10. Ramirez STORIES (Nicaragua) 8 USD
11. Ramirez TO BURY OUR FATHERS 12 USD (என்னிடம் இருந்த பிரதி ஏன் இப்போது என்னிடம் இல்லை என்பது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஸீரோ டிகிரியை வாசிக்கவும்.)
12. Robles HAGIOGRAPHY OF NARCISA (Cuba) 13 USD
13. Skarmeta WATCH WHERE THE WOLF IS GOING(Chile) 11 USD
14. Skarmeta WATCH WHERE THE WOLF IS GOING(Chile) 10 USD
15. Torres BLUES FOR A LOST CHILDHOOD (Brazil) 10 USD
16. Torres THE LAND (Brazil) 8 USD
17. Silent close No.6 (http://readersinternational.org/books)
18. The Dancer and the Thief by Antonio Skarmeta (இது ரீடர்ஸ் இண்டர்நேஷனல் புத்தகம் இல்லை. https://www.amazon.com/Dancer-Thief-Novel-Anto…/…/0393333671USERS.GLOBALNET.CO.UKOrder form