அராத்து டிப்ஸ்…

அராத்துவின் மீது கேஸ் போடலாமா என்று இருக்கிறேன்.  நீங்கள் எதையாவது யாரிடமிருந்தாவது கற்றால் அதை அக்நாலட்ஜ் பண்ண வேண்டுமா இல்லையா?  அக்நாலட்ஜ் பண்ணாமல் எழுதியிருக்கிறார்.  அநியாயம்.  படித்துப் பாருங்கள்.

மனைவியிடம் மாட்டிக்கொள்ளாமல் கேர்ள் ஃபிரண்டு மெயிண்டெயின் செய்வது எப்படி ?

(படிக்க ரொம்ப சிம்பிளாத்தான் இருக்கும் E=MC*2 போல )

அராத்து

1) நோ எஸ் எம் எஸ்

2) வீட்டில் இருக்கும்போது கால் செய்யவே கூடாது. இப்போ கால் பண்ணலாம் என கவுண்ட் டவுனை ஆரம்பிச்சிட்டு , இனி கால் பண்ணக் கூடாது என முடிச்சிட்டுதான் வீட்டுக்கு போகணும்.

3)ஜிமெயிலிலோ யாஹூ மெயிலிலோ ஈமெயில் ஐடி வச்சிக்க கூடாது. சமயத்தில் சைன் அவுட் பண்ணாம லேப்டாப்பை போட்டுட்டு போனா , மனைவியும் ஜீமெயிலே உபயோகிப்பதால் , அவர் ஜீமெயில் என அடித்ததும் உங்க அக்கவுண்ட் ஓப்பன் ஆகும்.அதனால் ஃபேமஸா இல்லாத மெயில் சர்வர்ல அக்கவுண்ட் வச்சிக்கணும்.

4)நீங்களும் கேர்ள் ஃபிரண்டும் ஒரே அக்கவுண்ட்தான் வச்சிக்கணும். மெயில் அனுப்பிக்கவே கூடாது. மெயில் டைப் பண்ணி டிராஃப்ட்ல சேவ் பண்ணிட்டு வந்துடணும்.

5)ஒவ்வொரு கேர்ள் ஃபிரண்டுக்கும் இது போல தனித்தனியா ஒரு அக்கவுண்ட் மெயிண்டெயின் செய்யணும்.

6)ஃபேஸ்புக்ல ஃபிரண்ட் லிஸ்ட்ல இருந்து தூக்கிடணும். ஃபேஸ்புக்லயும் மெசேஜ் அனுப்பிக்கறதை தவிர்க்கணும்.லைக் கமெண்ட் ஏதும் போடக்கூடாது.

7)அதுக்குன்னு பொண்டாட்டி எதிர்க்க ஓவரா சீன் போடாம , தூய நட்பு மெயிண்டெயின் செய்யும் சுமாரான பெண்களிடமும் ஆண்டிகளிடமும் மனைவி எதிரிலேயே சத்தமாக பேச வேண்டும். உங்கிட்ட்ட பேசணுமாம் , பேசறியாடீ என கேட்டு வெறுப்பேற்ற வேண்டும்.

கேர்ள் ஃபிரண்டு திடீர்னு எமோஷனல் ஆயி , உன் குழந்தையை பாக்கணும் , உன் வீட்டுக்கு வரேன்னு அடம் பிடிப்பா. நீங்களும் உருகி வழிஞ்சி வீட்டுக்கு கூட்டிப்போகக்கூடாது. மனைவி எதிரில் கேர்ள் ஃபிரண்டின் கண்களில் இருந்து வழியும் காதல் காட்டிக்கொடுத்து விடும்.நைஸா குழந்தையை தூக்கிட்டு போயி கேர்ள் ஃபிரண்டு கிட்ட காட்டணும் .குழந்தைகளும் எமகாதகக் குழந்தைகளாக இருப்பதால் , கேர்ள் ஃபிர்ண்டை அங்கம்மா என குழந்தைக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

9)வீடிலிருக்கும்போது எக்காரணத்தைக்கொண்டும் மொட்டை மாடிக்கு போய் குசு குசுவென பேசுவது , ரூம் கதவை சாத்திக்கொண்டு பேசுவது எல்லாம் கூடவே கூடாது.வீட்டுக்கு போனோமா , போனை தூக்கி சோஃபாவுல போட்டுட்டு கவலையே இல்லாம இருப்பது போல இருக்க வேண்டும். எதேனும் கால் வந்தால் கூட , அந்த போனை எடும்மா , யாருன்னு பாரு என தில்லாக கூற வேண்டும்.

10)ஒரே ஒரு கேர்ள் ஃபிரண்டு வைத்திருக்கும் அற்ப ஜீவன்கள் வேண்டுமானல் இன்னொரு போன் உபயோகிப்பார்கள். பல கேர்ள் ஃபிரண்டு வைத்திருப்பவர்கள், அராத்து மேனேஜ்மெண்ட் கான்ஸப்டைத்தான் ஃபாலோ செய்ய வேண்டும்.

11)கேர்ள் ஃபிரண்டு என்னதான் டார்ச்சர் செய்தாலும் , நாமாக சண்டை போட்டு விலகக்கூடாது. சொரணையே இல்லாதது போல மச மச வென இருந்து , கேர்ள் ஃபிரண்டே , ச்சீ போடா என கழட்டி விட்டுப் போவது போல நடந்து கொள்ள வேண்டும்.இல்லையெனில் மனைவியிடம் போட்டுக்கொடுக்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும் விபரங்களுக்கு ,பிராக்டிக்கல் வொர்க்‌ஷாம் ஃபிஷர்மேன் கோவில் ஜனவரி 4 இரவு 10 மணிக்கு நடைபெறும். இன்வஸ்ட்மெண்ட் : 9999 + டாக்ஸ் /ஒரு நபருக்கு.