பூச்சி 108

ஜெபமாலையில் 108 மணிகள் இருக்கும்.  108 இந்திய மரபில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.  இந்திய மரபு என்பது இந்து, பௌத்தம், சமணம்.  சித்தர் மரபில் அண்டமும் பிண்டமும் என்பார்கள் இல்லையா, அண்டம் உங்களுக்குத் தெரியும்.  பிரபஞ்சம்.  பிண்டம் சரீரம்.  அந்த சரீரத்தையும் பிரபஞ்சத்தையும் இணைப்பது சரீரத்தில் உள்ள 108 புள்ளிகள்.  வர்மம், மர்மம் என்றும் சொல்வார்கள்.  சித்தா மற்றும் ஆயுர்வேத வைத்தியத்தின் அடிப்படையும் இதுதான்.  சரீரத்தில் 108 புள்ளிகள் உள்ளன.  தலை முதல் கழுத்து வரை 25, கழுத்து முதல் நாபி வரை 45, நாபியிலிருந்து குதம் வரை 9, கைகள் 14, கால்கள் 15 என்பது கணக்கு. சித்த வைத்தியத்தில் சரீரத்தை வாதம், பித்தம், கபம் என்று பிரிக்கிறார்கள்.   இந்த 108 வர்மப் புள்ளிகளில் ஏதேனும் ஒன்று பாதிக்கப்பட்டாலும் அது நோயின் அறிகுறி. 

சித்தார்த்தனும் காந்த்தகாவும்

சந்தர்ப்பவசமாக பூச்சியின் நூற்றியெட்டாவது அத்தியாயம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பேசுவதாக அமைகிறது.  என் வாசிப்பு அனுபவத்தில் என்னை அதிகமாக பாதித்த ஒரு சம்பவம் என்னவென்றால், அது சித்தார்த்தன் தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்த அன்று நடந்த ஒரு சம்பவம்தான்.  இளவரசன் சில தினங்களாகவே மகிழ்ச்சியாக இல்லை என்பதை கவனிக்கிறான் மன்னன் சுத்தோதனன்.  நிமித்திகன் சொன்னபடி ராஜ்ஜியத்தை விட்டு விட்டுத் துறவியாகப் போய் விடுவானோ என அஞ்சி சித்தார்த்தனைச் சுற்றிலும் ஆடம்பரத்தையும் போகப் பொருட்களையும் குவிக்கிறான்.  சித்தார்த்தனுக்கு அன்றைய தினம் ராஹுலன் பிறந்திருக்கிறான்.  அதைக் கொண்டாடும் விதத்தில் கபிலவஸ்துவில் ஆட்ட பாட்டங்களும் விருந்தும் நடைபெற ஏற்பாடு செய்கிறான் சுத்தோதனன்.  ஆடம்பரம் மிக மிக சித்தார்த்தனின் துயரம் அதிகரிக்க மட்டுமே செய்கிறது.  நள்ளிரவில் அரண்மனையை விட்டுக் கிளம்ப முடிவு செய்து தன் பணியாள் சன்னாவிடம் தன் பிரியத்துக்குரிய வெண்புரவி காந்த்தகாவைத் தயார் செய்யச் சொல்கிறான்.  சொல்லி விட்டு மனைவி யசோதராவின் சயன அறைக்குச் செல்கிறான்.  இன்னும் அவன் குழந்தை ராகுலனைப் பார்த்திருக்கவில்லை.  ஒருமுறை ராகுலனை எடுத்து அணைத்து உச்சி முகர்ந்து விட்டுப் போகலாம் என்று நினைக்கிறான் சித்தார்த்தன்.  ஆனால் ராகுலன் மேல் யசோதராவின் கரம் அணைத்திருக்கிறது.  அதை எடுத்தால் அவள் எழுந்து விடுவாள்.  தன்னுடைய பயணம் அவளால் தடைப்படலாம்.  வெறுமனே ராகுலனின் தலையைத் தடவி விட்டு விட்டுக் கிளம்புகிறான்.   

சன்னாவை அழைத்துக் கொண்டு காந்த்தகாவுடன் அரண்மனையை விட்டு வெளியேறுகிறான் சித்தார்த்தன்.   இதுவரை நாம் பள்ளிப் பாடநூல்களில் படித்திருக்கிறோம். 

இதற்குப் பிறகான ஒரு சம்பவத்தை பௌத்த பிக்குகளின் நூல்களில் கண்டு மிரண்டு போனேன்.  கபிலவஸ்து நகரைத் தாண்டி வந்ததும் அனோமா நதி குறுக்கிடுகிறது.  குதிரையிலிருந்து இறங்கிய சித்தார்த்தன் தன் அணிகலன்களையெல்லாம் கழற்றி சன்னாவிடம் கொடுத்து, காந்த்தகாவை அழைத்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பச் சொல்கிறான்.  காந்த்தகா செல்ல மறுக்கிறது.  அதன் செவிகளில் திரும்பிப் போ என்று சொல்லி விட்டுத் திரும்பிப் பார்க்காமல் போகிறான் சித்தார்த்தன். 

தன் தோழனும் எஜமானனுமான சித்தார்த்தனை இனி ஒருபோதும் பார்க்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட காந்த்தகா அந்த நிமிடமே உயிர் துறக்கிறது.  (பின்னர் அது மனிதப் பிறவி எடுத்து புத்தரிடம் வந்து சேர்ந்து ஒரு பிட்சுவாக மாறுகிறது என்கிறது புத்த கதைகள்). 

என்னுடைய நாய் ஸோரோதான் ஸிஸ்ஸியாக வந்திருக்கிறது என்று நம்பினோம் நானும் அவந்திகாவும்.  அதனால் அதை அந்தப் பிராணிகள் சரணாலயத்துக்கு அனுப்ப வேண்டாம் என்று முடிவு எடுத்திருந்தோம்.  ஆனால் ஸிஸ்ஸி தன் குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறது என்பதை அதன் நடவடிக்கைகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.  நடவடிக்கையே இல்லை.  எந்நேரமும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்பதிலேயே முனைப்பாக இருக்கிறது.  அதனால் கதவைத் திறந்தாலே வெளியே பாய்கிறது.  ஆனால் இந்தக் கொரோனா காலத்தில் வெளியே போய் வரும் பூனைகளுக்கெல்லாம் குடியிருப்புக்கு உள்ளே அனுமதி இல்லை.  அதனால் கீழேயும் விட முடியாது.  24 ஆண்டுகள் நாய்களுக்கான எடுபிடி வேலையும் மூன்று ஆண்டுகள் பூனைகளுக்கான எடுபிடி வேலையும் செய்திருக்கிறேன்.   எனக்குக் கிடைக்கும் நேரத்தில் கணிசமான நேரம் பூனை வளர்ப்புக்குப் போய் விடுகிறது.   66 வயதிலாவது நம்முடைய பிரதான வேலையைப் பார்ப்போம் என்று முடிவு செய்து விட்டேன்.   

நான்கு பூனைகள் சென்று விட்ட நிலையில் இன்று முன்பு போல் இல்லாமல் எழுத நேரம் கிடைக்கும் என்று நினைத்திருந்த நிலையில் காலையில் எட்டரை மணிக்கு வாக்கிங் முடிந்து வீட்டுக்குள் நுழைந்ததும் லக்கி குட்டிக்கு லூஸ் மோஷன்.  உடனே டாக்டருக்கு போன் செய்தேன்.  எடுக்கவில்லை.  இன்னொரு டாக்டருக்கு போன் செய்தேன். எடுக்கவில்லை.  அப்போது மீன் அங்காடியிலிருந்து போன்.  கானாங்கெளுத்தி வந்திருக்கிறது, வேண்டுமா?  குட்டிகள் மீன் சாப்பிட்டு ஒரு மாதம் இருக்கும்.  அரசு அசைவத்துக்குத் தடை போட்டிருந்ததாலும் இந்தக் குட்டிகள் சாப்பிடுகின்ற மூன்று வகையும் (கானாங்கெளுத்தி, சூரை, மத்தி அல்லது கவலை) பல தினங்களாகக் கிடைக்காததாலும் ஒரு மாதம் ஆகி இன்றுதான் போன்.  ஐந்து கிலோ இருந்தது.  ரெண்டு கிலோ போதும் என்றேன்.  இன்று அநேகமாக ஸிஸ்ஸியும் பெல்லாவும் லக்கியும் போய் விடும்.  மீன் வாங்க ஆள் ஏற்பாடு செய்ய மீண்டும் போன்.  அதற்குள் டாக்டரிடமிருந்து போன்.  லூஸ் மோஷனுக்கு மாத்திரை மருந்து கேட்டுக் குறித்துக் கொண்டேன்.  அந்த விபரத்தை அவந்திகாவுக்கு வாட்ஸப் பண்ணினேன்.  வாட்ஸப் பண்ணி என்னப்பா பிரயோஜனம்?  தாளில் எழுதிக் கொடுத்தால்தானே நான் அந்த சீட்டைக் கொடுத்து அனுப்பினேன்.  மீன் வந்தது.  கழுவி ஃப்ரீஸரில் வைத்தேன்.  ஒரு ஐந்தாறு துண்டங்களைக் கொதிக்க வைத்து குட்டிகளுக்குக் கொடுத்தேன்.  இப்படி பாரதம் போல் நீண்டு கொண்டே போனது.  வந்து அமர பனிரண்டு மணி இருக்கும். 

எழுத்தே வாழ்க்கை என்று இருக்கின்ற ஒருவனின் நேரத்தை இப்படி ஆக்குவது ஒரு கடுங்குற்றச் செயல் என்றே நினைக்கிறேன்.  வேறு வழியில்லை. 

இவ்வளவையும் மீறி ஸிஸ்ஸியை வைத்துக் கொண்டிருப்பேன்.  ஆனால் அது வெளியே பாயத் தயாராக இருக்கிறது. 

நான் எழுத்தில் வாழ்கிறேன்.  எழுத்துக்காக வாழ்கிறேன்.  அதைத் தனிமனித உணர்ச்சிகளுக்கும் பாசத்துக்கும் பலியாக்க மாட்டேன்.  இன்று காந்த்தகாவை பலி கொடுத்து விட்டு ஞானம் தேடப் புறப்பட்ட புத்தனை மீண்டும் மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டேன். 

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai