ஏ.ஆர். ரஹ்மான் விரும்பிக் கேட்ட என் பேச்சு

”இதனால்தான் நான் இந்து மதத்தை விரும்புகிறேன்” என்ற misleading-ஆன தலைப்பு இருந்ததால்தான் இந்த என்னுடைய பேச்சை இதுநாள் வரை உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்தப் பேச்சில் நான் வழக்கம்போல் சூஃபிகளைப் பற்றியும் இஸ்லாம் பற்றியும் பேசினேன். கூடவே இந்து மதத்தில் உள்ள கருத்துச் சுதந்திரம் பற்றியும் பேசினேன். அதை எடுத்துத் தலைப்பாகப் போட்டு விட்டதால் சற்று குழப்பம். இந்த என்னுடைய பேச்சை சுமார் இரண்டரை லட்சம் பேர் கேட்டிருக்கிறார்கள். இந்தப் பேச்சைக் கேட்டு விட்டுத்தான் ஏ.ஆர். ரஹ்மான் என்னைப் பார்க்க விரும்பினார். சுமார் ஒரு மணி நேரம் பேசினேன். பிரித்துப் பிரித்துப் போட்டிருக்கிறார்கள்.

இதை ஏன் இப்போது இங்கே பகிர்கிறேன் என்றால், இன்று காலை ராகவன் ஒரு விஷயம் சொன்னார். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுஜாதா நினைவு விழாவில் நான் பேசிய பேச்சை நேற்று கேட்டாராம். அழுது விட்டேன் என்று சொன்னார். நான் எப்பேர்ப்பட்டவரோடு பழகிக் கொண்டிருக்கிறேன் என்று இப்போதுதான் தெரிந்தது என்றும் சொன்னார். அதற்கு மேல் பேச்சை மாற்றி விட்டேன். அதேபோல் சென்னை புத்தக விழாவில் நான் பேசியதைக் கேட்ட பலரும் என்னைப் பாராட்டு மழையில் திக்குமுக்காடச் செய்து விட்டார்கள். வேறு இதை எப்படிச் சொல்வது என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. விமர்சனத்தை எதிர்கொள்வது சுலபமாகவும் பாராட்டை எதிர்கொள்வது தர்மசங்கடமாகவும் இருக்கிறது. அவந்திகாவின் ஆன்மீகச் சந்திப்புகளுக்கு வரும் பெண்கள் கூட என் புத்தக விழா பேச்சைக் கேட்டு அழுது விட்டதாகச் சொன்னார்கள். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஓ, நமக்குப் பேசவும் வருகிறதே என்று.

பின்வரும் லிங்குகளில் மூன்று உரைகள் உள்ளன. வரிசைக் கிரமமாகவும் கேட்கலாம். அது இல்லாமல் தனித்தனியாகவும் கேட்கலாம்.

என் எழுத்தைப் போலவே என் பேச்சையும் பலரிடமும் கொண்டு சேர்ப்பதற்கு ராம்ஜியும் காயத்ரியும் உதவி செய்ய வேண்டும்.

https://www.bing.com/videos/search…

Attachments area
Preview YouTube video Himalayas Siddhar | சாரு நிவேதிதா | Charu Nivedita | Writer | 03 | Siddhar Boomi |