அரூ- மின்னிதழ்

அரூ என்ற பெயரில் வெளிவரும் இணைய சஞ்சிகையின் ஏழாவது இதழ் இத்துடன். இதில் கடவுளுடன் ஒரு சுற்றுலா என்ற என்னுடைய ஒரு கட்டுரையும் உண்டு. இது கட்டுரையாக எழுதியது அல்ல. அரூ இதழ் நடத்திய அறிவியல் சிறுகதைகளின் நடுவராக இருந்து நான் தேர்ந்தெடுத்த கதைகளுக்கு எழுதிய முன்னுரை. போட்டிக்கு வந்த கதைகள் 98. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் 15. என்னுடைய முன்னுரை அறிவியல் புனைவு எழுதுபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று அரூ ஆசிரியர் குழு நண்பர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள். இந்தப் போட்டியின் மூலம் அரூ ஆசிரியர் குழுவினர் பாலா, சுஜா, ராம் ஆகியோரின் நட்பு கிடைத்தது எனக்குப் பெரிய சந்தோஷம். மிக உற்சாகமான இளைஞர்கள். நம்பிக்கை அளிக்கும் இளைஞர்கள்.